பாலஸ்தீனத்திற்காக ஒரு குரல் – கூகுளில் உங்களால் கண்டறிய முடியாத இணையதளம்!

169def6c-ebb2-4b63-bb9f-22dc8c98486aஒரு அரசியல் இணையதளம், தொழில்நுட்ப மேடையில் அறிமுகமாவது ஆச்சர்யமானது தான். ஆனால் அவசியமானது.

இப்படி ஆச்சர்யத்தை அளித்திருக்கும் இணையதளம், ”லட்டர்ஸ்பிரம்பாலஸ்டைன்.ஆர்க்’.- (https://www.lettersfrompalestine.org/ ). இந்த தளம், புதிய இணையதளங்கள், சேவைகளுக்கான இணைய சமூகமான பிராடக்ட் ஹண்ட் தளத்திலும், புதிய தளங்களுக்கான அறிமுக தளமான லாஞ்சிங் நெக்ஸ்ட் தளத்திலும் அறிமுகம் ஆகியுள்ளது.

பாலஸ்தீனம் தொடர்பான குரலை, பாலஸ்தீனியர்கள் கடிதங்கள் வாயிலாக பதிவு செய்வதற்காக இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் நடுநிலையாளர் அல்லது பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்பவர் என்றால் இதற்கான தேவையை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

ஒரு காலத்தில் பற்றி எரியும் பிரச்சனை என வர்ணிக்கப்பட்ட பாலஸ்தீனம் இன்னமும் நெருப்பு அனையாமல் தகித்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால், உலகம் முன் போல பாலஸ்தீன பிரச்சனையில் அக்கறை கொண்டிருக்கவில்லை. ஊடக செய்திகளிலும், சர்வதேச விவாதங்களிலும் பாலஸ்தீன பிரச்சனை பின்னுக்குத்தள்ளப்பட்டு விட்டது.

உலகிற்கு எப்படியோ, பாலஸ்தீனர்களுக்கு இது வலி மிகுந்தது. அதைவிட இன்னும், இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையிலான பிரச்சனையை விவரிக்கும் போக்கும் கூட பெருமளவு மாறியிருக்கிறது. பாலஸ்தீனர்கள் தரப்பு நியாயத்தை உரத்து பேசுவதற்கான வாய்ப்புகள் குறைந்து விட்டது.

இந்த பின்னணியில் தான், பாலஸ்தீனர்களுக்கான இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனியர்களாக இருப்பதன் அனுபவத்தை பாலஸ்தீனியர்கள் கடிதம் மூலம் பதிவு செய்வதை இந்த தளம் நோக்கமாக கொண்டுள்ளது.

பாலஸ்தீனத்தில் வசிக்கும் அல்லது தாய் மண்ணுக்கு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் வசிக்கும், ஒவ்வொரு பாலஸ்தீனியரும் இஸ்ரேலின் இரட்டை அடக்கு முறையின் கீழ் பாலஸ்தீனத்தில் அன்றாட வாழ்க்கை தொடர்பான தங்கள் கதையை பதிவு செய்ய இந்த தளம் அழைப்பு விடுக்கிறது.

இந்த பதிவுகள் மூலம் பாலஸ்தீனர்கள் படும்பாட்டை உலகின் பார்வைக்கு உணர்த்த முடியும் என இந்த தளத்தை அமைத்துள்ள பாலஸ்தீனிய குழுவினர் கருதுகின்றனர்.

கண்ணால் பார்க்க முடியாத விஷயங்கள் மீது பரிவு கொள்ள முடியாது என்று சொல்லப்படும் நிலையில், பாலஸ்தீனத்தின் சொல்லப்படாத மற்றும் மறக்கப்பட்ட கதைகளை பதிவு செய்வதற்கான கூட்டு முயற்சியாக இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனிய பிரச்சனையில், அவர்கள் பக்கத்தை பாலஸ்தீனியர்கள் கதைகள் வாயிலாகவே சொல்வதற்கான முயற்சியாக இந்த தளம் அமைந்துள்ளது. பாலஸ்தீனியர் எனில், இதில் உள்ள ‘எழுது’ பகுதி மூலம் தங்கள் வாழ்க்கை கதையை பதிவு செய்யலாம். மற்றவர்கள், இந்த கடிதங்களை படித்துப்பார்த்து பாலஸ்தீனியராக இருப்பதன் மனநிலையை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

இந்த தளம், பரவலாக கவனத்தை ஈர்த்து, ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இதில் தங்கள் அனுபவங்களை பகிந்து கொண்டால், உலகின் மனசாட்சியை உலுக்கும் வலுவான வரலாற்றுப்பதிவாக இந்த தளம் உருவாகலாம்.

