இது டிரைலர் தான், மெயின் பிக்சர் இன்னும் இருக்கும் எனும் ரஜினி பட வசனம் போல, கூகுள் தனது டிஜிட்டல் உதவியாளர் சேவையின் மேம்பட்ட வடிவத்தின் திறன்களை சின்னதாக ஒரு டெமோ காட்டியது. கூகுளின் அந்த டெமோவோ, அட கூகுள் அஸிஸ்டெண்டால் இதை எல்லாம் செய்ய முடியுமா என வியக்க வைத்திருக்கிறது. வியப்பு மட்டும் அல்ல, கூகுள் உதவியாளரின் குரல் அழைப்புத்திறன், இதென்னடா வம்பா போச்சு எனும் கவலையையும், அறம் சார்ந்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்த சேவை நடைமுறையில் என்ன எல்லாம் சிக்கல்களை ஏற்படுத்துமோ என்ற விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கூகுளின் டிஜிட்டல் உதவியாளர் சேவை அதன் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக வியப்பை உண்டாக்குவது இயல்பானது தான். ஆனால் இதில் அறம் சார்ந்த கேள்விகள் எங்கிருந்து வருகிறது என நினைக்கலாம். கூகுள் உதவியாளர் சேவை செயல்படும் விதத்தை புரிந்து கொண்டால், இந்த சேவை ஒரே நேரத்தில் வியக்க வைப்பதாகவும், மிரள வைப்பதாகவும் இருப்பதை புரிந்து கொள்ளலாம். மனிதர்கள் சார்பில், மனிதர் போலவே வர்த்தக நிறுவனங்களை தொடர்பு கொண்டு பேசும் திறன் பெற்றிருப்பதே இந்த சேவையின் வியக்க வைக்கும் ஆற்றலாக இருக்கிறது. இந்த தன்மையே மிரட்சியையும் தருகிறது.
இயந்திர அழைப்புகள் இத்தனை இயல்பானதாக இருக்குமானால் எதிர்காலத்தில் என்ன ஆகும்? எனும் கேள்வியையும் எழுப்பியுள்ளது.
இந்த கேள்விகளுக்கான அவசியத்தை புரிந்து கொள்ள முதலில் கூகுள் உதவியாளர் சேவை கொஞ்சம் குளோச் அப்பில் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்.
கூகுள் அசிஸ்டண்ட் எனப்படும் கூகுள் உதவியாளர் சேவை டிஜிட்டல் உதவியாளர் என சொல்லப்படும் சேவையின் கீழ் வருகிறது. பயனாளிகளுக்கான தனிப்பட்ட உதவியாளர்கள் என இவை வர்ணிக்கப்படுகின்றன. ஆப்பிள், அமேசான், மைக்ரோசாப்ட் என எல்லா நிறுவனங்களும் இதே போல ஒரு டிஜிட்டல் உதவியாளர் சேவையை உருவாக்கி இருக்கின்றன. ஆப்பிளின் சிறி மற்றும் மைக்ரோசாப்டின் கார்ட்டனா சேவைகள் பிரதானமாக ஸ்மார்ட்போனில் செயல்படக்கூடியவை என்றால், அமேசானின் சேவை அதன் ஸ்மார்ட் ஹோம் சாதனமான அலெக்சாவில் செயல்படக்கூடியவை. இந்த சேவைகள் அனைத்துமே, பயனாளிகளின் குரல் வழி கட்டளைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப தகவல்களை தரக்கூடியவை அல்லது சேவை அளிக்க கூடியவை. உதாரணத்திற்கு அலெக்சாவிடம் அல்லது சிறியிடம் , இன்று மழை வருமா? எனக்கேட்டால், வானிலை இணையதளத்தில் தேடி இன்றைய மழை நிலவரம் தொடர்பாக தகவல் அளிக்கும். உள்ளூர் ரெஸ்டாரண்ட் செயல்படும் நேரம் போன்ற தகவல்களையும் இப்படி கேட்டு பெறலாம். அதே போல, வீட்டின் உள்ளே நுழைந்ததும், ஏசியை ஆன் செய்ய கட்டளையிட்டு ஹாயாக சோபாவில் சரிந்து கொள்ளலாம்.
செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை அடிப்படையாக கொண்டு இவை செயல்படுகின்றன. இந்த சேவைகள் பயனாளிகளின் பழக்க வழக்கங்களை புரிந்து கொண்டு அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படும் திறன் பெற்றவையாகவும் இருக்கின்றன. இவை செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்குவதால் பயன்பாடு அடிப்படையில் மேலும் பலவற்றை கற்றுக்கொண்டு தங்கள் திறனை மேம்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன.
இந்த பிரிவில் தேடியந்திர ஜாம்பவனான கூகுள் வழங்குவது தான் கூகுள் டிஜிட்டல் அசிஸ்டெண்ட். ஏற்கனவே ஆண்ட்ராய்டு போன்களில் செயல்பட்டு வந்த குரல் வழி சேவையான கூகுள் நவ்வின் நீட்டிப்பாக, மேம்பட்ட திறனோடு கூகுள் அசிஸ்டெண்ட் உருவாக்கப்பட்டது. கடந்த 2016 ல் கூகுள் அல்லோ சேவையில் பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்ட கூகுல் அசிஸ்டெண்ட் பின்னர் பிக்சல் போன், கூகுல் ஹோம் உள்ளிட்ட சாதனங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது.
இந்த நிலையில் தான் அண்மையில் நடைபெற்ற கூகுள் டெவலப்பர்கள் மாநாட்டில் அதன் சி.இ.ஓவான சுந்தர் பிச்சை, கூகுள் அசிஸ்டெண்ட் சேவையின் மேம்பட்ட வடிவத்தை அறிமுகம் செய்தார். பழைய சேவையின் புதிய வடிவம் என்றாலும், சுந்தர் பிச்சனையின் டெமோ பார்வையாளர்களை வாய் பிளக்க வைத்தது. டெமோவின் போது, சுந்தர் பிச்சை, கூகுல் உதவியாளர் செய்த தொலைபேசி அழைப்பு பற்றி விவரித்தார். இந்த அழைப்பு டெமோ அல்ல, கூகுள் உதவியாளர் நிஜமாக அழைத்து பேசியதன் பதிவு என அவர் கூறினார்.
திரையில் அந்த அழைப்பு செயல்படும் விதம் காட்சியாக விரிந்தது. முதலில், ’நான் எப்படி உதவ முடியும்?’ என உதவியாளர் கேட்க, ’முடிதிருத்துவதற்கான முன் பதிவு செய்ய வேண்டும்’ எனும் வேலை அதனிடம் கொடுக்கப்படுகிறது. உடனே கூகுள் உதவியாளர் குறிப்பிட்ட முடிதிருத்தும் நிலையத்தை அழைக்கிறது. அதற்கு முன்னர், ஒன்றும் பிரச்சனை இல்லை, உங்களுக்காக பேசி முன்பதிவு செய்துவிட்டு தகவல் அளிப்பதாக தெரிவிக்கிறது. மறுமுனையில் போன் எடுக்கப்பட்டதும், கூகுள் உதவியாளர், வாடிக்கையாளர் ஒருவருக்கு முன் பதிவு செய்வதற்காக பேசுகிறேன், மே 3 ம் தேதி நேரம் கிடைக்குமா? என கேட்கிறது. தொடர்ந்து போனில் பேசும் ஊழியருடன் உரையாடி, இறுதியில் கச்சிதமாக முன்பதிவு செய்து விட்டு தகவல் அளிக்கிறது. இதே போலவே கூகுள் உதவியாளர் ஓட்டலில் நான்கு பேர் சாப்பிடுவதற்கான மேஜையை முன்பதிவு செய்ததையும் சுந்தர் பிச்சை டெமோ காண்பித்தார்.
எஜமானர் சார்பாக பேசும் உதவியாளர் போலவே, கூகுள் உதவியாளர் தனது வாடிக்கையாளர் எஜமானர் சார்பில் போனில் பேசி காரியத்தை முடித்து தந்திருக்கிறது. டிஜிட்டல் உதவியாளர்கள் சேவை இணையத்தில் தகவல் தேடி தருவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை தான். ஆனால், முன்பதிவு செய்து தருமாறு கேட்டால், உடனே போன் போட்டு காரியத்தை கச்சிதமாக முடித்து தருவது ஆச்சர்யம் தானே.
ஆக, வருங்காலத்தில் சினிமா டிக்கெட் வேண்டும் என்றாலும், ரெயில் டிக்கெட் வேண்டும் என்றாலும் சரி, ஸ்மார்ட்போனிடன் ஒரு சில வார்த்தைகள் சொன்னால் போதும், மீதியை கூகுள் உதவியாளர் சேவை கவனித்துக்கொள்ளும். இந்த நிலை வர கூகுள் உதவியாளர் சேவை இன்னும் பல பாய்ச்சல்களை நிகழ்த்த வேண்டும் என்றாலும், அவற்றுக்கான ஆரம்ப அடியாக இந்த டெமோவை கருதலாம்.
