டிக்டாக்’ உள்ளிட்ட பல செயலிகளின் தடை தொடர்பான விவாதங்களுக்கு மத்தியில், இந்தியச் செயலிகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பலரால் முன்வைக்கப்படுகிறது. இந்தப் பின்னணியில், தமிழர்களாகிய நாம், தமிழ் இணையத்தளங்கள் தொடர்பான ஆத்ம விசாரணையில் ஈடுபடலாம் என நினைக்கிறேன்.
தமிழில் உருவாக்கப்பட வேண்டிய இணையத்தளங்கள் என்றும் ஒரு பட்டியல் போடலாம். அவற்றை யார் உருவாக்குவது? எப்படி உருவாக்குவது? என்பது தொடர்பான கேள்விகள் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போதைக்குத் தமிழில் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட இணையத்தளங்களின் பட்டியல் நம்மிடம் இருக்கிறதா என கேட்டுக்கொள்ளலாம்.
தமிழ் இணையத்தளங்கள் என கூகுளில் தேடினால் வரக்கூடிய முடிவுகள் அதிகம் பயனுள்ளதாகத் தோன்றவில்லை.
இதன் பொருள், தமிழ் இணையத்தளங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் அறிமுகம் செய்துகொள்ளக்கூடிய இணையக் கையேடு இல்லை என்பதே ஆகும். (அப்படி ஒரு இணையப் பட்டியல் இருந்தால் தெரிவிக்கவும். மகிழ்ச்சியுடன் இக்கருத்தை திரும்பப் பெறுகிறேன்).
இப்படி கேள்வி எழுப்புவதன் நோக்கம், தமிழ் இணையப் பரப்பின் போதாமையை இடித்துரைப்பது அல்ல. மாறாக, இப்பரப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய சிந்தனையை ஏற்படுத்துவதே ஆகும். அதாவது, தமிழின் ஆகச்சிறந்த இணையத்தளங்களை அழியாமல் காக்கும் பணியை நாம் மேற்கொண்டிருக்கிறோமா? எனும் கேள்வியை கேட்டுக்கொள்வது.
தமிழின் முக்கிய இணையத்தளங்களைக் கண்டறிவது; அவற்றைப் பாதுகாக்கும் வழிகளை மேற்கொள்வது ஆகிய செயல்கள் இந்தக் கேள்விக்கான பதிலாக அமையும்.
இந்த இடத்தில், சர்வதேச அளவில் இணையத்தில் மேற்கொள்ளப்படும் ஆவணக் காப்பக முயற்சிகளைப் பற்றி அறிந்துகொள்வது நல்லது. அதிலும் குறிப்பாக, பிரிட்டிஷ் நூலகம் சார்பில் பாதுகாக்கப்படும் 100 இணையத்தளங்களின் பட்டியலைத் தெரிந்துகொள்வது அவசியம்.
பிரிட்டிஷ் நூலக இணையத்தளத்தில், 100 இணையத்தளங்கள் எனும் தலைப்பில், இதற்காக அமைக்கப்பட்டுள்ள தனிப்பகுதியில், வருங்கால தலைமுறைக்காகப் பாதுகாக்கப்படும் 100 இணையத்தளங்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. இந்தத் தளங்கள் பாதுகாக்கப்படுவதற்கான விளக்கமும் அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலவிதமான நோக்கங்களுக்காக இணையத்தளங்கள் உருவாக்கப்படுகின்றன. அப்படி உருவாக்கப்பட்மு இணையத்தளங்கள், பல காரணங்களால் காணாமலும் போய்க்கொண்டிருக்கின்றன. அதாவது, இணையத்தளங்கள் கைவிடப்படலாம்; மூடப்படலாம்; பராமரிக்கப்படாமல் விடப்படலாம். காரணம் என்னவாக இருந்தாலும், இணையத்தளங்களின் டிஜிட்டல் உள்ளடக்கத்தை இழந்துவிட்டோம் என்றால், அவற்றை திரும்பப் பெறுவது என்பது இயலாததாகிவிடும்.
இணையத்தில் இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் இணையத்தளங்கள் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் என்று கேட்கலாம். இவை தனிப்பட்ட இழப்புகள் மட்டும் அல்ல; வரலாற்று நோக்கில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இழப்பாகும்.
எப்படி, கடந்த கால வரலாற்றை நாம் கல்வெட்டுகள், செப்பேடுகள் உள்ளிட்ட பதிவுகள் மூலம் தெரிந்துகொள்கிறோமோ அதேபோல, வருங்கால ஆய்வாளர்கள், இக்காலத்து டிஜிட்டல் சுவடுகள் மூலம்தான் ஆய்வுகளை மேற்கொள்வார்கள். அப்போது அவர்களுக்கு, பழைய இணையத்தளங்கள் என்பவை டிஜிட்டல் பொக்கிஷங்களாக விளங்கும். அவற்றில் இருந்து பலவிதமான தகவல்களை வருங்கால ஆய்வாளர்கள் தெரிந்துகொள்ளலாம்.
எனில், இணைய சுவடுகள் இல்லாமல் போகும் இணையத்தளங்கள் வருங்கால ஆய்வாளர்களுக்குப் பேரிழப்புதானே.
எனவேதான், இணையத்தளங்களை குறிப்பாக, முக்கியத் தளங்களைப் பாதுகாப்பது அவசியமாகிறது. பாதுகாப்பது என்பது அவற்றை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைப்பதாகும். இவ்வாறு செய்யும்போது, குறிப்பிட்ட இணையத்தளம் இல்லாமல் போனாலும்கூட, அதன் டிஜிட்டல் வடிவத்தை இணையக் காப்பகத்தின் மூலம் அணுகலாம். இது ஆய்வு நோக்கில் மட்டும் அல்ல, இன்னும் பலவிதத்தில் கைகொடுக்கும்.
இந்தப் புரிதலுடன்தான், பழைய இணையத்தளங்களைச் சேமித்துப் பாதுகாக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் முதன்மையானதாக, ‘இண்டெர்நெட் ஆர்க்கைவ்’ (https://archive.org/) திட்டத்தைக் குறிப்பிடலாம். லாபநோக்கில்லாத அமைப்பாகச் செயல்படும் இந்தத் திட்டத்தின் கீழ், பெரும்பாலான இணையத்தளங்களின் டிஜிட்டல் நகல்கள் சேமிக்கப்பட்டு வருகின்றன. 1996-ம் ஆண்டு முதல் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழைய இணையத்தளம் அல்லது தற்போதைய இணையத்தளத்தின் பழைய வடிவத்தை அறிய விரும்பினால், இந்தக் காப்பகத்தில் தேடிப் பார்க்கலாம்.
இதேபோல, பிரிட்டனில் இணையக் காப்பகத் திட்டம், ‘யூகே வெப் ஆர்க்கைவ்’ (https://www.webarchive.org.uk/en/ukwa/about) எனும் பெயரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரிட்டிஷ் நூலகம், கேம்பிரிட்ஜ் பல்கலை நூலகங்கள் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ், அந்நாட்டின் அனைத்து இணையத்தளங்களும் ஆண்டுக்கு ஒரு முறை டிஜிட்டல் வடிவில் சேமிக்கப்படுகின்றன. இதன்மூலம், கோடிக்கணக்கான இணையப் பக்கங்களும், அவற்றின் உள்ளடக்கமும் சேமிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பார்வைக்கு உள்ள இணையப் பக்கங்கள் மட்டுமே இவ்வாறு சேமிக்கப்படுகின்றன.
இந்த இணையக் காப்பகத்தில் உள்ள இணையத்தளங்களைத் தேடிப் பார்க்கும் வசதியும், திட்டத்தின் இணையத்தளத்தில் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் விடுபட்ட இணையத்தளங்களைச் சேமிக்கப்படுவதற்காகப் பரிந்துரைக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
இணையத்தளங்களைச் சேமிப்பது என்பது சட்ட நோக்கிலான அம்சங்களையும் கொண்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்தவகையில், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய யுனைடெட் கிங்டம்மின் அனைத்து இணையப் பக்கங்களையும் சேமித்து ஆவணப்படுத்தும் உரிமை, பிரிட்டிஷ் நூலகம், ஸ்காட்லாந்து தேசிய நூலகம், வேல்ஸ் தேசிய நூலகம் உள்ளிட்ட நூலகங்களுக்கு 2013-ம் ஆண்டு வழங்கப்பட்டது.
இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டதைக் குறிக்கும் வகையில், அதே ஆண்டு, நூலக நிர்வாகிகள் மற்றும் வல்லுநர்கள் ஒன்றிணைந்து, எதிர்கால தலைமுறைக்காகப் பாதுகாக்கப்பட வேண்டிய நூறு இணையத்தளங்களைத் தேர்வு செய்து பட்டியலிட்டுள்ளனர். (http://www.bl.uk/100websites/index.html) ஸ்காட்லாந்து பகுதிக்கான ஸ்காட்லாந்து.ஆர்க் இணையத்தளம், பிபிசி செய்தி நிறுவனத்தின் இணையத்தளம், இபே மற்றும் அமேசான் தளங்களின் யுகே இணையத்தளம் உள்ளிட்டவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மேலும், பள்ளி சத்துணவு பற்றி வலைப்பதிவு செய்து பிரபலமான மாணவி மார்த்தா பைனேவின் இணையத்தளம், கருத்தரங்குகளில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என வலியுறுத்தும் ரைட்ஸ் ஆஃப் வுமன் இணையத்தளம், பொதுமக்கள் உருவாக்கும் பயணக் கையேடான டிரிப் அட்வைசர் உள்ளிட்ட தளங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. விக்கிபீடியாவுக்கு முன்னர் உருவான பயனர் பங்கேற்புக் களஞ்சியமான H2g2 தளமும் இடம்பெற்றுள்ளது.
பட்டியலில் உள்ள 100 தளங்களும், ஏதோ ஒருவிதத்தில் முக்கியமானவை. எதிர்கால தலைமுறையினர் நோக்கும்போது, கடந்தகால வாழ்க்கை பற்றிய டிஜிட்டல் பிரதிபலிப்பாக விளங்கக்கூடியவையாக இருக்கின்றன.
இந்தப் பட்டியலில் இடம்பெற வேண்டும் என பொதுமக்கள் நினைக்கும் தளங்களையும் பரிந்துரைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நூறு தளங்கள் என்பது ஒரு அடையாள நோக்கிலான பட்டியல்தான். விஷயம் என்னவெனில், முக்கிய இணையத்தளங்களை நாம் காலத்தால் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பதுதான். இந்த எண்ணத்தை கச்சிதமாக 100 இணையதளங்கள் பட்டியல் உணர்த்துகிறது.
இதேபோன்ற இணையக் காப்பக முயற்சி ஒவ்வொரு நாட்டிலும் தேவை. அந்தவகையில் பார்த்தால், இந்தியாவில் நாம் பாதுகாக்க வேண்டிய 100 இணையத்தளங்கள் எவை; தமிழில் பாதுகாக்க வேண்டிய 100 இணைத்யதளங்கள் எவை?
தமிழ் இணையத்தளங்களின் ஆவணக் காப்பக முயற்சியை, எதிர்கால நோக்கில் தமிழில் பாதுகாக்கப்பட வேண்டிய 100 இணையத்தளங்கள் பட்டியலில் இருந்து துவங்கலாம். அரசிடமும், நூலகங்களிடமும் இந்தக் கோரிக்கையை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
தமிழில் சேமிக்கப்பட வேண்டும் என நீங்கள் கருதும் இணையதங்கள் எவை?
பட்டியலிடுங்கள்..
–
https://indrayaseithi.com/special-news/tamil-websites-need-to-be-protected-for-future-generations/2020/07/1204/