இணையத்தில் இப்போது ’சாட் ஜிபிடி’ (ChatGPT) பற்றி தான் பேச்சாக இருக்கிறது. இந்த சாட் பாட், கூகுள் தேடலுக்கே சவால் என்றெல்லாம் பேசுகின்றனர். இது கவிதை எழுதி தருகிறது, கட்டுரை எழுது தருகிறது, இனி படைப்ப்பாளிகள் நிலை என்ன என்றெல்லாம் கேள்விகள் எழுப்ப படுகிறது.
இந்த பின்னணியில், ஜூன் பாட் (joonbot.com/ ) பற்றி தெரிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.
ஜூன் பாட் ஒரு சாட் பாட் உருவாக்கு சேவை. அதாவது நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான அரட்டை மென்பொருள்களை உருவாக்கி கொள்ள உதவும் சேவை. சிறிதளவு கூட கோடிங் தேவையில்லாமல், தேவைக்கேற்ற அரட்டை மென்பொருளை உருவாக்கி கொள்ளலாம் என்கிறது ஜூன் பாட்.
ஜூன் பாட் போல இன்னும் பல ’பாட்’ உருவாக்கும் சேவைகள் இருக்கின்றன.
சாட் பாட் எனப்படும் அரட்டை மென்பொருள்கள், உரையாடல் வடிவில் தகவல்களை வழங்குவதற்கான மென்பொருள் வடிவங்களாகும். டிஜிட்டல் கிளிப்பிள்ளைகள் என்றும் வைத்துக்கொள்ளலாம். ஆன்லைனில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வேறு எவர் உதவியும் இல்லாமல், தானாகவே பதில் சொல்லும் திறன் படைத்தவையான இந்த மென்பொருள்கள் அமைகின்றன.
வாடிக்கையாளர் சேவை முதல், ஆன்லைன் சர்வே வரை பல விதங்களில் இந்த மென்பொருள்களை பயன்படுத்தலாம்.
இந்த மென்பொருள்களுக்கு யோசிக்கும் திறன் கிடையாதே தவிர பதில் சொல்லும் ஆற்றல் உண்டு. அதிலும் குறிப்பிட்ட துறை அல்லது செயல்பாடு சார்ந்த விஷயங்களில் மனிதர்களை விட கச்சிதமாக பதில் அளிக்க கூடியவை. திரும்ப திரும்ப சொல்ல வேண்டிய அடிப்படை விஷயங்களை இந்த மென்பொருள்கள் யார், எத்தனை முறை கேட்டாலும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டே இருக்கும்.
இத்தகைய மென்பொருள்களை தான் ஜூன் பாட் உருவாக்கிதருகிறது. இதற்கு உதாரணமாக, கோவிட் காலத்தில் ஜூன் பாட் மூலம் உருவாக்கப்பட்ட மூன்று விதமான அரட்டை மென்பொருள்களை இதன் இணையதளம் சுட்டிக்காட்டுகிறது.
முதல் மென்பொருள், கோவிட் சூழலில் ரத்தான நிகழ்ச்சிகள் தொடர்பாக தகவல்கள் அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. பந்தைய நிகழ்ச்சிகளை நிர்வகிப்பதற்கான மென்பொருள் சேவை நிறுவனம் ரன் ஈவண்ட், சார்பாக இந்த மென்பொருள் உருவானது.
பந்தையங்களை நிர்வகிக்கும் இந்நிறுவனம், கோவிட் காலத்தில் பந்தயங்கள் ரத்து செய்யப்படுவதை எதிர்கொண்டது. இதன் காரணமாக, வாடிக்கையாளர்களுக்கு ரத்தான பந்தயங்கள் பற்றி தகவல் தெரிவிப்பதோடு, கட்டணத்தொகையை திரும்ப பெற வழிகாட்டும் தகவல்களையும் தர வேண்டியிருந்தது. இந்த பணிக்காக தான் அரட்டை மென்பொருள் உருவாக்கப்பட்டது.
பந்தையங்கள் தொடர்பாக தகவல் பெற விரும்பும் வாடிகையாளர்கள் கேள்விகளுக்கு இந்த அரட்டை மென்பொருளே பதில் சொல்லிவிடும்.
இதே போல, மொருஷியஸ் பல்கலைக்கழகம் கோவிட் தொற்று தொடர்பான எச்சரிக்கைகள், விழிப்புணர்வு தகவல்களை வழங்குவதற்காக ஒரு அரட்டை மென்பொருளை உருவாக்கி கொண்டது. அண்மை புள்ளி விவரங்கள், டாக்டர்கள் விவரம், நோய் அறிகுறிகள் என எந்த சந்தேகமாக இருந்தாலும் இந்த மென்பொருள் பதில் சொல்லிவிடும்.
மூன்றாவதாக ஓஸ் லைப் எனும் நிறுவனம், கோவிட் பரிசோதனை கருவிகளுக்கான அரட்டை மென்பொருள் ஒன்றை உருவாக்கியது. மக்கள் இதனிடம் கேள்விகள் கேட்டால், நோய்க்கூறு காரணிகள் அடிப்படையில் எந்த பரிசோதனை கருவியை வாங்கலாம் என தெரிவித்து, அதை அஞ்சலில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தது.
இந்தியாவிலும் அப்பல்லோ மருத்துவமனை, கோவிட் நோய்க்கூறு அறிகுறிகள் தொடர்பாக வழிகாட்டும் அரட்டை மென்பொருளை உருவாக்கியது.
இன்னும் எண்ணற்ற வழிகளில் அரட்டை மென்பொருள்கள் பயன்படும். பலவிதமான அரட்டை மென்பொருள்களும் இருக்கின்றன.
சாட் ஜிபிடியும் இதே போன்ற அரட்டை மென்பொருள் தான். ஆனால் என்ன, இது மொழி மாதிரி அடிப்படையில் செயல்படும் அரட்டை மென்பொருளாக இருக்கிறது. எக்கச்சக்கமான தகவல்களை உள்ளீடு செய்தால், மொழி மாதிரி அடிப்படையில் அவற்றை அலசி ஆராய்ந்து, அதை கொண்டு கேள்விகளுக்கு பதில் சொல்லிவிடுகிறது. இதன் பின்னே ஜெனரேட்டிவ் பிரி டிரைண்டு எனும் நுட்பம் இருக்கிறது. இயந்திர கற்றலில் இது கொஞ்சம் பெரிய விஷயம்.
சாட் ஜிபிடி (ChatGPT) அசத்தக்கூடியதாகவும், மிரள வைப்பதாகவும் இருக்கிறது என்றாலும் அதற்கு வரம்பு உண்டு. முக்கியமாக அதற்கு எதுவுமே புரியாது. கேள்விகளுக்கு ஏற்ப தொகுப்பில் இருந்து எடுத்து அல்லது உருவாக்கித்தரும்.
–