நடிகர் சிரஞ்சீவி எப்போது அரசியல் கட்சி துவங்கினார் என்பது தெரியும். ( 2008 ல் அவர் பிராஜா ராஜ்ஜியம் கட்சி துவங்கி, 2009 ல் தேர்தலிலும் போட்டியிட்டார்.)
சரி, அவர் எப்போது சொந்தமாக இணையதளம் துவங்கினார் என்பது தெரியுமா? இந்தக்கேள்விக்கு பதில் தேடினால் இணையம் குழப்புகிறது. அதி தீவிர சிரஞ்சீவி ரசிகர்கள் அல்லது திவீர தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் யாரேனும் இந்த குழப்பத்தை தீர்த்து வைத்தால் நன்றாக இருக்கும்.
இந்த கேள்வில் அப்படி என்ன முக்கியத்துவம் என்று கேட்கலாம். விஷயம் இருக்கிறது. இந்த கேள்விக்கான சரியான பதிலை பொருத்து, நடிகர் சிரஞ்சீவி இணைய முன்னோடிகளில் ஒருவரா? என்பதை தீர்மானிக்கலாம்.
இணைய முன்னோடிகள் எனும் போது தொழில்நுட்ப வல்லுனர்களை மட்டும் கருத்தில் கொள்வதோடு, பயன்பாட்டு நோக்கிலும் முன்னோடியாக திகழ்ந்தவர்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில், ஒவ்வொரு துறையிலும், முதன் முதலில் இணையத்தை பயன்படுத்தியவர்கள் கவனத்தை ஈர்க்கின்றனர்.
இந்திய திரைப்படத்துறையை பொருத்தவரை சிரஞ்சீவி இந்த பெருமைக்குறியவரா? என்பது தெரிய வேண்டும்.
நண்பர்கள் கவனிக்க, இந்த விஷயத்தில் கூகுள் கைவிட்டுவிடுகிறது. சொந்த இணையதளம் துவக்கிய முதல் இந்திய நடிகர் என ஆங்கிலத்தில் தேடிப்பார்த்தால், கூகுள், வியப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு தகவலை சுட்டிக்காட்டுகிறது. ’சொந்த இணையதளம் துவக்கிய முதல் இந்திய நடிகர்’ எனும் தலைப்பிலான டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரை ஒன்றை கூகுள் சுட்டிக்காட்டுகிறது.
நடிகராக சிரஞ்சீவுக்கு நிறைய சிறப்புகள் உண்டு. சொந்த இணையதளம் அமைத்த முதல் இந்திய நடிகர் அவரா? என்பது தெரியவில்லை. கூகுள் பட்டியலிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரை தகவலும் இதை தீர்த்து வைப்பதாக இல்லை. சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்தக்கட்டுரை, அவரைப்பற்றி அறியப்படாத அற்புத தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள் என்கிறது. இதில் முதல் தகவலே, சொந்த இணையதளம் அமைத்த முதல் இந்திய நடிகர் என குறிப்பிடுகிறது. இப்போது எல்லா நடிகரும் சமூக ஊடகத்தில் தீவிரமாக இருந்தாலும், சிரஞ்சீவி, தனது சொந்த இணையதளம் அமைக்கும் அளவுக்கு காலத்தை முந்தியவராக இருக்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர்கள் சொந்த இணையதளம் வைத்திருப்பது எல்லாம் இன்று பெரிய விஷயம் இல்லை தான். ஆனால், சமூக ஊடகங்கள் எல்லாம் வருவதற்கு முன், இணைய இருப்பு என்பது முக்கியமாக இருந்தது. அப்போது சொந்த இணையதளம் வைத்திருப்பது என்பது விஷேசமாக இருந்தது. இதை முதலில் மேற்கொண்டவர் என்பது இன்னும் விசேஷமானது தானே.
இந்த பெருமைக்குரியர் சிரஞ்சீவி என்றால், அவர் இணைய பயன்பாட்டிலும் முன்னோடியாக இருந்திருக்கிறார் என்று பொருள். ஆனால், இணையம் மற்றும் தொழில்நுட்ப பரிட்சியத்திற்காக அறியப்பட்டவர் சிரஞ்சீவி அல்ல எனும் போது இது ஆச்சர்யம் அளிக்ககூடிய தகவல் தான்.
இணைய பயன்பாட்டில் சிறந்து விளன்கிய நடிகர்கள் என்று வரும் போது ஷம்மி கபூரும், அமிதாப் பச்சனும் தான் முதலில் நினைவுக்கு வருபவர். இதில் ஷம்மி கபூர் இந்திய இணைய முன்னோடிகளில் ஒருவர். ஆம், இந்தியாவுக்கு இணையம் வருவதற்கு முன்பே, இணையத்தை பயன்படுத்தியவர் அவர் என கருதப்படுகிறார். சொந்த இணையதளம் வைத்துக்கொண்ட முதல் இந்தியர்களில் அவர் ஒருவர். ( கவனிக்க, நடிகர்களில் மட்டும் அல்ல, இந்தியர்களிலேயே சொந்த இணையதளம் அமைத்த முதல் சிலரில் அவரு ஒருவர்).
இந்திய இணைய பயன்பாட்டு வரலாறு இப்படி இருக்க, சிரஞ்சீவி முதல் சொந்தம் இணையதளம் துவக்கிய நடிகர் என்றால், அது நிச்சயம் மைல்கல் நிகழ்வு தான். ஆனால், இது சரியான தகவல் தானா?
டைம்ஸ் கட்டுரையில் சிரஞ்சீவி இணையதளம் துவக்கிய ஆண்டோ, தளத்தின் பெயரோ குறிப்பிடப்பவில்லை என்பதால், இதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. கூகுளில் மேற்கொண்டு தேடிப்பார்த்தாலும், இது தொடர்பான பிற தகவல்கள் இல்லை. முக்கியமாக சிரஞ்சீவியின் விக்கிபீடியா பக்கத்திற்கு சென்று பார்த்தால், அவர் சொந்த இணையதளம் அமைத்தது பற்றி எந்த தகவலும் இல்லை. அது மட்டும் அல்ல, அவர் இணையதளத்திற்கான இணைப்பும் இல்லை. சிரஞ்சீவி பற்றிய ரசிகர் வலைப்பதிவு ஒன்று, முதல் சொந்த இணையதளம் அமைத்த இந்திய நடிகர் என போகிற போக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வளவு தான்.
சிரஞ்சீவி இணையதளம் துவக்கிய ஆண்டு தெரிந்தால், அதை ஷம்மி கபூர் தனது குடும்ப விவரங்களை அளிப்பதற்காக துவக்கிய ஜங்க்லி.ஆர்க் தளத்துடன் ஒப்பிட்டுப்பார்த்து தீர்மானிக்கலாம். ஜங்க்லி தளத்தின் பழைய வடிவத்தை இன்றும் பார்க்க முடிகிறது. இணைய காப்பகமான வேபேக்மிஷின் பக்கம் சென்றால், அதன் பழைய வடிவத்தையும் பார்க்க முடிகிறது. அதன் படி அந்த இணையதளம் 1998 துவக்கத்தில் இருந்து இருக்கிறது. அதற்கு முன்னரும் துவக்கப்பட்டிருக்கலாம்.
சிரஞ்சீவியின் இணையதளம் 1998 க்கு முன்னர் துவக்கப்பட்டதா? அதன் அடிச்சுவடு இணையத்தில் இருக்கிறதா? போன்றவை சுவாரஸ்யமான கேள்விகள். ஆகச்சிறந்த தேடியந்திரம் என கொண்டாடப்படும் கூகுளால் பதில் சொல்ல முடியாத கேள்விகள்.
* ஷம்மி கபூரின் இணைய ஆர்வம்: http://cybersimman.com/2019/09/15/web-37/
* ஷம்மி கபூரின் இணைய பக்கம் பிளேஷ்பேக் https://web.archive.org/web/19980127092650/http://www.junglee.org.in/
* இணைய வரலாற்றை திரும்பி பார்க்க: http://cybersimman.com/2019/09/27/web-42/
* சிரஞ்சீவி விக்கிபீடியா பக்கம்: https://en.wikipedia.org/wiki/Chiranjeevi