’வாத்தியார்’ சுஜாதா தாக்கத்தில் ஒரு டெக் டிக்‌ஷனரி

பெரிய திட்டமிடல் இல்லாமல்,ஜெயகாந்தன், சுதாதா, பாலகுமாரன் என மறு வாசிப்பு செய்து கொண்டிருக்கிறேன். ஜெயகாந்தன் இன்னும் வியக்க வைக்கிறார். அவரது சிறுகதைகளை வாழ்க்கை பாடமாகவே கருதலாம். சுஜாதா பற்றி சொல்லவே வேண்டாம். இலக்கிய வாசகனாக, அவரை ஏற்பதிலும் அங்கீகரிப்பதிலும் பலருக்கு சிக்க இருந்தாலும், ஒரு இதழாளனாக அவரை தயக்கமே இல்லாமல் ஏற்றுக்கொள்வேன். எழுத்து நடையிலும், விஷயங்களை விவரிக்கும் விதத்திலும் பலரும் சொல்வது போல் அவர் வாத்தியார் தான். நடிகர் திலகம் சாயல் இல்லாமல் அவருக்கு பின் வந்த யாரும் நடிக்க முடியாது என்று சொல்வதை போல, சுஜாதாவுக்கு பின் எழுதியவர்களில் அவரது தாக்கத்தை பார்க்கலாம்.

சுஜாதாவின் ஏன் எதற்கு எப்படி புத்தக தொகுப்பை மீண்டும் வாசிக்கும் போது, வியப்பே மேலிடுகிறது. பல விஷயங்கள் வாத்தியார் சுதந்திரம் எடுத்துக்கொண்டு எழுதியிருப்பதை உணர முடிகிறது என்றாலும், அவர் எழுதிய விஷயங்களின் நீள அகலங்களை பார்த்தால் அசர வைக்கிறது. அதிலும் இணைய வசதி அத்தனை பிரபலமாகாத காலத்தில் அவரே ஒரு விக்கிபீடியாவாக இருந்திருக்கிறார்.

நிற்க, சுஜாதா, தொழில்நுட்ப அகாரதி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள் எனும் தலைப்பிலான அந்த புத்தகம் 1992 ல் முதலில் வெளியானது. அதன் பிறகு பல பதிப்புகளை கண்டிருக்கிறது. இதிலேயே அவர் நெட்வொர்க், சிலிக்கன் சிப் பற்றி எல்லாம் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு சொல்லுக்கும் தமிழ் சொல் கொடுத்து அதற்கான தொழில்நுட்ப விளக்கத்தையும் அளித்திருக்கிறார். நெட்வொர்க் பற்றி எழுதும் போது, வலைப்பின்னல் என குறிப்பிட்டு, இணையத்தின் எதிர்கால சாத்தியம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். உலகில் உள்ள எல்லா கம்ப்யூட்டர்களும் இணைக்கப்பட்டு, ஒரு கம்ப்யூட்டரில் இருந்து இன்னொரு கம்ப்யூட்டரில் தகவல்களை எடுத்துக்கொள்ளலாம் என குறிப்பிடுகிறார். எனக்கெல்லாம், இணையம் என்றால் என்ன என்றே தெரியாத 90 களில் இதை சுஜாதா எழுதியுள்ளார்.

என்றோ வெளியானாலும் இன்னும் வியக்க வைக்கும் பல விஷயங்கள் இந்த புத்தகத்தில் இருக்கின்றன. ஆனால் இந்த புத்தகம் பல பதிப்புகளை கண்டிருந்தாலும் அதன் உள்ளடக்கம் அப்டேட் செய்யப்படவில்லை என்பது சின்ன குறை தான்.

இந்த புத்தகம் வெளிவந்த காலத்தில் இருந்து தொழில்நுட்பம் எங்கோ பாய்ந்து வந்துவிட்டது. இந்த புத்தகத்தில் உள்ளது போல பத்தாயிரம் தொழில்நுட்ப சொற்களை உருவாக்க வேண்டிய நிலை உள்ளது. தமிழில் அவற்றில் பெரும்பாலானவை உருவாக்கப்பட்டுள்ளது. ஹேக்கிங், பயோமிமிக்கிரி, கிரிப்டோகரன்சி, ஆர்டிபிஷியல் இண்டலிஜெஸ், பாட்ஸ், டிரால்ஸ், கன்வெர்ஜன்ஸ், ஆப்ஸ், சிமெண்டிக் போன்ற வார்த்தைகளை உள்ளடக்கிய ஒரு தொழில்நுட்ப சொற் களஞ்சியம் இப்போதைய தேவை.

தொழில்நுட்பம் பற்றி தொடர்ந்து எழுதி வருவதால், இடையே நவீன் டெக் சொற்களை தமிழில் அதன் கருத்தாக்கதுடன் அறிமுகம் செய்யலாமே எனும் எண்ணம் எழுந்துள்ளது. வாத்தியார் தந்த இன்ஸ்பிரேஷனோடு அமேசான் பற்றிய குறிப்புடன் இதை துவங்குகிறேன்.

அமேசான்:

அமேசான் என்றால் உலகின் முக்கிய வனப்பகுதி என்பதை இப்போது பலருக்கும் நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. அமேசான் என்றால் இப்போது இகாமர்ஸ் ஜாம்பவானும், இந்தியாவில் பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக மல்லு கட்டும் இணைய சாம்பிராஜ்யமான அமேசான்.காம் தான் நினைவுக்கு வரும். ( நம் நாட்டில் அமேசான்.இன்) . நம்ம கடை என விளம்பரங்களில் உரிமை கொண்டாடும் அமேசான், இப்போது உலக கோடீஸ்வரர் பட்டியலில் இருக்கும் ஜெப் பெசோஸ் என்பவரால் 1995 ல் துவக்கப்பட்டது. இணையத்தை எப்படி எல்லாம் பயன்படுத்துவது என பலரும் தவித்துக்கொண்டிருந்த காலத்தில் பெசோஸ், நெட் மூலமே புத்தகங்களை விற்பனை செய்யலாம் என கடைபரப்பினார். இந்த கருத்தாக்கமே இ-காமர்ஸ் எனும் மின் வணிகமாக செழித்திருக்கிறது. அமேசானும், புத்தக விற்பனையில் இருந்து, அண்டான்,குண்டா உள்பட எல்லாவற்றையும் விற்றுத்தள்ளும் ரேஞ்சுக்கு வளர்ந்திருக்கிறது. அது மட்டுமா, எதிர்காலத்தில் ட்ரோன் டெலிவரி என்றெல்லாம் திட்டம் போட்டு அசர வைக்கிறது. இருந்தாலும் அதன் ஏகபோக நிலை இணைய ஜனநாயகத்திற்கு பெரும் கேடு எனும் எச்சரிக்கை குரல்களும் எழாமல் இல்லை.

அடுத்த வார்த்தை டிரோன்..-

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *