இது முகங்களை தேடும் தேடியந்திரம்

pimeyes.comரிவர்ஸ் இமேஜ் சர்ச் இஞ்சின் என்று சொல்லப்படும், மறு உருவ தேடியந்திரங்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கூகுள் போன்ற வழக்கமான முறையில் தகவல்களை தேடித்தருவதற்கு மாறாக, உருவங்களை தேடித்தரும் பிரத்யேக தேடியந்திரங்களே இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன.

பொதுவாக தேடியந்திரங்கள், கீவேர்டு எனப்படும் குறிச்சொற்களை சமர்பித்து தேடுகிறோம். நாம் தேடும் குறிப்பிட்ட குறிச்சொல் தொடர்பான முடிவுகள் பட்டியலிடப்படும். தகவல்களை தேடும் இதே முறையில், படங்களை அதாவது உருவங்களையும் தேடலாம்.

இப்படி உருவங்களை தேடும் போது, கூகுள் போன்ற தேடியந்திரங்களில், இமேஜ் என கிளிக் செய்தால், தொடர்புடைய படங்கள் பட்டியலிடப்படுவதை பார்க்கலாம். இதற்கு மாறாக, ஒரு புகைப்படத்தையே பதிவேற்றி அதே போன்ற படத்தை தேடி வழி செய்யும் தேடியந்திரங்கள் இருக்கின்றன. இந்த வகை தேடலே மறு உருவ தேடல் என குறிப்பிடப்படுகிறது. உருவங்களை அடிப்படையாக கொண்டு இந்த தேடல் அமைகிறது.

இணையத்தில் பகிரப்படும் படத்தின் முந்தைய மற்றும் மூல வடிவத்தை அறிந்து கொள்ள இந்த வகை தேடல் உதவுகிறது. பொய்ச்செய்திகளை கண்டறிவதில் இந்த நுட்பம் பேரூதவியாக அமைகிறது.

கூகுளும் இந்த வகை மறு உருவ தேடல் வசதியை வழங்கினாலும், ’டைனிஐ’ இந்த பிரிவில் முன்னோடியாகவும், முன்னணி தேடியந்திரமாகவும் இருக்கிறது.

இந்த வகை தேடியந்திரங்களில் அடுத்த கட்டமாக இப்போது, முகங்களை தேடுவதற்கான தேடியந்திரங்கள் அறிமுகமாகத்துவங்கியிருக்கின்றன. பிம்ஐஸ் (https://pimeyes.com/en/) இத்தகைய முகம் தேடியந்திரம் தான்.

இந்த தேடியந்திரத்தில் ஒரு உருவ படத்தை சமர்பித்து, அதில் உள்ள முகத்தை தேடலாம். அதே முகம் போன்ற படங்களை தேடித்தருவதோடு, அதே படம் இணையத்தில் எங்கெல்லாம் இடம் பெற்றிருக்கிறது என்றும் இது தேடித்தருகிறது.

பேசியல் ரிகக்னேஷன் என்று சொல்லப்படும் முகமறிதல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் இந்த தேடியந்திரம் கோடிக்கணக்கான படங்களை தனது பட்டியலில் வைத்துக்கொண்டு அவற்றில் இருந்து பொருத்தமான படங்களை தேடித்தருகிறது. முகங்களின் அம்சங்கள் அறிய செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை பயன்படுத்துகிறது.

முகங்களை தேடலாம் என்பது சுவாரஸ்யமான விஷயம் தான். உங்கள் படத்தை வேறு யார் வேண்டுமானால் சமர்பிக்கலாம் போன்ற வில்லங்கமான அம்சங்களும் இருக்கின்றன. அடிப்படை சேவை இலவசமானது என்றாலும், கூடுதல் அம்சங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

கட்டண உறுப்பினராக சேர்ந்தால், நீங்கள் சம்பரிக்கும் முகம் இணையத்தில் எங்கேனும் வெளியானால் உடனே அதுப்பற்றி இமெயிலில் தகவல் அளிக்கிறது. இது போன்ற எச்சரிக்கை தகவல் அளிக்கும் அம்சங்கள் கட்டண சேவையாக வழங்கப்படுகிறது.

புதுமையான தேடியந்திரம் தான். ஆனால், முகமறிதல் நுட்பம் தனியுரிமை பிரச்சனைகளை கொண்டிருப்பதை மறந்துவிடக்கூடாது. பிம் ஐஸ் தேடியந்திரத்தை பொறுத்தவரை சமர்பிக்கப்படும் எந்த படத்தையும் சேமித்து வைப்பதில்லை மற்றும் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதில்லை என சொல்கிறது.

தினசரி பயன்படுத்தக்கூடிய ரகத்தைச்சேர்ந்த தேடியந்திரம் இல்லை என்றாலும் தெரிந்து கொள்ள வேண்டிய தேடியந்திரம் தான்.

தேடியந்திர முகவரி: https://pimeyes.com/en/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *