இணைய உலகில் இமெயில் இன்னமும் பிரபலமாக இருந்தாலும், கொஞ்சம் பழைய கால சங்கதியாகிவிட்டது என நினைப்பவர்கள் இல்லாமல் இல்லை. குறிப்பாக, ஸ்லேக் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்தும் மில்லினியல் தலைமுறை இமெயிலை கடந்த கால நுட்பமாக கருதுவதை பார்க்க முடிகிறது. ஆனால் மெசேஜிங் யுகத்திலும் இமெயிலுக்கான தேவை இன்னமும் குறைந்துவிடவில்லை என்பது மட்டும் அல்ல, இமெயில் கலையையும் நாம் இன்னமும் கற்றுத்தேர்ந்துவிடவில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. தகவல் தொடர்பு சாதனமாக இமெயிலை மேலும் சிறப்பாக பயன்படுத்துதற்கான நுணுக்கங்களும், வழிமுறைகளும் அநேகம் இருக்கின்றன. இதற்கு சிறந்த உதாரணமாக இமெயிலின் மாற்று பயன்பாடுகள் பற்றி பார்ப்போம். இப்படி எல்லாம் இமெயிலை பயன்படுத்த முடியுமா என வியக்க கூடிய விஷயங்களை பாப்புலர் சயன்ஸ் நாளிதழ் பட்டியலிட்டுள்ளது:
இணைய குறிப்பேடு: இமெயில் வசதியை கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம், கையில் இருக்கும் ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்தலாம். இந்த தன்மையை கொண்டு, இமெயிலை நமது இணைய குறிப்பேடாகவும் பயன்படுத்தலாம். இமெயிலை உருவாக்கும் போது அதை, டிராப்ட் வடிவில் சேமித்து வைக்கும் வசதி இருக்கிறது. முக்கிய விஷயங்கள் அல்லது திடிரென தோன்றும் எண்ணங்களை இமெயில் டிராப்ட் வடிவில் டைப் செய்து வைத்துக்கொள்ளலாம். இமெயில் முகவரி கட்டத்தில் எதையும் டைப் செய்யாமல் இருக்க வேண்டும். இப்படி சேமித்து வைக்கும் குறிப்புகளை பின்னர் எப்போது தேவையோ அப்போது திறந்து வாசித்துக்கொள்ளலாம். ஸ்மார்ட்போனில் உள்ள குறிப்பேடுகளை விட இது சிறந்ததாக இருக்கும். டெஸ்க்டாப்பிலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நினைவலை எழுதுங்கள்
குறிப்பேடு வசதி போலவே இமெயிலை டிஜிட்டல் டயரியாகவும் பயன்படுத்தலாம். புதிய இமெயிலை திறந்து அதில் அன்றைய தின நிகழ்வுகள் மற்றும் நினைவுகளை எழுதி வைக்கலாம். தேவை எனில் புகைப்படங்களையும் உடன் இணைக்கலாம். இந்த மெயிலை சுயமெயிலாக நமக்கு நாமே அனுப்பிக்கொள்ளலாம். அதாவது நம் இமெயில் முகவரிக்கே அனுப்பி வைக்கலாம். தேவை எனில் இவற்றுக்கான தலைப்புகள் மற்றும் முக்கிய குறிச்சொற்களையும் அடையாளமாக குறிப்பிடலாம். இந்த வகையில் இமெயில் பெட்டியிலேயே டயரி எழுதுவது எளிது என்றாலும் கைத்தவறி யாருக்கேனும் அனுப்பிவிடாமல் இருப்பதில் கவனம் தேவை.
ஒளிப்பட பகிர்வு:
சுற்றுலாவின் போது எடுத்துக்கொண்ட செல்பி அல்லது, அலுவலக நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படமோ எதுவாக இருந்தாலும் அவற்றை பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வதே பலருக்கு வழக்கமாக இருக்கிறது. இந்த படங்களுக்கு குவியும் லைக் மற்றும் கருத்துக்களை அறிய ஆர்வம் ஏற்படுவது இயல்பானது என்றாலும், இத்தகைய தனிப்பட்ட படங்களை சமூக ஊடகம் எனும் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது. ஒருவருடைய தனிப்பட்ட படங்கள் இணையத்தில் எப்படி பயன்படுத்தப்படும் என்பதற்கு எந்த நிச்சயமும் இல்லை என்பதால், ஒளிப்படங்கள் பகிர்வை கட்டுப்படுத்திக்கொள்வதே நல்லது. அதற்காக படங்களை பகிரவே கூடாது என்றில்லை: யாருடன் பகிர்ந்து கொள்ள விருப்பமோ அவர்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள். இதற்கென தனியே ஒரு இமெயில் முகவரி கணக்கு துவக்கி வைத்துக்கொள்ளுங்கள். இந்த முகவரியில் இருந்து தனிப்பட்ட ஒளிப்படங்களை அனுப்பி வைக்கலாம். இந்த முகவரியை படங்களை பகிர மட்டுமே பயன்படுத்திக்கொள்ளலாம். தேவை எனில் இமெயில் உள்நுழையும் விபரங்களை நெருக்கமானவர்களிடம் தெரிவித்து அவர்கள் பார்வையிட அனுமதிக்கலாம்.
