தமிழ் இந்து இணைய பதிப்பின் ஆ’வலை’ வீசுவோம் தொடரில், தகவல்களை தேடுவது போல குறிச்சொற்களை கொண்டு தேடும் வழியை நாடாமல், புகைப்படங்களை புகைப்படங்கள் கொண்டே தேடும் தலைகீழ் பட தேடியந்திரங்கள் பற்றி எழுதியிருந்தேன். – இணைப்பு இங்கே:http://bit.ly/2ezEVtk
இந்த கட்டுரையில் முக்கியமான உருவப்பட தேடியந்திரங்களையும் குறிப்பிட்டிருந்தேன். இந்த பட்டியலில் விடுபட்ட உருவப்பட தேடியந்திரங்கள் சில இருக்கின்றன. அவற்றில் இன்கோக்னாவும் ஒன்று.
இன்கோக்னா.காம் குறிச்சொற்களை கொண்டு தேடாமல் உருவப்படங்களை கொண்டு படங்களை தேடுகிறது. படங்கள் தொடர்பான குறிப்புகளை நாடாமல், அவற்றில் உள்ள வடிவங்களை கொண்டு இது தொடர்புடைய படங்களை தேடித்தருகிறது. இதில் இரண்டு விதமாக தேடலாம். ஒன்று முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி படங்களில் ஒன்றை தேர்வு செய்து தொடர்புடைய படங்களை தேடலாம். அதில் தோன்றும் பட்டியலில் தேவையான படத்தை கிளிக் செய்து தொடர்புடைய படங்களை தேட்லாம். இப்படியே தேடலை தொடரலாம்.
அல்லது, தேடல் கட்டத்தில் ஏதேனும் குறிப்புகளை டைப் செய்து தொடர்புடைய படங்களை தேடலாம். அந்த பட்டியலில் இடம்பெறும் படங்களில் ஒவ்வொன்றாக கிளிக் செய்தும் தேடலாம்.
ஆனால், தலைகீழ் உருவப்பட்ட தேடல் ராஜாவான டைனிஐ தேடிய்ந்திரம் போல புகைப்படத்தை சமர்பித்து தேடும் வசதி இல்லை.
ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் என்றெல்லாம் படங்கள் தோன்றாமல் அளவான எண்ணிக்கையில் தான் படங்கள் வந்து நிற்கின்றன. இந்த வரம்பே சில நேரங்களில் வசதியாக இருக்கலாம். பட்டியலில் உள்ள படங்களை மூலப்பக்கத்திற்கு செல்வது மற்றும் அவற்றின் முழு அளவை பார்க்கும் வசதி இருக்கிறது.
உருவம் சார்ந்த தேடலில் கொஞ்சம் பழைய தேடியந்திரம். கனடாவில் உள்ள ஓட்டாவா பல்கலையில் உண்டாக்கப்பட்ட தேடல் நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழமான தேடியந்திரம் என்று சொல்ல முடியாது ஆனால் அதனளவில் உருவப்பட தேடலுக்கு பயனுள்ளது.
தேடியந்திர முகவரி:http://www.incogna.com/
இந்த பட்டியலில் இடம்பெறக்கூடிய வேறு நல்ல புகைப்பட தேடியந்திரங்கள் ஏதேனும் உண்டா என்றும் பரிந்துரைக்கலாம்.