பாட்காஸ்டிங் ஒரு அறிமுகம்

j-jVVxbrபாட்காஸ்டிங் வரலாறு எளிமையானது, ஆனால் கொஞ்சம் சிக்கலானது. பாட்காஸ்டிங்கிற்கான விளக்கமும் அவ்விதமே எளிமையானது, ஆனால் கொஞ்சம் குழப்பமானது. அடுத்த பதிவுக்கு முன், பாட்கஸ்டிஸ்டிங்கிற்கான ஒரு வரி விளக்கம்: பதிவிறக்கம் செய்து , விரும்பிய போது கேட்க கூடிய ஆடியோ அல்லது ரேடியோ நிகழ்ச்சி.

பாட்காஸ்டிங்கை இணைய வானொலி அல்லது ஆடியோ வலைப்பதிவு என்று சொல்லலாம். ஆனால் இரண்டில் இருந்தும் முக்கியமாக வேறுபட்டது. எப்படி எனில், இதை எப்போது வேண்டுமானாலும் கேட்டுக்கொள்ளலாம்.

வானொலி எனில் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் போது தான் கேட்க முடியும். வலைப்பதிவு எனில், அதை தேடிச்செல்ல வேண்டும். பாட்காஸ்ட்டிங்கில் இந்த நிபந்தனைகள் இல்லை. நிகழ்ச்சியின் ஒலி கோப்பை நம் சாதனத்திற்கு தருவித்து விரும்பிய போது கேட்கலாம்.

இப்படி நமக்கான சாதனத்தில் தரவிறக்கம் செய்து அல்லது தருவித்து, நாம் விரும்பிய நேரத்தில் கேட்க வழி செய்வது தான் பாட்காஸ்டிங் சிறப்பு.

பாட்காஸ்ட்டிங்கை தமிழில் சொல்ல விரும்பினால்,’ பாட் பரப்பு’ எனலாம். பாட் என்பது இங்கு ஆப்பிளின் ஐபாடை குறிக்கும். இந்த பெயர் வரலாறு பற்றி பின்னர் பார்க்கலாம்.

பாட்காஸ்டிங் வரலாறு கொஞ்சம் சர்ச்சைக்குறியது என்றாலும், ஆடம் கரி மற்றும் டேவ் வைனர் தான் இதன் பிரம்மாக்களாக அறியப்படுகின்றனர். பாட்காஸ்டிங் மற்றும் அதன் வரலாற்றை புரிந்து கொள்ள வேறு ஒரு சங்கதியை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அது RSS. …

பாட்காஸ்டிங்கில் குறிப்பிடப்படும் RSS. … சங் பரிவாரை குறிப்பதல்ல. இணைய உலகில் இது, ரிச் சைட் சம்மரி அல்லது ரியலி சிம்பிள் சிண்டிகேஷனை குறிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் பீட் என்றும் சொல்கின்றனர். தமிழில் செய்தியோடை வசதி என புரிந்து கொள்ளலாம்.

இணையதளம் அல்லது வலைப்பதிவில் புதுப்பிக்கப்படும் இணைய பக்கம் அல்லது தகவல் அந்த தளத்திற்கு செல்லாமலேயே நம்முடைய கம்ப்யூட்டர் அல்லது சாதனத்திற்கு அந்த தகவலை சுருக்கமான அறிவிக்கையாக கொண்டு வரும் வகையிலான மென்பொருள் சேவையே ஆர்.எஸ்.எஸ் பீட் எனப்படுகிறது.

இப்படி மென்பொருள் சேவை, இணையதள புதுப்பித்தலை அளிப்பதை வாசிக்க ஆர்.எஸ்.எஸ் ரீடர் தேவை. இத்தகைய ரீடர்கள் மூலம், இணையதளங்களின் புதிய செய்திகள் நம்மை தேடி வர வைக்கலாம். ..

வலைப்பதிவுகளில், பதிவைப்பெற இமெயிலை சமர்பிக்கவும் என குறிப்பிட்டும் வசதி இப்படி தான் செயல்படுகிறது. ஆக, இந்த வசதியை உங்களுக்கான பிரத்யேக செய்தி நிறுவனம் என குறிப்பிடலாம். நீங்கள் விரும்பிய தளங்களின் தகவல்களை உங்கள் சாதனத்திற்கு வரவைக்கலாம்.

நிற்க, ஆர்.எஸ்.எஸ் வசதி முதலில் வரி வடிவங்களுக்காக இருந்தது. 2000 ல் ஆடம் கரி மற்றும் டேவ் வைனர் ஆகிய இருவரும்எம்பி3 கோப்புகளை கொண்டு செல்லவும் ஏற்ற வகையில் இதை மாற்றுகின்றனர். இதையே பாட்காஸ்டிங் துவக்கப்புள்ளி எனக்கொள்ளலாம்.

2001 ல் டேவ் வைனர் பல இடங்களில் இருந்து ஒலிக்கோப்புகளை தரவிறக்கம் செய்யும் வழியை உருவாக்கினார். இதன் பிறகு 2004 ல் ஆடம் கரி , முதல் பாட்காஸ்டிங் சேவையை உருவாக்கினார்.

டெயிலி சோர்ஸ் கோட் என்பது அந்த முதல் பாட்காஸ்டிங் நிகழ்ச்சியின் பெயர். அடுத்த ஆண்டு கார்டியன் நாளிதழ் கட்டுரையில் பென் ஹாமர்ஸ்லே, முதல் முறையாக பாட்காஸ்டிங் எனும் வார்த்தையை பயன்படுத்துகிறார்.

அப்போது பிரபலமாக இருந்த ஆப்பிளின் இசை கேட்பு சாதனமான ஐபாடு மற்றும் பிராட்காஸ்டிங் இணைந்து பாட்காஸ்டிங் என சொல்லப்பட்டது. ஐபாடில் ஒளிபரப்பு என புரிந்து கொள்ளலாம்.

ஆரம்பத்தில் ஐபாடில் ஒலிக்கோப்புகளை தரவிறக்கம் செய்து கேட்பது பிரபலமாக இருந்தது. பின்னர் ஐடியூன்சில் இந்த வசதி அறிமுகமானது. இன்று எந்த விதமான சாதனத்திலும் பாட்காஸ்டிங் கேட்கலாம்.

பாட்காஸ்டிங் நிகழ்ச்சியை தொகுத்தளிப்பதற்கு என்றே பிரத்தயேக இணையதளங்கள் இருக்கின்றன. . ஆன்கர் போன்ற செயலிகள் எளிதாக பாட்காஸ்டிங்கை உருவாக்க வழி செய்கிறது.

பாட்காஸ்டிங் மாபெரும் இணைய மேடைகளில் ஒன்றாக உருவாகி இருக்கிறது. பல தளங்களில் பாட்காஸ்டிங் நிகழ்ச்சியை கேட்கலாம். தமிழில் அந்த அளவு பிரபலமாகவில்லை. குவோராவில் ஒரு கேள்வி தமிழில் பாட்காஸ்டிங் இருக்கிறதா என்பது?

தமிழில் பாட்காஸ்டிங் இல்லாமல் இல்லை. ஆனால் சொற்பம். பெரும்பாலும் ரேடியோ நிகழ்ச்சிகளின் தொகுப்பு. புதுமையான மூல பாட்காஸ்ட்டிங் நிகழ்ச்சிகளை தமிழில் உருவாக்க வேண்டும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *