மிமிக்ரி எல்லோருக்கும் தெரியும். பயோ-மிமிக்ரி என ஒரு சங்கதி அறிவியல் உலகில் பிரபலமாக இருக்கிறது தெரியுமா? புதிய கண்டுபிடிப்புகளுக்கும், தீர்வுகளை உருவாக்குவதற்கும் இயற்கையை நகலெடுப்பதை தான் இப்படி சொல்கின்றனர். அதாவது இயற்கையில் உள்ள அமைப்புகளையும், முறைகளையும் ஊக்கமாக கொண்டு புதிய சேவைகளை உருவாக்குவது என பொருள்.
இயற்கை தான் எல்லாம் என்பது தான் இதன் பின்னே உள்ள நம்பிக்கை. விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் எவ்வளவோ முன்னேறி வந்துவிட்டது. மனித குலம் பல மகத்தான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறது. ஆனாலும் கூட, இன்னும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது.
இப்படி தடுமாற வேண்டியதில்லை, இயற்கையை உற்று கவனித்தால் போதும், புதிய தீர்வுகளுக்கான ஊக்கத்தை பெறலாம் என்பதே பயோ மிமிகிரியின் தத்துவம். இயற்கை பல லட்சம் ஆண்டுகளுக்கு மேல் ஆய்வு செய்து அற்புதமான தீர்வுகளை உருவாக்கி வைத்திருப்பதை அதன் எண்ணற்ற செயல்பாடுகளில் காணலாம். விலங்குகள், தாவிரங்கள் என எல்லாவற்றிலும் இந்த அற்புதத்தை காணலாம். இவற்றின் சூட்சமத்தை புரிந்து கொண்டு அப்படியே அவற்றை நகலெடுத்தால் நிஜ வாழ்க்கை பிரச்சனைக்கான தீர்வு அல்லது சேவைகள் தயார் என பயோ மிமிகிரி ஆர்வலர்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையுடன் பல தீர்வுகளை உருவாக்கியுள்ளனர்.
உதாரணத்திற்கு சூழலுக்கு ஏற்ப நிறம் மாறிக்கொள்கிறது பச்சோந்தி. இது எப்படி சாத்தியம் என ஆழ்ந்து ஆய்வு செய்தால், இதில் உள்ள இயற்கை சூட்சமம் நமக்கான புதிய அறிவியல் வழியை காட்டும் என்கின்றனர்.
இன்னும் நிறைய சுவாரஸ்யமான உதாரணங்களும், ஆய்வுகளும் இப்பிரிவில் உள்ளன.
–
’வாத்தியார்’ சுஜாதா தாக்கத்தில் ஒரு டெக் டிக்ஷனரி
; http://cybersimman.com/2018/03/06/tech-6/