ஏ.ஐ முன்னோடி போல்யாவைத்தெரியுமா?

2407PMS_08_ஜார்ஜ் போல்யாவை உங்களுக்குத்தெரியுமா? எனக்கும் இதற்கு முன் தெரியாது. தினமலர் பட்டம் மாணவர் சிறப்பு பதிப்பிற்காக எழுதும் ஏ.ஐ தொடருக்காக, செயற்கை நுண்ணறவின் வரலாற்றுச்சுவடுகளை தேடிக்கொண்டிருந்த போது அறிமுகமான மேதைகளில் போல்யாவும் ஒருவர்.

போல்யா, ஹங்கேரி அமெரிக்க கணிதவியல் மேதை என்கிறது விக்கிபீடியா. ஆனால் தர்கம் சார்ந்த சிந்தனையே அவரது கோட்டையாக இருந்திருக்கிறது.  லாஜிக் எனப்படும் தர்கம் சார்ந்து அவர் முன்வைத்த கணிதவியல் கோட்பாடுகளும், வழிகளும் இயந்திரங்களை சிந்திக்க வைப்பதற்கான அடிப்படையாக இருக்கிறது.

அதிலும் குறிப்பாக போல்யா, எழுதிய ஹவ் டு சால்வ் இட் எனும் புத்தகம், இத்துறைக்கான பாலபாடமாக இருக்கிறது,. எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண்பதற்கான அறிவியல் பூர்வ வழியை போல்யா இந்த புத்தகத்தில் விவரித்திருக்கிறார். இந்த வழிகள், எவருக்கும், எந்த பிரச்சனைக்கும் பொருந்தும்.

இந்த வழிகளே இயந்திரங்களை புத்திசாலிகளாக்கும் செயற்கை நுண்ணறிவு ஆய்விலும் அடிப்படையாக அமைகிறது. மேலும் போல்யா, தொடக்க பள்ளி மாணவர்களுக்கு கற்றுத்தரும் விதம் பற்றியும் ஆசிரியர்களுக்கு முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறார்.

அவரது ஹட் டு சால்வ் இட் புத்தகம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இன்றளவும் வாசிக்கப்படுகிறது. தமிழிலும் வர வேண்டும். அவரது கல்வி வழிகாட்டுதல் குறிப்புகளும் இன்றளவும் பின்பற்றக்கூடிய முன்னோடி சிந்தனைகளாகும்.

போல்யா பற்றி பட்டம் பதிப்பில் எழுதியது:

ai.jpegபோல்யா காட்டிய வழி!

செயற்கை நுண்ணறிவில் ஆர்வம் உள்ளவர்கள், ஹங்கேரிய கணித மேதை ஜார்ஜ் போல்யாவை (George Polya ) அறிந்திருக்க வேண்டும். ஏ.ஐ முன்னோடிகளில் ஒருவரான மார்வின் மின்ஸ்கி, எல்லோரும் பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி? என்பது தொடர்பான போல்யேவின் புத்தகத்தை படிக்க வேண்டும் என்கிறார்.

செயற்கை நுண்ணறிவுக்காக இல்லாவிட்டாலும் கூட, போல்யாவின் ஆக்கங்களை படிப்பது அவசியமானது தான். அதிலும் குறிப்பாக மாணவர்கள், போல்யாவை அறிந்திருப்பது நல்லது. ஏனெனில், போல்யாவின் எழுத்துக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் வழிகளை கற்றுத்தருகிறது.

அவர் எழுதிய, பிரச்சனைக்கு தீர்வு காண்பது எப்படி? (How to Solve It ) எனும் சிறிய புத்தகம், தீர்வுகளுக்கான வேத பைபிளாக கருதப்படுகிறது. இந்த புத்தகத்தில், போல்யா, எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண நான்கு அடிப்படை வழிகளை முன்வைக்கிறார்.

  1. முதலில், நீங்கள் பிரச்சனையை புரிந்து கொள்ள வேண்டும்.
  2. புரிதலுக்கு பிறகு, ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும்.
  3. அந்த திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.
  4. பின்னர் உங்கள் செயல்பாட்டை திரும்பி பார்த்து, அதை மேம்படுத்த வழி காண வேண்டும்.

இந்த நான்கு வழிகள் குறித்தும் அவர் விரிவாக எழுதியிருக்கிறார். பிரச்சனையில் நீங்கள் தீர்வு காண வேண்டியது என்ன?, பிரச்சனையை உங்களால் வேறு வார்த்தைகளில் விவரிக்க முடியுமா? , பிரச்சனையை புரிந்து கொள்ள உதவும் வகையில் புகைப்படம் அல்லது வரைபடத்தை உங்களால் யோசிக்க முடிகிறதா?, தீர்வு காண போதுமான தகவல்கள் உள்ளனவா?, பிரச்சனையை விளக்கும் எல்லா வார்த்தைகளும் உங்களுக்கு புரிகிறதா? போன்ற கேள்விகள் முதல் வழியை வெற்றி கொள்ள அவசியம் என்கிறார்.

அனுமானி்யுங்கள், சோதனை செய்யுங்கள், ஒரு முறையான பட்டியல் தயார் செய்யுங்கள், வாய்ப்புகளை பரிசீலியுங்கள் என்பது உள்ளிட்டவற்றை இரண்டாவது வழிக்கு விவரிக்கிறார். ஒரு போக்கு தென்படுகிறதா ? என பாருங்கள், ஒரு படம் வரையுங்கள், எளிய பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் போன்றவற்றையும் பரிந்துரைக்கிறார்.

மூன்றாவது வழிக்கு பொறுமையும் கவனமும் அவசியம் என்கிறார். நான்கவது எதிர்கால பிரச்சனை தீர்வுக்கு வழி காட்டும் என்கிறார்.

எல்லா வகையான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான கையேடாக இந்த புத்தகத்தை கருதலாம். இன்று வரை பல மொழிகளில் ஆர்வத்துடன் இந்த புத்தகம் வாசித்து பின்பற்றப்படுகிறது.

போல்யா, பின்பற்றும் வழிமுறைகள், ஹியரிஸ்டிக் என குறிப்பிடப்படுகிறது. அதாவது பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான குறுக்கு வழிகள் என பொருள்.

செயற்கை நுண்ணறிவு என்பது, பிரச்சனைகளுக்கு தீர்வு காண கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவதாகும். ஒரு பிரச்சனைக்கு தீர்வு இல்லாத போது அல்லது தீர்வு காண்பது கடினமாக இருக்கும் போது என்ன செய்வது? போன்ற கேள்விகள் எழும் போது அவற்றுக்கு தீர்வு காண, போல்யா காட்டிய வழி கைகொடுக்கிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *