இந்தியாவுக்கு இணையம் வந்தது இப்படி தான் !

Miheer Mafatlal-kCnF--621x414@LiveMintஇந்திய இணைய வரலாற்றில் கிளைக்கதை ஒன்று இருக்கிறது. இந்தியாவுக்கு இணையம் வந்த விதம் தொடர்பான சுவாரஸ்யமான கதை அது. மறைந்த பாலிவுட் நடிகர் ஷம்மி கபூர் தான் இந்த கதையின் நாயகன் என்பது ஆச்சர்யமான விஷயம்.

ஆனால், ஷம்மி கபூரை அறிந்தவர்களுக்கு இதில் ஆச்சர்யபட ஒன்றுமில்லை என்று தெரியும். ஏனெனில், குதிக்கும் கோமாளி என பாராட்டப்பட்ட ஷம்மி, ஒரு தொழில்நுட்ப பிரியர் என்பது அவர்களுக்குத்தெரியும். அது மட்டும் அல்ல, கம்ப்யூட்டர் என்பது ஆய்வாளர்கள், மற்றும் தொழில்நுட்ப பித்தர்களின் சங்கதியாக மட்டுமே இருந்த காலத்தில் அவர் மேக் கம்ப்யூட்டரை பிரியத்துடன் பயன்படுத்திக்கொண்டிருந்தார்.

அது மட்டும் அல்ல, இந்தியாவில் இணையம் அறிமுகமாவதற்கு முன்னரே, ஷம்மி இணையத்தை பயன்படுத்தி வந்திருக்கிறார். அதாவது, இணைய வசதி பொதுமக்களுக்கு அறிமுகமாவதற்கு முன்னரே அவர் இணையத்தில் உலா வாந்திருக்கிறார். அதன் அருமையை அறிந்திருக்கிறார். இது எப்படி சாத்தியம்? இந்த கேள்விக்கான பதில் தான் நாம் பார்க்க இருக்கும் கிளைக்கதை.

1986 ல் கல்வி நிறுவனங்களை இணைக்கும் வகையில் ஆய்வு நோக்கில் உருவாக்கப்பட்ட எர்நெட் தான் இந்தியாவில் இணையத்திற்கு முன்னோடி என்றாலும், அடுத்த பல ஆண்டுகளுக்கு இந்த வசதி கல்வியாளர்களும், ஆய்வாளர்களும் மட்டுமே அறிந்ததாக இருந்தது. இவர்களைத்தவிர தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட சிலர் இணையம் பற்றி அறிந்திருந்தனர்.

இந்த சிலரில் ஒருவர் தான் பாலிவுட் நடிகர் ஷம்மி கபூர். அவருக்கு அப்போது கம்ப்யூட்டர்களில் ஆர்வம் இருந்தது. அவரிடம் சொந்தமாக ஆப்பிளின் மேக் கம்ப்யூட்டரும் இருந்தது. தொழில்நுட்ப ஆர்வலரான, மஹீர் மபட்லால் என்பவர், ஷம்மி கம்ப்யூட்டர் விரும்பி என்பதை அறிந்து , 1990 களின் துவக்கத்தில் அவரை தொடர்பு கொண்டிருக்கிறார். கம்ப்யூட்டர் ஆர்வம் இருவரையும் நல்ல நண்பர்களாக்கியது. அதன் பிறகு இவர்களுடன், விஜய் முகி எனும் மற்றொரு தொழில்நுட்ப ஆர்வலரும் சேர்ந்து கொண்டார். முகி, கம்ப்யூட்டர் ஆர்வத்தை வளர்த்தெடுக்க பாம்பே கம்ப்யூட்டர் கிளப் எனும் அமைப்பை நடத்தி வந்தார்.

இந்த நண்பர்களும், தொழில்நுட்ப ஆர்வலர்களும் அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம். இக்குழுவினர் சந்திப்பில் கம்ப்யூட்டர் தான் மையமாக இருக்கும். அதை பயன்படுத்துவது பற்றி தான் பெரும்பாலான உரையாடல் அமைந்திருக்கும். இந்த குழுவில் கணகசபாபதி பாண்டியன் என்பவரும் இணைந்திருந்தார்.

1995 ஜூலை மாதம், இந்த குழுவினர் ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த சந்திப்பு வி.எஸ்.என்.எல் நிறுவன தலைவர்- நிர்வாக இயக்குனர் பி.கே.சிங்கால் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் அமிதாப் குமார் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது, பாண்டியன் தொலைபேசி கம்பியை, அங்கிருந்த கம்பயூட்டருடன் இணைக்க முயற்சித்துக்கொண்டிருந்தார். சிறிது போராட்டத்திற்கு பின் இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்ற போது, கம்ப்யூட்ட திரையில் ஆப்பிள் நிறுவனத்தின் இவேர்ல்டு பக்கம் வந்து நின்றது. அந்த பக்கத்தில் இமெயில், தேடல் வசதி, அரட்டை அம்சம் ஆகியவை இருந்தன. அரட்டை அரையில் நுழைந்து உரையாடவும் முடிந்தது.

இதை எல்லாம் பார்த்தவர்களுக்கு வியப்பாக இருந்தது. அவர்களில் பலரும் தாங்கள் பார்த்தது ஆப்பிளின் இணைய பக்கம் என்பதும், அதை இணைய வசதி மூலம் அணுக முடிந்தது என்பதும் தெரிந்திருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் இணையம் என்பதையும் அறிந்திருக்கவில்லை.

