இது இணையத்தின் காதல் கோட்டை!

DmtKIjeUUAIxSqDநிஜ உலக சந்திப்புகளில் அறிமுகமானவர்களை இமெயிலிலோ, வாட்ஸ் அப்பிலோ தொடர்பு கொள்வது இயல்பானது தான். ஆனால், சந்தித்து பேசியவர்களின் தொடர்பு எண் அல்லது தொடர்பு முகவரி தெரியாமல் போனால் என்ன செய்வது? கனடா நாட்டைச்சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கும் இதே நிலை தான் உண்டானது.

கல்காரி பல்கலைக்கழகத்தில் படிக்கும் கார்லோஸ் ஜெட்டினா எனும் அந்த மாணவர் நிக்கோலே எனும் மாணவியை சந்தித்து பேசினார். இருவரும் பிரிந்த போது தொலைபேசி எண்ணை பரிமாறிக்கொண்டனர். ஜெட்டினா, செல்பேசி மூலம் நிக்கோலை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்ற போது, அது தவறாக எண்ணாக இருந்தது. இதன் காரணமாக நிக்கோலேவை தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஜெட்டினா எப்படியாவது நிக்கோலேவை கண்டுபிடித்து பேசி விட வேண்டும் என துடித்தார். ஆனால், நெதர்லாந்தில் இருந்து பல்கலைக்கழக மாற்று திட்டத்தில் கனடா வந்து படிக்கும் மாணவியான நிக்கோலே பற்றி அவரது பெயர் போன்ற சில விவரங்கள் தவிர ஒன்றுமே தெரியாது. இந்நிலையில், யாரோ ஒரு நிக்கோலேவை எப்படி தேடி கண்டுபிடிப்பது?

ஜெட்டினா மனம் தளர்ந்துவிடவில்லை. தனது மனங்கவர்ந்த பெண்ணை, ஏதாவது ஒரு வழியில் கண்டுபிடித்துவிட முடியாதா? என அலைபாய்ந்தவர் இமெயிலை தேர்ந்தெடுத்தார். கல்காரி பல்கலைக்கழகத்தின் இமெயில் டைரக்டரியில் நிக்கோலே பெயரை தேடிப்பார்த்தார். சோதனையாக நிக்கோலேவின் முழுப்பெயர் அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்பதோடு, பல்கலைக்கழகத்தில் நிக்கோலே எனும் பெயரில் பலர் இருந்தனர். சரியாக சொல்வதானால், 247 நிக்கோலேக்கள் இருந்தனர். இத்தனை நிக்கோலேக்களில் அவர் தேடும் நிக்கோலே யார் என எப்படி தெரியும்?

இதன் பின் ஜெட்டினா செய்ததும், அதனை தொடர்ந்து நடந்ததும் சற்றும் எதிர்பாராதவை. ஜெட்டினா என்ன செய்தார் என்றால், இமெயில் பட்டியலில் இருந்த அத்தனை நிக்கோலேக்கள் முகவரியையும் காபி செய்து, அத்தனை பேருக்கும் ஒரு மெயில் அனுப்பி வைத்தார். அவரது மெயில் இப்படி அமைந்திருந்தது:

” அனைத்து நிக்கோலேக்களுக்கமான ஒரு கும்பல் மெயில் இது. இந்த வர்னணை உங்களுக்கு பொருந்தவில்லை எனில் இதை அலட்சியம் செய்யுங்கள். நீங்கள் தான் நிக்கோலேவாக இருந்து என்னுடன் பேச விரும்பவில்லை என்றால் அதுவும் பிரச்சனையில்லை. உங்கள் பெயர் நிக்கோலேவாக இருந்து, நீங்கள் ஹாலந்தில் இருந்து வந்து படிப்பவர், நீட்ஷேவை கவலை அளிக்கும் நபர் என கருதுபவராக இருந்தால் எனக்கு செய்தி அனுப்பவும். நான் கார்லோஸ், உங்களையும், உங்கள் தோழியையும் நேற்று வெளியே அழைத்துச்சென்றவன்”.

ஜெட்டினா தான் தேடும் மாணவி நிக்கோலே இந்த மெயிலை படித்து பார்த்து பதில் அளிக்கலாம் எனும் எதிர்பார்ப்பில், அனைத்து நிக்கோலேக்களுக்கும் மெயில் அனுப்பியிருந்தார்.

ஒரு பெண்ணைத்தேடி, அதே பெயர் கொண்ட இருநூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஒருவர் மெயில் அனுப்புவது விநோதமானது தான் என்றாலும் இணைய யுகத்தில் எதிர்பார்க்க கூடியது தான் அல்லவா? இப்படி ஒட்டுமொத்தமாக இமெயில் அனுப்பியதற்கு பிறகு என்ன நடந்தது என்பது தான் இன்னும் சுவாரஸ்யமானவை.

