தளம் புதிது: ஆவணப்படங்களை பார்த்து ரசிக்க!
இணையத்தில் ஆவணப்படங்களை பார்த்து ரசிக்க உதவும் இணையதளங்களின் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறது ரோக்கும்னடரிஸ் இணையதளம்.
இந்த தளம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஆவணப்படங்களை பார்த்து ரசிக்க உதவுவதாக கூறுகிறது.
பிபிசி. சேனல்4, நெட்பிளிக்ஸ் ,யூடியூப் மற்றும் விமியோ உள்ளிட்ட தளங்களில் இருந்து ஆவணப்படங்களை தேர்வு செய்து இந்த தளம் பட்டியலிடுகிறது. முகப்பு பக்கத்திலேயே இந்த பட்டியலை பார்க்கலாம். அவற்றில் தேவையானதை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம்.
இப்போதைக்கு பிரிட்டனில் உள்ள ஆவணப்படங்களை மட்டுமே பட்டியலிடுவதாகவும், விரைவில் உலகம் முழுவதும் உள்ள ஆவணப்படங்கள் பட்டியலிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இவற்றில் சிலவற்றை பார்ப்பதில் காப்புரிமை சிக்கல்கள் இருக்கலாம்.
ஆனால் யூடியூப் போன்ற தளங்களில் இருந்து தேர்வு செய்யப்படவற்றை எளிதாக பார்க்கலாம். எப்படி இருந்தாலும் புதிய ஆவணப்படங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கான சிறந்த தளமாக இருக்கிறது.
இமெயில் முகவரியை சமர்பித்து உள்பெட்டியிலும் புதிய ஆவணப்படங்கள் பற்றிய தகவல்களை பெறலாம்.
இணையதள முகவரி: http://rocumentaries.com/
—
செயலி புதிது: புத்தகம் படிக்க உதவும் செயலி
ஸ்மார்ட்போன் தலைமுறையினர் மத்தியில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது என்று சொல்லப்படுவதை அடிக்கடி கேள்விபடுகிறோம். இந்த பிரச்சனைக்கு, ஸ்மார்ட்போன் மூலமே தீர்வு ஒன்றை முன்வைத்திருக்கிறார் ஸ்மார்ட்போன் தலைமுறை இளைஞரான அம்ருத் தேஷ்முக். இவரது தீர்வு புத்தகம் படிக்க உதவும் செயலி.
புக்லெட் எனும் இந்த செயலி மூலம் அவர் வாரம் ஒரு புத்தகத்தின் சுருக்கத்தை வழங்கி வருகிறார். முழு புத்தகத்தையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு அதன் சாரம்சத்தை புரிய வைக்கும் அளவுக்கு இந்த புத்தக சுருக்கம் அமைகிறது. அதே நேரத்தில் வெறும் விமர்சனமாக இல்லாமல், வாசிப்பு அனுபவத்தை வழங்க கூடியதாக இருக்கிறது.
பெஸ்ட் செல்லர் என சொல்லப்படும் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் இருந்து ஒரு புத்தகத்தை தேர்வு செய்து வாசித்து அதன் சுருக்கத்தை அளிக்கிறார் அம்ருத். 20 நிமிடங்களில் படித்துவிடக்கூடியதாக இது அமைந்துள்ளது. பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. சுயசரிதை, சுயமுன்னேற்றம், நிர்வாகவியல் உள்ளிட்ட துறைகளில் புத்தகங்கள் அமைந்துள்ளன. எல்லாமே ஆங்கில புத்தகங்கள்.
வேலைபளு அல்லது சோம்பல் காரணமாக புத்தகங்களை படிக்கும் பழக்கம் குறைந்துவிட்ட நிலையில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த செயலியை அவர் உருவாக்கியுள்ளார்.
புத்தக சுருக்கத்தையும் படிக்க நேரமில்லை என்பவர்களுக்கான அவற்றை ஒலிப்புத்தகமாகவும் வழங்குகிறார்.
மேலும் விவரங்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=com.booklet.app&hl=en
—
வீடியோ புதிது: போட்டோஷாப் பாடங்கள்
வீடியோ பகிர்வு சேவையான யூடியூப்பில் லட்சக்கணக்கில் பார்க்கப்பட்ட வீடியோக்களும், ஆயிரக்கணக்கில் உறுப்பினர்களை கொண்ட சேனல்களும் இருக்கின்றன. ஆனால் இப்படி அமோக ஆதரவு பெற்ற சேனல்களை தான் கவனிக்க வேண்டும் என்றில்லை. அதிக உறுப்பினர்களின் ஆதரவு பெறாத சேனல்களிலும் கூட நல்ல வீடியோக்கள் இருக்கலாம்.
சமூக தளமான ரெட்டிட் பயனாளி ஒருவர் இத்தகைய வீடியோ சேனல் ஒன்றை அடையாளம் காட்டியுள்ளது. கிறிஸ்டினா கிரேமரின் கிரேசி போட்டோஷாப் வீடியோ டுடோரியல் எனும் அந்த சேனலில் மொத்தமே ஏழு வீடியோக்கள் தான் இருக்கின்றன. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் புதுப்பிக்கப்படாமல் இருக்கிறது,’
எனினும் அதில் உள்ள வீடியோக்கள் புகைப்படங்களை போட்டோஷாப் செய்வது தொடர்பாக அருமையான விளக்கங்களை கொண்டிருப்பதாக ரெட்டிட் பயனாளி கூறியிருக்கிறார்.
புகைப்படங்களை திருத்துவது தொடர்பான நுட்பங்களை தேடிக்கொண்டிருந்த போது இந்த சேனலில் உள்ள வீடியோக்களில் தனக்கான பதில் கிடைத்ததாக அந்த பயனாளி குறிப்பிட்டுள்ளதை பெட்டாபிக்சல் தளம் அடையாளம் காட்டியுள்ளது.
ரெட்டிட் பயனாளியின் பரிந்துரை சரிதானா என நீங்களே சோதித்துப்பார்த்துக்கொள்ளலாம்;https://www.youtube.com/channel/UCZIcebBcU81BWJLrNA3Yz3g