இணைய பயன்பாட்டில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது எப்போதுமே நல்லது. தனிப்பட்ட தகவல்களை திருடும் அடையாளத்திருட்டில் துவங்கி, மால்வேர் வைரஸ் தாக்குதல், கிரெடிட் கார்டு மோசடி, பாஸ்வேர்டு திருட்டு, நூதன மோசடி என பலவிதங்களில் ஆன்லைனில் கள்வர்களும், விஷமிகளும் வலைவிரித்து காத்திருக்கின்றனர். எனவே இணையத்தில் உலாவும் போது நம் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வது அவசியமாகிறது. ஆனால் பலரும் நினக்க கூடியது போல இது ஒன்றும் சிக்கலானது அல்ல: சில எளிமையான விஷயங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதும், தேவையான நடவடிக்கைகளில் அலட்சியம் அல்லது சோம்பல் காட்டாமல் இருப்பதும் முக்கியமானது. அந்த வகையில் இணைய பாதுகாப்பிற்காக நெட்டிசன்கள் தவறாமல் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள் இவை;
அப்டேட் தேவை
ஸ்மார்ட்போனிலோ, கம்ப்யூட்டரிலோ மென்பொருள் அல்லது செயலிகளை அப்டேட் செய்யுங்கள் எனும் நோட்டிபிகேஷன் வரும் போது, உடனே அப்டேட் செய்வதற்கு பதில் பின்னர் நினைவூட்டவும் எனும் வாய்ப்பை கிளிக் செய்துவிட்டு கடந்து போவது தான் பலரது வழக்கமாக இருக்கிறது. ஆனால், மென்பொருள்களுக்கான அப்டேட்களை நிறைவேற்றுவது மிகவும் முக்கியமானது. இயங்குதளம் உள்ளிட்ட மென்பொருள்களில் குறிப்பிட்ட குறை அல்லது ஓட்டைகளை கண்டறியும் போது அதற்கான பாதுகாப்பு உருவாக்கப்படுகுறது. மென்பொருள் உலகில் இதை செக்யூரிட்டி பேட்ச் என்கின்றனர். இந்த மென்பொருள் ஒட்டுவேலைக்கான நினைவூட்டல் தான் அப்டேட் கோரிக்கையாக வருகிறது. எனவே இதில் சோம்பல் வேண்டாம். கடந்த சில மாதங்களுக்கு முன் ரான்சம்வேர் வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதற்கு முக்கிய காரணம், பல பயனாளிகள் விண்டோஸ் இயங்குதளத்திற்கான அப்டேட்களை நிறுவாமல் விட்டது தான் என்பதை நினைவில் கொள்ளவும்.
பாஸ்வேர்டு பலம்
பலவீனமான பாஸ்வேர்டை விட இணைய பாதுகாப்பிற்கான வில்லங்கம் வேறில்லை. இமெயில் முகவரி, வங்கி சேவைக்கான இணைய கணக்கு போன்றவற்றுக்கான பாஸ்வேர்டு பலமாக இருக்கிறதா? என்பதை சோதித்து அறியவும். தேவை எனில் குறிப்பிட்ட இடைவெளியில் பாஸ்வேர்டை மாற்றவும் செய்யலாம். அதிலும் குறிப்பாக இணைய உலகில் பெரிய அளவில் இமெயில் முகவரிகள் திருடப்பட்டது தொடர்பாக ஹேக்கர்களின் கைவரிசை பற்றிய செய்திகள் வெளியாகும் போது உங்கள் பாஸ்வேர்ட்கள் மீது ஒரு கண் வைத்திருக்கவும். பாஸ்வேர்டு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதா? என அடையாளம் காட்டும் ஹேவ் ஐ பி பாண்ட் ( ) போன்ற இணைய சேவைகளிலும் உங்கள் இமெயில் முகவரியை சமர்பித்து அதன் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம்.
பிரைவஸி பூட்டு
சமூக ஊடக தளங்களில் தகவல்களை பகிர்ந்து கொள்வதில் காட்டும் ஆர்வத்தை பலரும் அந்த தகவல்கள் எப்படி எல்லாம் பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதை அறிவதில்லை. பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளும் தனிப்பட்ட தகவல்கள் ஒருவரைப்பற்றி பல வித செய்திகளை உணர்த்த வல்லவை. இதன் மூலம் விளம்பர வலையும் விரிக்கலாம், மோசடி வலையும் விரிக்கலாம். எனவே, சமூக ஊடகங்களில் பகிரும் தனிப்பட்ட தகவல்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். பேஸ்புக் உள்ளிட்ட பல சேவைகள், தனிப்பட்ட தகவல்களுக்கான பல வகை பிரைவஸி பாதுகாப்பு அம்சங்களை அளிக்கின்றன. இவற்றை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். டைம்லைன் மற்றும் டேகிங் வசதியையும் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.
செயலி அனுமதி
ஸ்மார்ட்போனில் புதிய செயலிகளை நிறுவும் போது அவை கேட்பதற்கு எல்லாம் அனுமதி கொடுத்துவிடுகிறோம். ஆனால் எந்த செயலிகள் எந்த வகையான தகவல்களை சேகரித்து அவற்றை எப்படி எல்லாம் பயன்படுத்துகின்றன என்பது நமக்குத்தெரியாது. ஒரு சில வில்லங்க செயலிகள் நமது தகவல்களை தவறான நோக்கில் பயன்படுத்தும் அபாயம் இருக்கிறது. எனவே அவ்வப்போது, எந்த செயலிக்கு எல்லாம் என்னவகையான அனுமதி அளித்திருக்கிறோம், அவை தேவையா என பரிசீலிப்பது அவசியம். செட்டிங்ஸ் பகுதியில் உள்ள பிரைவஸி வாய்ப்பை கிளிக் செய்து இது பற்றி பார்வையிடலாம். தேவையில்லாத அனுமதி எனில் அதை ரத்து செய்துவிடலாம்.
பிசியை கவனியுங்கள்
உங்கள் கம்ப்யூட்டரில் என்ன எல்லாம் செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை கவனிப்பதும் அவசியம். விண்டோசில் டாஸ்க் மேனஜரில் சென்று பார்த்தால் கம்ப்யூட்டர் பின்னணியில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் செயலிகளை பார்வையிடலாம். அவற்றில் எதுவும் சந்தேகத்திற்கு உரியவையாக இல்லாதவரை எந்த பிரச்சனையும் இல்லை.
மால்வேர் ஸ்கேன்
உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் அறியாமலேயே மால்வேர்கள் அழையா விருந்தாளியாக வந்து உட்கார்ந்திருக்கலாம். இமெயில் இணைப்புகளை கிளிக் செய்வதால் அல்லது வில்லங்க விளம்பர பக்கம் போவதால் மால்வேர்கள் ஊடுருவலாம். பொதுவாக வைரஸ் தடுப்பு மென்பொருள் இருந்தால் இவற்றை எல்லாம் விரட்டி அடித்துவிடும். இருந்தாலும் அவ்வப்போது மால்வேர் கண்டறியும் மென்பொருளையும் பயன்படுத்தி பரிசோதிப்பது நல்லது.
கணக்கை கவனி
பல இணைய சேவைகளை கூகுள் அல்லது பேஸ்புக் லாகின் மூலம் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. இந்த வசதி எளிதாக இருந்தாலும், அந்த மூன்றாம் தரப்பு இணையதளங்கள் இந்த அனுமதியை எப்படி பயன்படுத்துகின்றன என்பது தெரியாது. எனவே எந்த தளங்களுக்கு எல்லாம் அனுமதி கொடுத்திருக்கிறீர்கள் என்பதையும் அடிக்கடி பார்த்துக்கொள்வது நல்லது. ஜிமெயிலில் மை அக்கவுண்ட் பக்கத்தில் இது பற்றி பார்வையிடலாம். பயன்படுத்தாத சேவைகள் ஏதேனும் இருந்தால் அவற்றுக்கான அனுமதியை நீக்கிவிடுலாம்.
இரண்டு அடுக்கு பாதுகாப்பு
பாஸ்வேர்டு தவிர போனில் அனுப்பி வைக்கப்படும் குறிப்பை கொண்ட இரண்டு அடுக்கு பாதுகாப்பு வசதி எப்போதுமே சிறந்தது. எந்த தளங்களில் எல்லாம் இந்த வசதியை பயன்படுத்த முடியுமோ அவற்றில் எல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம். அதிலும் முக்கிய சேவைகள் எனில் நிச்சயம் 2 அடுக்கு பாதுகாப்பு தேவை.
இதே போலவே உங்கள் இணைய கணக்குகளை வேறு யாரேனும் பயன்படுத்தியிருக்கின்றனரா என சோதிப்பதும், உங்கள் வைபை வசதியை வேறு நபர்கள் பயன்படுத்துகின்றனரா என்பதை சரி பார்த்துக்கொள்வதும் அவசியமானது.

1 Comments on “இணைய பாதுகாப்பை உறுதி செய்ய 10 பரிசோதனைகள்”
Ravichandran R
சிம்மன் சார், இணையபாதுகாப்புபற்றிய இந்த தகவலுக்கு நன்றி.