இணைய கட்டுரை எழுதலாம், எழுதியவுடன் பதிப்பிக்கலாம்!

Screenshot_2019-01-02 இணைய கட்டுரை எழுதலாம், எழுதியவுடன் பதிப்பிக்கலாம்வலைப்பதிவு என்று வரும்போது இப்போது மீடியம் (Medium) தான் அருமையான சேவை. மீடியம் தளத்தில் மிக எளிதாக வலைப்பதிவை துவக்கி பராமரிக்கலாம்.

இப்போது, மீடியம் போலவே மிக எளிதான வலைப்பதிவு சேவை ஒன்று அறிமுகமாகியிருக்கிறது. டெலிகிராப் (https://telegra.ph/ ) அந்த சேவை.

டெலிகிராப் தளத்தில் நுழைந்ததுமே, நீங்கள் எழுத துவங்கிவிடலாம். பயணர் பெயர் தேடுவது, பதிவு செய்வது, டெம்பிளேட் தேர்வு செய்வது போன்ற எந்த சம்பிரதாயங்களும் கிடையாது. எடுத்த எடுப்பில் எழுத துவங்கிவிடலாம்.

முதலில் கட்டுரை தலைப்பு, அதன் கீழ் நம் பெயரை குறிப்பிட்டு விட்டு, தொடர்ந்து கட்டுரை அல்லது பதிவை அடிக்கத்துவங்கலாம். அவ்வளவு தான் அடித்து முடித்ததும் பதிப்பித்து கொள்ளலாம். இடப்பக்கத்தில் பப்ளிஷ் வசதி இருக்கிறது. பதிப்பித்த பின் எடிட் வசதியும் அதே இடத்தில் தோன்றுகிறது. தேவை எனில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.

இடையே, புகைப்படங்களை சேர்க்கும் வசதியும் இடையூறு இல்லாமல் எட்டிப்பார்க்கிறது. நாம் அடித்தவற்றை செலக்ட் செய்தால், வார்த்தைகளை பெரிதாக்குவது, அடர்த்தியாக்குவது, இணைப்புகளை சேர்ப்பது ஆகிய வசதிகளும் வருகிறது.

இந்த தளத்தில் வெளியிடும் பதிவுகளை டெலிகிராம் மேசேஜிங் செயலியில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருகிறது.

தட்டச்சு செய்வதற்கான வேர்டு பிராசஸர் மற்றும் எளிய பதிப்பக வசதி இரண்டும் இணைந்த பதிப்பக சேவைகள் ஒரு சில இருக்கின்றன. அந்த வகையில் இது அருமையான புதிய வரவு.

இந்த பதிவும், டெலிகிராப் தளத்தில் அடித்தது தான்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.