எனிதிங் போன்ற இணைய சேவைகள் ஏற்கனவே இருக்கின்றன என்றாலும், இந்த சேவை உற்சாகம் அளிக்க கூடியதாகவே இருக்கிறது. காரணம், அதன் எளிமை. ஒரு இணைய பக்கத்தை மிக மிக எளிதாக உருவாக்கி கொள்ள எனிதிங் வழி செய்கிறது.
எனிதிங்கில் எதையும் எழுதலாம், எழுதியவுடன் பதிப்பிக்கலாம். அவ்வளவு தான் உங்களுக்கான இணைய பக்கம் தயார். இதுவே எனிதிங் தளத்தின் சிறப்பாக இருக்கிறது.
உங்களுக்கான இணைய பக்கத்தை உருவாக்கி கொள்ள உதவினாலும், அதற்காக நீங்கள் எதுவுமே செய்ய வேண்டாம். எனிதிங் இணையதளத்தில் உள்ள இணைய பலகை அல்லது இணைய எழுதியில் நீங்கள் விரும்பியதை டைப் செய்தால் போதும். அதன் பிறகு கீழே உள்ள வெளியீடு ( பப்ளிஷ்) வசதியை கிளிக் செய்தால் போதும், நீங்கள் டைப் செய்த தகவல் வெளியிடப்பட்டு உங்களுக்கான இணைய பக்கம் உருவாக்கப்பட்டுவிடும்.
பின்னர் விரும்பிய போது, இந்த பக்கத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம். வழக்கமாக டைப் செய்வதற்கு பயன்படுத்தும் வேர்டு கோப்பில் உள்ள வசதிகள் அனைத்தும் இதன் எழுதியில் இருக்கின்றன. இதில் டைப் செய்தவுடன் பதிப்பிக்கலாம் என்பது கூடுதல் வசதி.
இணையத்தில் வெளியிடும் வசதி புதிதல்ல.வலைப்பதிவு சேவைகள் அதை எப்போதோ சாத்தியமாக்கி விட்டன. வலைப்பதிவு செய்வது எளிது என்றாலும், அதை துவக்கிய பின் பராமரிப்பது பெரும் சவாலானது. ஆனால், எனிதிங் ஒரு பக்க வலைப்பதிவாக விளங்குகிறது. குறிப்பிட்ட ஏதேனும் ஒரு விஷயத்தை மட்டும் இதில் வெளியிட்டுக்கொள்ளலாம். அந்த வகையில் இதை ஒரு பக்க இணையதளமாகவும் கருதலாம்.
பேஸ்புக் நிலைத்தகவலுக்கு பதிலாக இந்த சேவையை பயன்படுத்திப்பாருங்கள். https://anything.pub/
இந்த சேவையை பயன்படுத்தி அழகான ஒரு பக்க இணையதளங்களை அமைத்துக்கொள்ளுங்கள்.
பி.கு; இதே போல எளிதாக வலைப்பதிவு செய்ய உதவும் டெலிகிரா.ப் சேவை இருக்கிறது. http://cybersimman.com/2019/01/02/blog-13/ இந்த சேவையும் அதே ரகம் தான்.
புதிய சேவையேத்தவிர புதுமையான சேவை இல்லை தான். ஏற்கனவே உள்ள சேவையின் நகல் என்றாலும், எளிமையாக பதிப்பிக்கும் வசதியின் அடையாளமாக இந்த சேவை அமைகிறது.