கூகுள் உதவியாளர் சேவையில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், அதனால் கட்டளையை புரிந்து கொண்டு நிஜ உலக உரையாடலை மேற்கொள்ள முடிகிறது. மறுமுனையில் கோரப்படும் தகவல்களுக்கு ஏற்ப விவரங்களை அளித்தும் பதில் கேள்வி கேட்டும் அதனால் உரையாட முடிகிறது. இதற்கு பின்னணியில் இருப்பது கூகுள் தீவிர ஆய்வின் மூலம் உருவாக்கியுள்ள கூகுள் டூப்ளக்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு நுட்பம். இதன் ஆற்றல் எல்லாம் கிளவுடில் இருக்க அதிலிருந்து தான், கூகுள் உதவியாளர் தனக்கான ஆற்றலை உருவிக்கொள்கிறது. இயற்கையான மொழி கூறுகளை கூகுள் டூப்ளக்ஸ் பெற்றிருக்கிறது.
மனிதர்கள் பேசுவதை புரிந்து கொண்டு, அவர்களுடன் உரையாடுவதோடு, இந்த சேவையின் குரலும் மனித குரல் போலவே இருந்தது. (கூகுள் ஆறு விதமான ஆண் மற்றும் பெண் குரல்களை இதற்காக உருவாக்கியுள்ளது). மேலும் பேசும் போது, மனிதர்கள் உம் கொட்டுவது போலவே கூகுள் உதவியாளர் உரையாடலை கவனித்து மனித பாவணைகளையும் மேற்கொண்டது.
இந்த திறன் தான், அட மனிதர் போலவே குரல் கொண்டு மனிதர்களோடு பேசுகிறதே என வியப்பை ஏற்படுத்தியது. நிற்க, இந்த உரையாடல் திறன் இப்போதைக்கு முன்னோட்ட வசதி தான். இந்த ஆண்டு பிற்பகுதியில் நடைமுறையில் பயன்பாட்டிற்கு வரலாம். அப்போது கூட, இது கட்டுப்பாடுகளை கொண்டதாக இருக்கும். அதாவது, இதனிடம் எல்லா விதமான கேள்விகளையும் கேட்க முடியாது. பயன்பாடு சார்ந்த சேவை தொடர்பான உரையாடலுக்கு மட்டுமே இது சரியாக வரும். முதல் கட்டமாக, முடிதிருத்த சேவை, ஓட்டல் முன்பதிவு மற்றும் வர்த்தக நிறுவனங்களின் விடுமுறை நாட்களை கேட்பது ஆகிய மூன்று வசதிகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்.
அது மட்டும் அல்ல, உரையாடலில் ஏதேனும் சிக்கல் வந்தால், மனித உதவியாளர் ஒருவர் அதன் பின் பொறுப்பேற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, நடைமுறையில் இந்த சேவை பெரிய அளவில் பயன்பட பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால் இதன் சாத்தியங்கள் வியக்க வைப்பதாக உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
இந்த சேவை ஏற்படுத்திய வியப்புகளுக்கு மத்தியில், இதன் மனித குரல் தன்மை சில முக்கிய கேள்விகளையும் எழுப்பியுள்ளது. ஒரு டிஜிட்டல் உதவியாளர் சேவை மனிதர் போலவே பேசுவது எல்லாம் சரி தான், ஆனால் அது மனித குரல் அல்ல என்பதை சொல்ல வேண்டாமா என்பது முதல் கேள்வி. மறுமுனையில் பேசுவது ரோபோ எனத்தெரியாமல் பேசிக்கொண்டிருப்பது பலவித சிக்கல்களை உண்டாக்கும் என்ற கவலையும் முன்வைக்கப்படுகிறது. பேசுவது ரோபோ எனும் தகவல் முதலில் தெரிவிக்கப்படாமல் இருப்பது, மறுமுனையில் இருப்பவர் நம்பிக்கையை வஞ்சிப்பதாகாதா எனும் கேள்வியும் எழுகிறது. இந்த சர்ச்சை எழுந்துவுடன், கூகுள் உடனே, அழைப்புக்கு முன் அது டிஜிட்டல் உதவியாளர் அழைப்பு என்பது தெரிவிக்கப்படும் என தெளிவுபடுத்தியுள்ளது.
ஆனால், போனில் இருந்து பேசும் ரோபோ வேறு எப்படி எல்லாம் பயன்படுத்தப்படும் வாய்ப்பு அல்லது அபாயம் இருக்கிறது என்பது போன்ற சந்தேகங்களும் எழுப்ப படுகின்றன. பேசுவது ரோபோ எனத்தெரிந்தால் மனிதர்கள் அதை விரும்புவார்களா? எனும் கேள்வியும் எழுகிறது. இவையும், இன்னும் பிறவும் செய்ற்கை நுண்ணறிவு கோலோச்சப்போகும் வருங்காலத்திற்கான கேள்விகள்!
கூகுல் டுப்ளக்ஸ் செயற்கை நுண்ணறிவு செயல்பாடு பற்றிய கூகுள் வலைப்பதிவு: https://ai.googleblog.com/2018/05/duplex-ai-system-for-natural-conversation.html
–