  • இப்போது ஆரம்பத்தில் குறிப்பிட்ட விஷயத்திற்கு வருவோம். இஸ்ரேல்- பாலஸ்தீனம் பிரச்சனையில், பாலஸ்தீனம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரசியல் நோக்கிலான இந்த தளம், புதிய தொழில்நுட்ப சேவைகள் பற்றி விவாதிக்கும் ஒரு மேடையில் அறிமுகம் ஆகியிருப்பது வியப்பாக தோன்றலாம். ஆனால், புதிய இணைய சேவைகள் என்பது தொழில்நுட்பம் சார்ந்தாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தொழில்நுட்பத்தை கொண்டு, சமூக நோக்கிலான விஷயங்களுக்காக வாதிடவும், ஆதரவு திரட்டவும் இணையதளங்களையும், செயலிகளையும் உருவாக்கலாம். இதே போலவே அரசியல் நோக்கத்திற்காகவும் புதிய சேவைகளை உருவாக்கலாம். பிராடக்ட் ஹண்ட் போன்ற தளத்தில், பற்ற புதிய சேவைகள் போலவே இந்த தளங்களையும் அறிமுகம் செய்து ஆதரவு கோரலாம்.

இந்த நோக்கில் தான், பாலஸ்தீனர்களை கடிதம் எழுத கோரும் இந்த தளம் பிராடக்ட் ஹண்ட் மற்றும் லாஞ்சிங் நெக்ஸ்ட் தளங்களில் அறிமுகம் ஆகியுள்ளது.

ஒரு புதிய இணையதளத்தை எதற்காக உருவாக்கலாம்,என்பதற்கான சிறந்த உதாரணமாகவும் இந்த தளத்தை கருதலாம்.

இப்போது இன்னும் முக்கியமான விஷயத்திற்கு வருவோம். இந்த தளத்தை கூகுளில் உங்களால் தெரிந்து கொள்ள முடியாது என்கிறேன்.  சந்தேகம் இருந்தால், லெட்டர்ஸ்பிரம் பாலஸ்தீன் என டைப் செய்து கூகுளில் தேடிப்பாருங்கள். இந்த முகவரியுடன் டாட்.காம் என சேர்த்துக்கொண்டாலும், கூகுள் பட்டியலில் இந்த தளம் வரவில்லை. முகவரியுடன் டாட்.ஆர்க் என்று சேர்த்துக்கொண்டால் மட்டுமே தளம் வருகிறது.

ஆனால், முழு முகவரி தெரிந்த இணையதளத்தை கூகுளில் தேடுவதற்கான அவசியம் என்ன இருக்கிறது. பாலஸ்தீனம் தொடர்பான தேடலிலேயே இந்த தளம் வந்து நின்றால் தானே கூகுளுக்கு மரியாதை.

ஆனால், அதற்கான சாத்தியம் இல்லை. ஏனெனில், இந்த தளம் பேசப்பட்டு, எஸ்,.இ.ஓ அணிகலன்கள் போன்றவை இருந்தால் மட்டுமே கூகுளில் அடையாளம் காட்டப்படும். மற்றபடி. இது போன்ற தளங்கள் அறிமுகம் ஆகும் நிலையில் கூகுள் முடிவில் முன்னுக்கு வர வாய்ப்பில்லை.

இப்போது மறுபடியும், பிராடக்ட் ஹண்ட் தொழில்நுட்ப மேடையில் இந்த தளம் அறிமுகம் செய்யப்பட்டத்தை நினைத்துப்பாருங்கள்.

இணைய உருவாக்குனர்கள், உரிமையுடன் தங்கள் ஆக்கங்களை இதில் சமர்பித்து அதற்கு ஆதரவு கோரும் வாய்ப்பு இருப்பதாலேயே , புதிய தளங்கள் இங்கு எதிர்பார்ப்புடன் அறிமுகம் செய்யப்படுகின்றன.

இதன் பொருள், புதிய இணையதளங்கள், அவை அறிமுகம் ஆகும் போதே கூகுளில் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்பது தான். அதற்கு நீங்கள், இணைய அறிமுகங்களுக்கான சமூகமாக உருப்பெற்றிருக்கும் பிராடக்ட் ஹண்ட் போன்ற தளங்களையே முதலில் நாட வேண்டும்.

ஆக, கூகுளுக்கு குட்பை சொல்லுங்கள். அதற்கு மனமில்லை என்றால், கூகுளை மட்டும் நம்பிக்கொண்டிருப்பதையாவது மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில், கூகுளின் முக்கியத்துவம் குறையத்துவங்கிவிட்டது.

கூகுளில் கண்டறிய முடியாத மேதைகள்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

1 Comments on “பாலஸ்தீனத்திற்காக ஒரு குரல் – கூகுளில் உங்களால் கண்டறிய முடியாத இணையதளம்!

  1. Ravichandran R

    மிக்க நன்றி! இந்த பதிவின் மூலமே மேயே…கூகுளின்..இன்னொரு முகம்…தெரிய வருகிறது! மேலும் பிராடக்ட் ஹேன்ட் …இணைய தளம் பற்றியும் …அறிந்து கொண்டேன்!

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *