இமெயில் மூலம் வின்வெளியில் அச்சான சாதனம் – 3டிபிரிண்ட்ங் அற்புதம்

தொழில்நுட்பம் வின்னைத்தாண்டி வளர்ந்திருக்கிறது. இதற்கான சமீபத்திய உதாரணம் வின்வெளியில் இருக்கும் வின்வெளி வீரருக்கு சாக்கெட் சாதனம் ஒன்று தேவைப்பட்ட போது நாசா அதற்கான வடிவமைப்பை இங்கிந்திருந்து இமெயில் மூலம் அனுப்பி வைத்து அங்கே அதை முப்பரிமான அச்சில் உருவாக்கி கொள்ள வைத்து வியக்க வைத்திருக்கிறது.
வின்வெளியில் முப்பரிமான அச்சில் உருவாக்கப்பட்ட இந்த முதல் சாதனம் 3டி பிரிண்டிங் என்று சொல்லப்படும் இந்த தொழில்நுட்பம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கான அழகான உதாரணமாக கருதப்படுகிறது.
சாப்ட்வேர் வடிவமைப்பு மூலம் ஒருவொரு அடுக்காக பொருளை அச்சு அசலாக உருவாக்கும் முறையில் 3டி பிரிண்டிங் செயல்படுகிறது. இந்த முப்பரிமான அச்சு முறையின் பயன்பாடு பலதுறைகளில் புரட்சிகரமானதாக அமையும் என கணிக்கப்பட்டுள்ளது.

1-space2
இதற்கு உதாரணமாக அமைவது போல சமீபத்தில் வின்வெளியில் உள்ள சர்வதேச வின்வெளி ஆய்வு மைத்தில் தேவைப்பட்ட பொருளை நாசா இமெயில் மூலம் அனுப்பி வைத்திருக்கிறது. அதாவது அந்த பொருளுக்கான வடிவமைப்பை அனுப்பி அதை வின்வெளியில் முப்பரிமான அச்சில் உருவாக்கி கொள்ள வைத்திருக்கிறது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து வின்வெளி ஆய்வுக்காக சர்வதேச வின்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. வின்வெளி வீரர்கள் ஆய்வு பணிக்காகவும், பராபரிப்பு பணிக்காகவும் இந்த வின்வெளி மையத்திற்கு டூர் அடித்துவிட்டு வருவதுண்டு. குறிப்பிட்ட காலத்திற்கு அங்கேயே வீரர்கள் தங்கி விட்டு வருவார்கள்.
இப்படி வின்வெளியில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு ஏதேனும் பொருள் தேவை என்றால் அதை உடனே அனுப்பி வைத்துவிட முடியாது. அடுத்த முறை வின்வெளிக்கு வின்களத்தை அனுப்பும் போது தான் பொருளை அனுப்பி வைக்க முடியும். ஆக வின்வெளி வீரர் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை.
இனி அந்த கவலை கிடையாது. புதிய பொருள் தேவைப்பட்டால் ஒரு கோரிக்கை வைத்தால் போதும் இக்கிருந்து ஒரு இமெயிலில் அந்த பொருளுக்கான வடிவமைப்பை அனுப்பி விடலாம். அந்த வடிவமைப்பை கொண்டு வின்வெளியில் இருக்கும் 3டி பிரிண்டரில் பொருளை அச்சிட்டு பயன்படுத்திக்கொள்ளலாம்.
இப்படி தான் சமீபத்தில் வின்வெளியில் இருக்கும் பேரி வில்மூர் எனும் வின்வெளி வீரருக்கு சாக்கெட் ரென்ச் எனும் சாதனம் தேவைப்பட்ட போது நாசா அதற்கான சாப்ட்வேர் வடிவமைப்பை இமெயிலில் அனுப்பி வைத்திருக்கிறது. ஏற்கனவே வின்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட 3 டி பிரிண்டர் மூலம் வில்மூர் தனக்கு தேவைப்பட்ட சாக்கெட்டை உருவாக்கி கொண்டு விட்டார். ( ஜிரோ கிராவிட்டியில் செயல்படக்கூடிய பிரத்யேக் பிரிண்டர் இது).
வின்வெளியில் செயல்படும் 3டி பிரிண்ட்ங் சாதனங்களை உருவாக்கும் மேட் இன் ஸ்பேசஸ் நிறுவனம் நாசா கோரிக்கையை ஏற்று இந்த வடிவமைப்பை உருவாக்கி ஜி-கோடு முறையில் அனுப்பி வைத்திருக்கிறது. இது பற்றி நிறுவன இணை நிறுவனர் மைக் சென் விரிவான கட்டுரை ஒன்றை மீடியம் வலைப்பதிவு சேவையில் எழுதியுள்ளார்.
வின்வெளி மையத்தில் இது வரை அச்சிடப்பட்ட 21 பொருட்களை ( மற்ற 20 பொருட்களுக்கான வடிவமைப்பு பிரிண்டருடன் அனுப்ப பட்டன) மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து வின்வெளியில் அச்சிடும் பொருட்களின் தன்மை மற்றும் அவற்றுக்கான மாற்றம் குறித்து மேட் இன் ஸ்பேசஸ் ஆய்வு செய்ய உள்ளதாக சென் குறிப்பிட்டுள்ளார்.
மைக் சென் வலைப்பதிவு: https://medium.com/backchannel/how-we-email-hardware-to-space-7d46eed00c98

—-

விகடன்.காமில் எழுதியது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *