தமிழில் இமெயில் கலாச்சாரம், பயன்பாடு சார்ந்து யார் எழுதிக்கொண்டிருக்கின்றனர் என்று தெரியவில்லை. ஆனால், தமிழகத்தில் இருந்து ஒருவர் ஆங்கிலத்தில் இமெயில் பயன்பாட்டு குறிப்புகளை எழுதியிருக்கிறார். ரவிடிடீர்ம்ஸ் (https://ravidreams.net/ ) தளத்தை நடத்திய இணைய வடிவமைப்பாளர் ரவி தான் அது.
ரவிசங்கர் இந்த தளத்தை பல ஆண்டுகளாக புதுப்பிக்கவில்லை என்பதை மீறி, இமெயில் பற்றி அவர் எழுதியுள்ள குறிப்புகளை கவனத்தை ஈர்க்கின்றன.
இமெயில் செயல்திறனை அதிகரிப்பதற்கான வழிகள் எனும் தலைப்பில், தோட்டா வரிகள் பாணியில் ( புல்லெட் பாயிண்ட்ஸ்) இமெயில் பயன்பாட்டு குறிப்புகளை எழுதியிருக்கிறார்.
இவற்றில் ஜிமெயிலை பயன்படுத்துங்கள் எனும் குறிப்பில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும், ( நானும் ஜிமெயில் என்றாலும், ஜோஹோ போன்ற கட்டண மெயில் சேவைகளையே பரிந்துரைப்பேன்), தனிப்பட்ட தேவை மற்றும் ஆன்லைன் பயன்பாட்டிற்காக தனித்தனி இமெயில் கணக்குகளை வைத்திருக்க வேண்டும் எனும் யோசனை அருமையானது.
ஜிமெயில் உள்ள முன்னுரிமை பெட்டிகள் உள்ளிட்ட வசதியை பயன்படுத்துங்கள் என்று கூறுபவர், உங்களுக்கு வரும் இமெயில் மேலும் பலருக்கு அனுப்ப பட்டு, அவசர நோக்கிலானதாக இல்லை எனில், உடனடியாக பதில் அளிக்காமல் மற்றவர்கள் பதில் அளிக்க காத்திருங்கள் என்கிறார்.
இணைய அரட்டை சேவை அல்லது தொலைபேசியை பயன்படுத்துங்கள், வழக்கமான பாணி மெயில்களுக்கு டெம்பிளட் வடிவ பதில்களை பயன்படுத்துங்கள் என்கிறார்.
உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து விலகி, அடிப்படை இணையத்தை மட்டும் அணுக கூடிய சாதாரன செல்போனில் உங்கள் மெயில்களை அணுகிப்பாருங்கள், இந்த சோதனை உங்களுக்கு பல விஷயங்களை கற்றுத்தரும் என்கிறார்.
எல்லா மெயில்களையும் திறக்க வேண்டியதில்லை, எல்லாவற்றுக்கும் பதில் அளிக்க வேண்டியதில்லை, எல்லா மெயில்களுக்கும் ஒரே நேரத்தில் பதில் அளிக்க வேண்டியதில்லை போன்ற விஷயங்களை இதற்கான உதாரணமாக குறிப்பிடுகிறார்.
ரவி இதை பத்தாண்டுகளுக்கு முன் எழுதியிருக்கிறார். தற்போது ஸ்மார்ட்போன் சகஜமாகிவிட்ட நிலையில், இந்த பரிசோதனை எந்த அளவு கைகொடுக்கும் எனத்தெரியவில்லை என்றாலும், சில நாட்கள் இணையத்தில் இருந்து விலகி இருங்கள் என்கிறார். எப்படியும் முக்கிய மெயில்கள் போன் அழைப்புகளாக வந்து சேரும் மற்றும் மெயில்களை பார்க்காவிட்டால் வானம் இடிந்து விழுந்துவிடாது போன்ற விஷயங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்கிறார்.
ரவி இந்த தளத்தில் குறைவான பதிவுகளே எழுதியிருக்கிறார். தேடியந்திர மார்க்கெட்டிங், இணையதள வடிவமைப்பு உள்ளிட்ட விஷயங்களை எழுதியிருக்கிறார். ( பிரிலான்சிங் அனுபவம் அடிப்படையில் அவர் எழுதியுள்ள குறிப்புகளை சுயேட்சையாக செயல்படும் ஆர்வம் கொண்ட எல்லோரும் படிக்க வேண்டும். ). ஆனால், அவரது சொற்ப பதிவுகளை படித்தாலே அவர் தொடர்ந்து எழுதியிருக்க வேண்டும் எனத்தோன்றுகிறது. ஒரு விதத்தில் அதை வலியுறுத்த தான் இந்த அறிமுகமும்.
ரவிசங்கர், தமிழில் விக்கிபீடியா பயன்பாட்டை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்காற்றி வருவதாக அறிகிறேன். இணைய வடிவமைப்பிலும் வல்லுனராக விளங்குகிறார்.