சமூக ஊடக பகிர்வு:
பேஸ்புக் அல்லது டிவிட்டரில் ஒரு கருத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள் , ஆனால் அந்த பக்கம் போனால் அவற்றிலேயே நேரம் வீணாகிவிடலாம் என்ற தயக்கமும் இருக்கிறதா? இதற்கும் இமெயில் மூலமே தீர்வு காணலாம். பல்வேறு இணைய சேவைகளை ஒருங்கிணைக்கும் ஐஎப்டிடிடி ( IFTTT -If This Then That ) சேவை மூலம் இமெயில் மற்றும் டிவிட்டர் அல்லது பேஸ்புக் சேவையை ஒருங்கிணைக்க முடியும். இப்படி செய்வதன் மூலம் குறிப்பிட்ட கருத்தை இமெயில் செய்தால் அது டிவிட்டரில் பகிரப்படும்.
இதே போலவே வலைப்பதிவையும் பாரமரிக்க முடியும். பல வலைப்பதிவு சேவைகள் இமெயில் வாயிலாக பதிவுகளை வெளியிட வழி செய்கின்றன. இந்த வசதியை பயன்படுத்தி இமெயிலிலேயே பதிவுகளை எழுதி வலைப்பதிவை புதுப்பிக்கலாம்.
வாசிப்பு வழிகாட்டி
வாசிப்பதற்கான விஷயங்கள் இணைத்தில் கொட்டிக்கிடக்கின்றன. பல நேரங்களில் இணைய உலாவலில் நல்ல கட்டுரைகள் கண்ணில் படும். உடனே அவற்றை படித்துப்பார்க்க நேரம் இருக்காது. ஆனால் கவலையே வேண்டாம் இத்தகைய கட்டுரைகளை நமது இமெயிலுக்கு அனுப்பி வைத்துக்கொண்டு, நேரம் கிடைக்கும் போது படித்துக்கொள்ளலாம். பெரும்பாலான இணையதளங்கள் இப்படி கட்டுரைகளை மின்னஞ்சல் செய்யும் வசதியை அளிக்கின்றன. இதற்காக என்றே உள்ள பாக்கெட் ( Pocket ) அல்லது இன்ஸ்டாபேப்பர் (Instapaper ) போன்ற பிரத்யேக செயலிகளையும் பயன்படுத்தலாம். பின்னர் வாசிப்பதற்கான சேவைகள் என குறிப்பிடப்படும் இந்த செயலிகள் வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்துவதோடு, ஆழமான கட்டுரைகளை தவறவிடாமல் இருக்கவும் உதவும்.
சேமிப்பு வசதி
பேக்கப் செய்வது, அதவாது முக்கிய கோப்புகளின் நகலை வேறு ஒரு இடத்தில் சேமித்து வைப்பது இணைய பயன்பாட்டில் மிகவும் முக்கியமானது. இதற்கும் இமெயில் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒளிப்படம் அல்லது ஆவணங்களின் நகலை இமெயிலில் நம் முகவரிக்கு அனுப்பி வைத்து அந்த நகலை சேமித்து கொள்ளலாம். இமெயில் பயன்பாட்டில் சேமிப்புத்திறனுக்கான வரம்பு இருக்கிறது என்றாலும், படங்கள், ஆவணங்கள் நகலை சேமிக்க இது எளிய வழி. முழுவீச்சிலான பேக்கப் சேவைக்கு மாற்று இல்லை என்றாலும், பயனுள்ள வசதி. ஆனால் வீடியோ போன்ற அதிக கொள்ளலவு தேவைப்படும் கோப்புகளை சேமிக்க முடியாது. கோப்புகளை சேமிப்பதோடு, ஸ்மார்ட்போன்களுக்கான செயலிகள் மூலம் முக்கிய குறுஞ்செய்திகளையும் மெயிலில் சேமித்து வைக்கலாம்.