DmioclTW4AAXbZYஇந்த மெயிலை பெற்ற நிக்கோலேக்கள் எல்லோரும், வியப்பும், குழப்பமும் அடைந்தனர். ஒவ்வொரு நிக்கோலேவும் தான் அந்த நிக்கோலே இல்லை என உணர்ந்தனர். ஆனால், இந்த தேடலில் இருந்த சுவாரஸ்யம் அவர்களை கவர்ந்தது. அது மட்டும் அல்லாமல், பல்கலைக்கழகத்தில் இத்தனை நிக்கோலேக்கள் இருக்கிறோமா? என்ற எண்ணமும் வியப்பை உண்டாக்கியது. உடனே நிக்கோலேக்கள் பரஸ்பரம் தங்களுக்குள் மெயில் அனுப்பி தொடர்பு கொண்டனர். உங்களில் உண்மையான நிக்கோலே யார் என ஒருவர் கேட்டிருந்தார். நிக்கோலேக்களுக்கு ஹாய் சொல்ல விரும்புகிறேன் என ஒருவர் கூறியிருந்தார். என பெயர் நிக்கோலே என்பதை நினைத்து மகிழ்கிறேன் என ஒருவர் கூறியிருந்தார். இந்த பரிமாற்றத்தில் அவர்களுக்கு இடையே சுவாரஸ்யமான பிணைப்பு உருவாகி இருப்பதை உணர்ந்தனர்.

நிக்கோலேக்களில் ஒருவரான நிக்கோலே மெக்மில்லன் என்பவர், நான் தான் உன் நிக்கோலே என நாம் எல்லோரும் சொல்லலாமா என கேட்டார். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. மாறாக நிக்கோலேக்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள வேண்டும் என தீர்மானித்தனர். உடனே தங்களுக்காக பேஸ்புக்கில் ஒரு பக்கத்தை உருவாக்கினர். ’நிக்கோலே பிரம் லாஸ்ட் நைட்’ எனும் பெயரிலான அந்த பேஸ்புக் குழுவில் 80 க்கும் மேற்பட்ட நிக்கோலேக்கள் உறுப்பினர்களாக இணைந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

மறுநாள் நிக்கோலே குழு உறுப்பினர்கள் பார் ஒன்றில் நேரில் சந்தித்து பேச தீர்மானித்தனர். அதன்படியே பல நிக்கோலேக்கள் ஒன்றாக சந்தித்து பேசிக்கொண்டனர். நிக்கோலே எனும் பெயர் கொண்ட பெண்கள் அனைவரும் ஒன்றாக சந்தித்து பேசுவதும், இந்த விநோத சந்திப்பின் பின்னே முகம் தெரியான ஒரு வாலிபரின் காதல் தேடல் இருப்பதும், இந்த சந்திப்பை சுவாரஸ்யம் மிக்கதாக ஆக்கியது. விளைவு, இந்த சந்திப்பு பற்றி நிக்கோலே ஒருவர், #nicolefromlastnight எனும் ஹாஷ்டேகுடன் டிவிட்டரில் தகவல் பகிர்ந்து கொண்ட போது, இந்த செய்தி இணையத்தில் வைரலாகத்துவங்கியது. இந்த நூதன காதல் தேடலும், அதனால் உண்டான பேஸ்புக் நட்பு குழு பற்றிய செய்தி கனடா ஊடகங்களில் வெளியானது. -https://www.vice.com/en_us/article/mbwqmx/man-emails-every-nicole-from-his-university-to-find-a-girl-he-met-at-a-bar

இந்த புகழும் கவனமும், நிக்கோலே குழு உறுப்பினர்களின் நட்பை மேலும் வலுவாக்கியது. ஆக, ஒரு மாணவரில் காதலி தேடல் அதே பெயர் கொண்ட பெண்களை எல்லாம் நண்பர்களாக்கியது. இந்த குழுவினர் ஒன்றாக புகைப்படம் எடுத்து அதை டிவிட்டரில் பகிர்ந்து கொண்ட போது, மேலும் பலர் ஆர்வத்தோடு இந்த விவாதத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். #nicolefromlastnight எனும் ஹாஷ்டேகை டிவிட்டரில் பின்பற்றினால் இது தொடர்பான விவாத சரட்டை பின் தொடரலாம்.

எல்லாம் சரி, இந்த கதையின் நாயகன் கார்லோஸ் ஜெட்டினாவின் தேடல் என்னவாயிற்று? அவர் மெயில் அனுப்பிய 247 நிக்கோலேக்களில் ஒருவர் கூட, அவர் தேடும் நிக்கோலே இல்லை என்பது தான் விநோதம். ஆனால், கதையில் எதிர்பாராத ஒரு திருப்பமும் காத்திருந்தது. பேஸ்புக் நிக்கோலே நட்பு குழு வைரலானதால், ஹாலந்து மாணவி நிக்கோலேவுக்கு இந்த தகவல் தெரிந்து அவர் இக்குழுவை தொடர்பு கொண்டார். கல்லூரி இமெயில் முகவரி தன்னிடம் இல்லாததால் இந்த அழகிய மெயிலை தான் பெறவில்லை என்றும், ஆனால் நிக்கோலேக்கள் உருவாக்கிய நெட்வொர்க்கால் இந்த விஷயத்தை தெரிந்து கொள்ள முடிந்ததாக அவர் மெயில் அனுப்பியிருந்தார். அத்துடன்,  மாணவர் ஜெட்டினாவை தொடர்பு கொண்டு பேசி, இருவரும் மீண்டும் சந்தித்து பேசவும் ஏற்பாடு செய்து கொண்டார்.

இணையத்தில் பெண்களுக்கு நெகட்டீவான பல சங்கதிகள் நடக்கும் போது, அதற்கு மாறாக இப்படி, ஒரே பெயரிலான பெண்கள் நண்பர்களாக வாய்ப்பு கிடைத்ததும், அதில் ஒரு இளஞ்ஜோடி இணைந்ததும் நெட்டிசன்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் ஊக்கம் தரும் கதையாகவும் இது அமைந்துள்ளது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *