கொரோனா காலத்தில் பிரபலமான இணையதளங்களில் வேர்ல்டோமீட்டர் (https://www.worldometers.info/) இணையதளமும் ஒன்று. பல்வேறு தலைப்புகளில் உலக நாடுகளின் புள்ளி விவரங்களை தொகுத்தளிக்கும் இந்த தளம், கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்த துவங்கிய காலத்தில், வைரஸ் பாதிப்பு தொடர்பான புள்ளிவிவரங்களை தொகுத்தளிப்பதற்கான தனிப்பக்கம் மூலம் பரவலாக அறியப்பட்டது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, குறிப்பிட்ட நாடுகளில் தாக்கத்தின் விவரம் உள்ளிட்ட தகவல்களை அளித்த இந்த பக்கத்தை, ஊடகங்களும், தனிமனிதர்களும் ஆர்வத்துடன் பின்பற்றினர்.
இந்த தளத்தின் பின்னணி தொடர்பாக யாரும் பெரிதாக கவலைப்படவில்லை என்றாலும், ( இது தொடர்பாக தனியே பார்க்கலாம்), கொரோனா வைரஸ் பாதிப்பு புள்ளிவிவரங்களுக்கான இருப்பிடமாக இந்த தளம் அனைவரது மனதிலும் பதிந்தது.
வேர்ல்டோமீட்டர் சிறந்த தளமா என்பது தெரியவில்லை, கொரோனா புள்ளிவிவரங்களை எளிதாக அணுகு வழி செய்வதில் அந்த தளத்தைவிட வைரஸ் அப்டேட்ஸ்.நெட் (https://virusupdates.net/ ) தளம் சிறந்ததாக இருக்கிறது.
இந்த தளம், இன்றைய நிலவரப்படு கொரோனா வைரஸ் பாதிப்பு விவரங்களை முகப்பு பக்கத்தில் முன்வைக்கிறது. உலக அளவிலான பாதிப்பு எண்ணிக்கை தவிர, பயனாளிகளின் நாட்டின் பாதிப்பு எண்ணிக்கையும் முன்வைக்கப்படுகிறது. இந்த பக்கம் தானாக புதுப்பிக்கப்படுவதால், எப்போது விஜயம் செய்தாலும் அண்மை விவரங்களை பார்க்கலாம்.
அதோடு, பயனாளிகள் தங்கள் நாட்டின் பாதிப்பு விவரத்தை உலக நாடுகளின் பட்டியலில் தனியே தேட வேண்டாம். அவர்கள் இருப்பிடம் அடிப்படையில் நாடு உணரப்பட்டு தொடர்புடைய விவரம் தானாக தோன்றுகிறது.
இந்த அம்சம் வேண்டியே இந்த தளத்தை அமைத்ததாக அதை உருவாக்கிய டோனிக்ஸ் எனும் மென்பொருளாலர் கூறியுள்ளார்.
வேர்ல்டோமீட்டர் தளத்தில் கொரோனா பாதிப்பு விவரங்களை அறிய அந்த பக்கத்தை புதுப்பிக்க வேண்டியிருப்பதும், தனது நாட்டு தகவலை அறிய நாடுகளின் நீளமான பட்டியலை இழுக்க வேண்டியிருப்பதாலும் அதிருப்தி அடைந்து, தானாக கொரொனா பாதிப்பு புள்ளிவிவரங்களை தெரிந்து கொள்ள உதவும் இந்த தளத்தை உருவாக்கியதாக அவர் பிராடக்ட் ஹண்ட் தளத்தில் கூறியுள்ளார்.