இந்தியாக்கு முதலில் இணையம் வந்ததா? அல்லது இமெயில் வந்ததா? என்பது சுவாரஸ்யமான கேள்வியாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில், இந்தியாவில் இணையத்தின் தேவை உணரப்படுவதற்கு முன் இமெயின் தேவையை உணர்ந்திருந்ததாக கருத வேண்டியிருக்கிறது.
இந்தியாவில் இணைய வரலாறு தொடர்பான பதிவுகள் குறைவு என்பதாலும், இருக்கும் சொற்ப பதிவுகளும் அதன் தகவல்களில் துல்லியம் இல்லாதவை என்பதாலும், இந்த ஆண்டியில் இந்தியாவுக்கு இமெயில் அறிமுகம் ஆனது என்றோ, இந்த ஆண்டு இணையம் அறிமுகம் ஆனது என்றோ உறுதியாக சொல்ல முடியவில்லை.
எனவே, இந்திய இணைய வரலாற்றில் அனுமானங்கள் தவிர்க்க இயலாதவை. அந்த வகையில், இந்தியாவில் இணையத்திற்கு முன் இமெயில் வந்ததாக கொள்ளலாம். அதெப்படி இணையம் இல்லாமல் இமெயில் வரும் என கேட்டால், இமெயிலால் இந்தியாவுக்கு இணையம் வந்தது என்று சொல்லலாம்.
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில், 2012 ம் ஆண்டில், இமெயிலின் 40 வது ஆண்டில் வெளியான இந்திய இமெயில் வரலாற்றை நினைவூட்டும் கட்டுரை அளிக்கும் தகவல்கள் இந்த நோக்கில் தான் அமைகின்றன.
அப்போதைய காலகட்டம், (1980கள்), இந்தியாவில் இருந்து பலர் உயர்கல்விக்காகவும், வேலைவாய்ப்பிற்காகவும் அமெரிக்கா செல்லத்துவங்கியிருந்த காலம். அமெரிக்காவில் இருந்த இந்தியர்களுக்கு அர்பாநெட் வடிவில் இணையமும், இமெயிலும் அறிமுகம் ஆகியிருந்தது. அவர்களில் பலர், அர்பாநெட் அல்லது அதன் நீட்சியான பல்கலைகலைகளின் வலைப்பின்னல் பிட்நெட் (BITNET ) வாயிலாக இமெயிலை பயன்படுத்தினர்.
ராஜீவ் கவாய் எனும் பேராசிரியரும் இந்த ஆரம்ப கால இமெயில் பயனாளிகளில் ஒருவர். அப்போது நியூயார்க் புரூக்ஹவன் தேசிய ஆய்வுக்கூடத்தில் (Brookhaven National Laboratory ) கவாய் ஆய்வு அறிஞராக இருந்தார்.
தொலைதூரத்தில் இருக்கும் அறிஞர்களுடன் எல்லாம் தகவல் பரிமாறிக்கொள்வதற்கான எளிய வழியாக அமைந்த இமெயில் கவாயை ஈர்த்தது. அதிலும் குறிப்பாக அந்த காலகட்டத்து தகவல் தொடர்பு நுட்பங்களான செலவு மிக்க பேக்ஸ் அல்லது டெலக்சை பயன்படுத்தாமல் இமெயில் எளிதாக கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் வசதியை அவர் மிகவும் விரும்பினார்.
இதன் பயனாக, அமெரிக்க பிட்நெட் போல இந்தியாவிலும் கல்விநிறுவனங்களுக்கான வலைப்பின்னல் தேவை எனும் யோசனையை முன்வைத்தார். இந்த யோசனைக்கு அரசு அனுமதி கிடைத்ததை அடுத்து, ஐந்து ஐஐடிகள், பெங்களூரு IISc, (NCST) ஆகிய கல்வி நிறுவனங்கள் இணைந்த வலைப்பின்னலாக எர்நெட் (ERNET) உருவானது.
எர்நெட் திட்டம் தான் இந்தியாவில் இணையத்திற்கு அடிப்படை. எர்நெட் 1986 ல் உருவானாலும், அதன் பிறகு 1995 ல் தான் இந்தியாவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இணையம் அறிமுகமானது.
“1986 ல், NCST மற்றும் IIT பாம்பே இடையே டயல் அப் இமெயில் பரிமாற்றம் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, எர்நெட் பங்குதாரர்கள் அனைவரும் இந்த இமெயில் வலைப்பின்னலில் வந்து, உலகம் முழுவதும் உள்ள அறிஞர்களுடன் இமெயில் பரிவர்த்தனையில் ஈடுபட்டனர்” என்று நினைவு கூறுகிறார் ஸ்ரீனிவாச ரமணி.
இந்தியாவில் இணைய சேவை நிறுவனம் எதுவும் இல்லாத நிலையில், ( வி.எஸ்.என்.எல் 1995 ல் தான் இணைய சேவை வழங்கத்துவங்கியது), எர்நெட் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கும் இமெயில் வசதி அளித்தது என்கிறார் ரமணி.
இந்திய இணைய வரலாற்றில் ரமணி முக்கியமானவர். இந்தியாவிற்கு இணையத்தை கொண்டு வந்த முன்னோடிகளில் அவரும் ஒருவர்.
இந்திய இமெயில் வரலாற்றில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் இந்த கட்டுரையில் இருக்கிறது. துவக்கத்தில் இந்தியர்கள் பலருக்கு இமெயில் என்றால் என்னவென்று தெரியவில்லை. அவர்களுக்கு இமெயிலை புரிய வைப்பதற்கான எளிய வழியாக, வெளிநாட்டில் இருக்கும் மகன் அல்லது மகளுடன் தொடர்பு கொள்வதற்கான செலவு குறைந்த வழி எனும் அறிமுகம் பயன்பட்டதாக இந்த கட்டுரையில் ஸ்வபன் குமார் டே என்பவர் கூறியிருக்கிறார். ஸ்வபன் குமார் கொல்கத்தா பகுதிக்கு இணையத்தை கொண்டு வந்தவர்.
இப்படியாக இருக்கிறது இந்தியாவின் இணைய மற்றும் இமெயில் வரலாற்றின் கதை.