ஆனால் விஎஸ்.என்.எல் அதிகாரிகள் சிங்கால் மற்றும் குமார் இருவர் மட்டும் வியப்படைவதற்கு பதில் குழப்பமடைந்திருந்தனர். தங்கள் கண்ட காட்சியை அவர்களால் நம்பவும் முடியவில்லை. வி.எஸ்.என்.எல் உதவி இல்லாமல் அவர்களால், உள்ளூர் எண் கொண்டு, இந்தியாவுக்கு வெளியே உள்ள வசதியை எப்படி அணுக முடிந்தது என அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் பயன்படுத்திய தொலைபேசி எண்ணை குறித்து வைத்துக்கொண்டனர். அன்று இரவு குமார், நேராக விஎஸ்.என்.எல் அலுவலகம் சென்று அந்த எண் பற்றி ஆய்வு செய்தார்.

அந்த தொலைபேசி எண் உள்ளூர் விஎஸ்.என்.எல் எண் தான் என்பதும், அதன் மூலமாக பிரிட்டிஷ் டெலிகாம் எண்ணை தொடர்பு கொண்டு இணையத்தை அணுகியதும் அவருக்கு தெரிய வந்தது. அது மட்டும் அல்லாமல் இந்தியாவில் இருந்து ஒரு சிலர், ஆப்பிள் இவேர்ல்ட் தளத்தை அணுகி வருவதும் தெரிய வந்தது.

ஷம்மி மற்றும் நண்பர்கள் தான் அந்த ஒரு சிலர். அவர்களால் எப்படி இவேர்ல்டு சேவையை அணுக முடிந்தது என்றால், அதற்கு ஒரு சின்ன கதை இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் 1994 ம் ஆண்டு இவேர்ல்டு சேவையை அறிமுகம் செய்த போதும் உலகம் முழுவதும் உள்ள தனது கம்ப்யூட்டர் பயனாளிகள் பலருக்கு அதை முன்னோட்ட வசதியாக வழங்கியது. இந்தியாவில் மபத்லால், ஷம்மி கபூர் ஆகியோருக்கு இந்த முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இப்படி தான், அவர்களால் இந்தியாவில் இருந்து இணைய வசதியை அணுக முடிந்தது. இந்த வசதியை அவர்கள் தாங்கள் அனுபவித்ததோடு, இந்திய இணைய பயனாளிகள் சங்கம் (IUCI) எனும் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் நண்பர்கள் மத்தியிலும் அறிமுகம் செய்து வந்தனர். இதே போல தான், சிங்கால், குமார் பங்கேற்ற சந்திப்பிலும் இணையம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் நடைபெற்ற மறு நாள், வி.எஸ்.என்.எல் அலுவலகம் வருமாறு இந்த குழுவினருக்கு அழைப்பு அனுப்ப பட்டது. நண்பர்களும் ஆர்வத்துடன் சென்று தங்கள் அனுபவத்தை விளக்கினர். அடுத்த சில மாதங்களில், இந்தியாவில் பொதுமக்களுக்கு இணைய வசதியை விஎஸ்.என்.எல் நிறுவனம் அறிமுகம் செய்தது.

சுதந்திர தினத்தன்று நிகழந்த இந்த அறிமுகத்தில் சில தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டாலும், இந்திய பொதுமக்களுக்கு இணையம் எனும் அற்புதம் சாத்தியமானது.

இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, ஷம்மி கபூர் குழுவினரின் இணைய காட்சி விளக்கம் தான். அந்த நிகழ்வே, இந்தியாவில் இணைய பயனாளிகள் இருப்பதையும், இந்தியா இணைய வசதிக்கு தயாராகிவிட்டது என்பதையும் வி.எஸ்.என்.எல் நிறுவன அதிகாரிகளுக்கு புரிய வைத்தது.

ஆக, இந்த கதையின் நாயகனான ஷம்மி கபூர் பரவலாக அறியப்பட்டது போல், நட்சத்திர நடிகர் மட்டும் அல்ல: இந்தியாவின் இணைய பயனாளிகளில் முன்னோடிகளில் அவரு ஒருவர். இணையத்தின் ஆரம்ப காலத்தில் அதன் இயல்புகளை அறிந்திருந்ததோடு, அதை நண்பர்களிடமும் அவர் ஆர்வத்துடன் விளக்கியிருக்கிறார். மேலும், இணைய பயனாளிகள் சங்கத்திலும் முக்கிய அங்கம் வகித்திருக்கிறார். இந்தியாவில் முதன் முதலில் சொந்தமாக இணையதளம் உருவாக்கி கொண்டவர்களில் அவரும் ஒருவர். ( ஜங்க்லி.காம்). அநேகமாக இந்திய நடிகர்களில் சொந்த இணைய இணைய தளம் உருவாக்கி முதல் நடிகர் அவர் தான்.

இணைய நிறுவனமான யாஹு, இந்தியாவில் தனது அலுவலகத்தை திறந்த போது, சிறப்பு விருந்தினராக ஷம்மி கபூரை அழைத்திருந்தது. தனது திரைப்படம் மூலம் யாஹூ எனும் உற்சாக கூச்சல் மூலம் அந்த வார்த்தையை பிரபலமாக்கியவர் அல்லவா!

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.