கோவிட்.ஷாப்பிங் ( https://covid.shopping/)தளத்தை அற்புதமான தளம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. அடிப்படையில் எளிமையான அந்த தளத்தை, கொரோனா கால சூழலில் பொருத்திப்பார்த்தால், அதன் அருமையை புரிந்து கொள்ளலாம்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றாக பரவத்துவங்கி உலகை திகைக்க வைத்த காலத்தில், பல நாடுகளில் பொதுமுடக்கம் மற்றும் தனிமைப்படுத்தல் அறிவிக்கப்பட்ட பின்னணியில் இந்த தளம் உருவாக்கப்பட்டது.
பொதுமுடக்கம் ஒருவித குழப்பத்தையும், நிச்சயமற்றத்தன்மையையும் ஏற்படுத்திய நிலையில், பலருக்கும் பலவித பீதிகளும், அச்சங்களும் இருந்தன. இவற்றில் பிரதானமானது, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்குமா என்பதாக இருந்ததால் பெரும்பாலானோர் கிடைத்த பொருட்களை எல்லாம் வாங்கி குவித்தனர்.
இதனால், ஒரு பக்கம் கடைகளில் இருந்த பொருட்கள் காலியாகி, இன்னொரு பக்கம் வீண் பதற்றம் உண்டானது. இந்நிலையில், எல்லோரையும் பீதி உச்சியில் இருந்து தரைக்கு கொண்டு வருவது அவசியமானது.
இந்த பின்னணியில் தான் கோவிட்.ஷாப்பிங் தளம் அமைக்கப்பட்டது. அச்சத்தில் கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் வாங்கி குவிப்பதற்கு பதில், ஒவ்வொருவரும் தங்கள் தேவைக்கு ஏற்ப எந்த அத்தியாவசிய பொருட்களை எல்லாம் வாங்க வேண்டும் எனும் பட்டியலை இந்த தளம் உருவாக்கித்தந்தது.
பொது முடக்கத்தால் வீட்டில் இருக்க வேண்டிய காலம், வீட்டில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை குறிப்பிட்டால், எந்த பொருட்கள் எல்லாம் தேவை எனும் பட்டியலை அளிக்கும் வகையில் இந்த தளம் அமைக்கப்பட்டிருந்தது.
அத்தியாவசிய பொருட்கள், காலை உணவு பொருட்கள், மதிய உணவு பொருட்கள் என தனித்தனியாக பட்டியலை உருவாக்கி கொள்ளலாம். இந்த பட்டியலை குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியும் அளிக்கப்பட்டிருந்தது.
கச்சிதமான பட்டியல் என்றோ, முழுமையான பரிந்துரை என்றோ சொல்ல முடியாவிட்டாலும், கொரோனா ஏற்படுத்தியிருந்த பரபரப்புக்கும், பதற்றத்திற்கும் மத்தியில், நிதானத்துடன் நடந்து கொள்வதற்கான தேவையை வலியுறுத்துவதற்கான சிறிய முயற்சியாக இந்த தளம் அமைந்தது.
நானும், மனைவியும் ஐரோப்பாவில் பொது முடக்கத்தில் சிக்கி இருக்கிறோம், பொருட்களை வாங்கி வைக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்காக பொதுவான பய பீதிக்கு நாங்களும் பங்களிக்க விரும்பவில்லை என்பதால், போதுமான பொருட்களை பட்டியலிடுவதற்கான இந்த தளத்தை உருவாக்கியதாக, இதன் பின்னே உள்ள சாஷா கோஸ் (https://koss.nocorp.me/) எனும் மென்பொருளாலர் கூறியுள்ளார்.
கொரோனா போன்ற வையம் தழுவிய பாதிப்பு காலத்தில் அவரவர் தங்களால் முடிந்த சிறிய பங்களிப்பை செய்தால், நிலைமை மேம்பட அந்த அளவுக்கு உதவ முடியும் என்பதற்கான எளிய உதாரணமாக இந்த தளம் அமைகிறது.
–
கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட இன்னொரு பொருத்தமான தளம், மேவிலீவ்.காம் தளம். கொரோனா பரவலை தடுக்க பெரும்பாலான நாடுகள் பயண தடையை அறிவிக்கத்துவங்கிய சூழலில், இந்த தளம் நாடுகளை பட்டியலிட்டு, அந்த நாடுகளுக்கான பயண தடை விவரங்களை சுட்டிக்காட்டியது. https://mayweleave.com/?
மார்ச் மாதம் அமைக்கப்பட்ட இந்த தளம் அதன் பிறகு புதுப்பிக்கப்படவில்லை என்றாலும், இந்த தளம் தொடர்ந்து புதுப்பிக்கப்படவில்லை எனும் தகவலை பொறுப்புடன் முகப்பு பக்கத்திலேயே இடம்பெற வைத்திருந்தனர்.
–
புதிய இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்ள இணைய மலர் மின்மடலில் இணையுங்கள்:https://cybersimman.substack.com/