டெக் டிக்ஷனரி- 8 டிஜிட்டல் நேட்டிவ் ( digital native) – டிஜிட்டல் பூர்வகுடிகள்

dகி.மு, கி.பி என வரலாற்றில் குறிப்பிடப்படுவது போல, டிஜிட்டலுக்கு முன் ,டிஜிட்டலுக்கு பின் என இரண்டு வகையாக பிரித்துக்கொள்ளலாம். இணையம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் தாக்கத்தை உணர்த்தும் வகையில் இது அமைகிறது.

நவீன வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் தொழில்நுட்பங்கள் பல வகையாக அமைந்தாலும் இவை அனைத்திற்கும் டிஜிட்டல் அதாவது எணம் நுட்பமே அடிப்படையாக அமைகிறது. எல்லாவற்றையும், 0 மற்றும் 1 எனும் பைனரி வடிவில் மாற்றி அமைத்துக்கொள்ளும் சாத்தியமே இப்படி டிஜிட்டல் என சொல்லப்படுகிறது.

அந்த வகையில் டிஜிட்டர் தொழில்நுட்பங்கள் பரவலான பிறகு பிறந்தவர்கள் டிஜிட்டல் பூர்வகுடிகள் என அழைக்கப்படுகின்றனர். தொழில்நுட்பத்துடன் பிறந்தவர்கள் என்றும் புரிந்து கொள்ளலாம். டிஜிட்டல் தொழில்நுட்பம் பரவாகத்துவங்கிய பிறகு பிறந்தவர்கள் டிஜிட்டல் பூர்வகுடிகள் என குறிப்பிடப்பட்டாலும், இந்த பதம் குறிப்பிட்ட ஒரு தலைமுறையை குறிக்கவில்லை.

கம்ப்யூட்டர்கள்,இணையம்,வீடியோகேம் இத்யாதிகளுடன் பிறந்த வளர்ந்தவர்கள் அவற்றின் பயன்பாட்டில் கில்லாடிகளாக இருப்பதை உணர்த்த இந்த பதம் பயன்படுத்தப்படுகிறது.

பிள்ளை பருவத்திலேயே டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகவாது அவற்றின் பயன்பாட்டை இவர்களுக்கு இயல்பாக மாற்றிவிடுகிறது.எனவே முந்தைய தலைமுறை போல இவர்கள் டிஜிட்டல் நுடப்த்திற்கு பழகி கொள்ளவோ கற்றுக்கொள்ளவோ தேவை இருப்பதில்லை என கருதப்படுகிறது.

அந்த வகையில் டிஜிட்டல் யுக பிள்ளைகள் டிஜிட்டல் பூர்வகுடிகளாக கருதப்படுகின்றனர். இந்த தொழில்நுட்பங்களுக்கு தங்களை பழக்கி கொள்ளும் பழைய தலைமுறை டிஜிட்டல் குடியேறிவர்கள் என அறியப்படுகின்றனர்.

எனினும் டிஜிட்டல் பூர்வகுடிகள் எனும் பதம் சுவாரஸ்யமாக தோன்றினாலும் இது சர்ச்சைக்குறியதாகவும் இருக்கிறது. டிஜிட்டல் யுகத்தில் பிறந்ததாலேயே யாரும் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றுவிட முடியாது ,இதற்கு பயிற்சி தேவை என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. பயிற்சி இருந்தால் யாரும் டிஜிட்டல் நுட்பங்களில் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்று கருதப்படுகிறது.

இன்றைய குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை சொல்லிக்கொள்ளாமலே மேற்கொள்வதை இதுடன் பொருத்திப்பார்க்கலாம்.

இதற்கு மாறாக டிஜிட்டல் நுடபங்களுடன் பிறந்து வளர்பவர்கள் அவற்றி இயல்பாக பரிட்சயம் செய்து கொள்ளும் ஆற்றல் இந்த நுட்பங்களுக்கு பழக்கப்படுத்திக்கொள்ளும் பழைய தலைமுறை ஆற்றலில் இருந்து வேறுபட்டது என்றும் கருதப்படுகிறது.

இந்த விவாதம் தொடந்து கொண்டிருக்கிறது.

மார்க் பிரென்ஸ்கி எனும் கல்வியாளர் தான் இந்த பதத்தை முதன் முதலில் பிரபலமாக்கியவராக கருதப்படுகிறார்.

டிஜிட்டல் முறையில் கல்வி அளிக்கும் அவசியத்தை வலியுறுத்தி எழுதிய ஆய்வுக்கட்டுரை ஒன்றில் தான் டிஜிட்டல் பூர்வகுடிகள் எனும் கருத்தாக்கத்தை அவர் வலியுறுத்தியிருந்தார். http://marcprensky.com/

டெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்

டெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (Filter Bubble) – வடிகட்டல் குமிழ்

டிஜிட்டல் தலைமுறைக்கு தனித்திறன் உண்டா?

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.