டெக் டிக்ஷனரி- 11 லாங் டெயில் (long tail ) : நீண்ட வால்

FF_170_tail1_fநீங்கள் இணையத்தில் புழங்கும் போது உங்களை அறியாமல் லாங் டெயில் எனப்படும் ’நீண்ட வால்’ விளைவுக்கு உள்ளாகி கொண்டிருக்கிறீர்கள். இந்த விளைவை கொஞ்சம் புரிந்து கொண்டால் இணைய வர்த்தகத்தில் நீங்களும் புகுந்து விளையாடலாம். அதன்பிறகு சூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர், பெஸ்ட்செல்லர் என்பது பற்றி எல்லாம் கவலைப்படாமல் நீங்கள் உற்சாகமாக செயல்படலாம். ஏனெனில் அது தான் ’நீண்ட வாலி’ன் மகிமை.

பரந்த சந்தை, பெரிய அளவில் விற்பனை பற்றி எல்லாம் கவலைப்படாமல், ஒருவர் தனது பொருள் அல்லது சேவைக்கான சொற்ப வாடிக்கையாளர்களை சென்றடைவதன் மூலம் வெற்றி பெறுவதை தான் ’நீண்ட வாள்’ நிகழ்வு குறிக்கிறது. அதனால் தான் இணைய யுகத்தில் இது முக்கியத்துவம் பெறுகிறது.

லாங் டெயில் என்பது வர்த்தகம் மற்றும் புள்ளியியலில் அதிகம் பயன்படுத்தப்படும் கருத்தாக்கமாக இருக்கிறது. புள்ளியியல் நோக்கில் இதற்கான விளக்கம் சிக்கலானது. எளிமையாக புரிந்து கொள்வது என்றால், விற்பனையில் அதிக எண்ணிக்கையை குறி வைக்காமல், குறைந்த எண்ணிக்கையிலேயே திருப்தி பட்டுக்கொள்ளும் உத்தி என சொல்லலாம். அதெப்படி வர்த்தகத்திலோ, விற்பனையிலோ குறைந்த எண்ணிக்கை போதும்? எனும் கேள்வி எழலாம்.

விற்பனையின் நோக்கமே அதிக அளவிலான எண்ணிக்கையை அடைவதற்கான வழியாக கருதப்படுவதால் இவ்வாறு கேட்கத்தோன்றும். உலகம் இப்படி தான் இருக்கிறது. எதை எடுத்துக்கொண்டாலும் முதலிடம் அல்லது முன்னிலைக்கு தான் மதிப்பு. அந்த இடங்களை பிடிக்க தான் எல்லோரும் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றனர். ஹாலிவுட் படமா, அது கோடிக்கணக்கில் ரசிகர்கள் ஈர்த்து வசூலை வாரிக்குவித்தால் தான் வெற்றிப்படமாக கருதப்படுகிறது. பாலிவுட், கோல்வுட் என எல்லாவற்றிலும் இதே உத்தி தான். பதிப்பக உலகிலும் இது தான் தாரக மந்திரம். கோடிக்கணக்கில் விற்கும் புத்தகங்களே பெஸ்ட்செல்லராக கொண்டாடப்படுகின்றன. அதனால் தான் நம்மூரில் சேத்தன் பகத்தை பிரபல எழுத்தாளராக கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். பாடல்கள் உலகில் இது தான் நிலைமை. ஒரு ஆல்பம் லட்சக்கணக்கில் விற்றாக வேண்டும்.

ஹிட்டாகும் படங்களும் அதிகம் விற்கும் புத்தகங்களும் மட்டும் தான் விற்க வேண்டும் என்றால் எப்படி? ஆனால் பொதுபுத்தி இந்த வெற்றி உத்திக்கு பழகியிருந்தாலும், நடைமுறையில் நிலைமை கொஞ்சம் வேறானது. அதிகம் விற்கும் சரக்குகளை விட்டுத்தள்ளுங்கள். சொற்பமாக விற்கும் சரக்குகளும் அதற்கான நுகர்வோர் அல்லது வாடிக்கையாளரை சென்றடையும். விற்பனை சங்கிலியில் தலைப்பகுதி பெரிய விற்பனைக்கு சொந்தமானது மற்றும் நடுப்பகுதி அதைவிட குறைந்த விற்பனைக்கு உரித்தானது எனில், கடைசிப்பகுதி குறைவாக விற்கும் சங்கதிகளுக்கானது. இந்த வால் பகுதியை தான் நீண்ட வால் என்கின்றனர்.

இது கொஞ்சம் பழைய கருத்தாக்கம் தான். ஆனால் இணைய யுகத்தில் இதற்கு புதிய வீச்சு கிடைத்திருப்பதை இணைய போக்கை தீர்மானிக்கும் இதழான வயர்டு பத்திரிகை சிறிஸ் ஆண்டர்சன் விளக்கி கூறினார். நீண்ட வால் நிகழ்வு பற்றி அவர் வயர்டு இதழில், 2004 ம் ஆண்டு பெரிய கட்டுரையை எழுதினார். பின்னர் இது புத்தகமாகவும் வெளியானது.

குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை முழுவதும் சென்றடையும் சாத்தியத்தை இணையம் வர்த்தகர்களுக்கு ஏற்படுத்தி தந்திருக்கிறது என்பது தான் ஆண்டர்சனின் கருத்து. மின்வணிக இணையதளம் அமேசான் , யாஹு மற்றும் ஆப்பிள் நிறுவன உதாரணங்களை வைத்துக்கொண்டு அவர் இதை விளக்கியிருந்தார்.

அவர் சொல்வதன் சுருக்கம் என்னவெனில், அமேசானில் கோடிக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் விற்பனையாகும் சில நூறு புத்தகங்களை விட்டு விடுங்கள். சில ஆயிரம் பிரதிகள் மட்டுமே விற்க கூடிய அல்லது சில நூறு பிரதிகளே விற்க கூடிய ஆயிரக்கணக்கான புத்தகங்கள் தங்களுக்கான வாடிக்கையாளர்களை இணையம் மூலம் எளித்தாக கண்டடையும் என்பது தான்.

வேறு விதமாக சொல்வதாயின் எல்லா புத்தகங்களும் பெஸ்ட செல்லராக இருக்க வேண்டியதில்லை. அல்லது பெஸ்ட் செல்லராக மாறாத புத்தகங்களை தோல்வி அடைந்ததாக கருத வேண்டியதில்லை. குறிப்பிட்ட ஒரு புத்தகம் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டுமே ஆர்வம், அளிக்கும் என்றால் அவர்களை மட்டும் சென்றடைந்தால் போதுமானது. உதாரணத்திற்கு பனிமலை பற்றிய ஒரு புத்தகம் பெஸ்ட் செல்லராக வாய்ப்பில்லை. ஆனால் பனிமலை பற்றி அறிய ஆர்வம் கொண்ட சில ஆயிரம் பேர் இருப்பார்கள். உலகம் முழுவதும் சிதறிக்கிடக்க கூடிய அந்த சில ஆயிரம் பேரை இணையம் மூலம் சென்றடையலாம் எனும் நம்பிக்கை அளிப்பது தான் நீண்ட வால் உத்தி.

அமேசானில் பெயர் தெரியாத பல எழுத்தாளர்களின் புத்தகங்கள், அதற்குறிய வாடிக்கையாளர்களை வெற்றிகரமாக பெற்றத்தை சுட்டிக்காட்டி ஆண்டர்சன் நீண்ட வால் எதிர்காலம் பற்றி பிரமாதமாக எழுதினார். அமேசானின் பரிந்துரைக்கும் அல்கோரிதம் இதற்கு பெருமளவிற்கு உதவுவதையும் அவர் சுட்டிக்காட்டினார். விக்கிபீடியா கட்டுரைகளில் இருந்து நெட்பிளிக்சில் பார்க்கப்படும் படங்கள் வரை இந்த நிகழ்வை காணலாம்.

ஆக, இணையத்தில் நீங்கள் களமிறங்குவதாக இருந்தால் வழக்கமாக சொல்லப்படும், ஹிட் ரேட்,வைரல் புகழ், டிராபிக் இது பற்றி எல்லாம் கவலைப்படாமல் உங்களுக்கான வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு செயல்பட்டால் நீண்ட வால் உங்களை கரை சேர்த்துவிடும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *