எல்லோரும் சாட் ஜிபிடி பற்றி பேசிக்கொண்டிருப்பதால், ஆஸ்க் ஜீவ்ஸ் தேடியந்திரத்தை நினைவு படுத்துவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
ஆஸ்க் ஜீவ்ஸ் (Ask Jeeves)) அல்டாவிஸ்டா காலத்து தேடியந்திரம். அதாவது இணைய தேடலில் கூகுள் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன், பயன்பாட்டில் இருந்த எண்ணற்ற தேடியந்திரங்களில் ஆஸ்க் ஜீவ்சும் ஒன்று.
பழைய தேடியந்திரம் என்றாலும், ஆஸ்க் ஜீவ்ஸ் ஒரு முக்கிய சிறப்பம்சத்தை கொண்டுள்ளது. தேடலில் சுற்றி வளைக்காமல், நேரடியாக பதில் சொல்லும் ஆற்றல் கொண்ட முதல் தேடியந்திரமாக அது அமைகிறது.
இப்போது சாட் ஜிபிடி (chat gpt- https://openai.com/blog/chatgpt/ ) என்ன செய்வதாக சொல்லப்படுகிறதோ, அதை 1990 களில் செய்ய முயன்ற தேடியந்திரமாக ஆஸ்க் ஜீவ்ஸ் விளங்குகிறது.
இனி கூகுளுக்கு வேலை இருக்காது, ஏனெனில் சாட் ஜிபிடி, கூகுளை விட சிறந்த முறையில் கேள்வி பதில் அடிப்படையில் பயனாளிகள் தேடலுக்கு விடை அளிப்பதாக பலரும் சொல்கின்றனர்.
கூகுளில் தேடினால், அது பொருத்தமான முடிவுகளை பட்டியலிடுகிறது. ஆனால் சாட் ஜிபிடியிடம், கேள்வியாக அதே தேடலை முன்வைத்தால், அநேகமாக பொருத்தமான பதிலை நேரடியாக வழங்கும் தன்மை கொண்டதாக இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, கூகுளின் மகத்துவம் குறையலாம் என பேசப்படுகிறது.
சாட் ஜிபிடி, கூகுளுக்கு சவாலா? என்பது பற்றி தனியே ஆராய வேண்டும். இப்போதைக்கு, சாட் ஜிபிடியில் முக்கியமாக குறிப்பிடப்படும், இயற்கை மொழி செயல்முறை (Natural language processing (NLP) ) பற்றி பார்க்கலாம்.
சாட் ஜிபிடி, ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவு ஆற்றல் கொண்ட அரட்டை மென்பொருள் சேவை என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அதாவது, மனிதர்கள் போலவே உரையாடல் முறையில் பதில்களையும், தகவல்களையும் அளிக்க கூடிய மென்பொருளாக இருக்கிறது. வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்புவது போல, இதனுடன் உரையாடலாம் என்பது கூடுதல் சிறப்பு.
பதில்களை தருவது தவிர, கவிதை எழுதுவது, கட்டுரை எழுதுவது, கோடிங் எழுதுவது போன்றவற்றை எல்லாம் செய்து சாட் ஜிபிடி அசத்திக்கொண்டிருக்கிறது.
மனிதர்களுடன் இயல்பாக உரையாடும் வகையில் சாட் ஜிபிடி பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப, அதனிடம் உள்ள கோடிக்கணக்கான தரவுகளில் இருந்து தேவையானதை எடுத்து தரும் ஆற்றலும் கொண்டிருக்கிறது. இணையம், விக்கிபீடியா என இன்னும் பிற தகவல் சுரங்களின் தரவுகளில் உள்ளவற்றை புரிந்து கொண்டு (!) பொருத்தமான பதிலை தேடித்தருகிறது.
அதோடு, பயனாளிகளுடன் புத்திசாலித்தனமாக உரையாடும் திறனும் பெற்றிருக்கிறது.
ஆக, சாட் ஜிபிடி பெரிய விஷயம் தான். ஆனால், சாட் ஜிபிடி மற்றும் இத்தகைய மென்பொருள் சேவை அல்ல, இன்னும் பல இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கூகுளும் இதே போல, லேம்டா எனும் சேவையை பெற்றுள்ளது.
எனவே, சாட் ஜிபிடியை புரிந்து கொள்ள பொதுவாக அரட்டை மென்பொருள்களையும், அவற்றின் வளர்ச்சியையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இடத்தில் தான் ஆஸ்க் ஜீவ்ஸ் தேடியந்திரத்தை திரும்பி பார்க்க வேண்டியிருக்கிறது.
1996 ம் ஆண்டு அறிமுகமான ஆஸ்க் ஜீவ்ஸ், அன்றைய தேடியந்திரங்களில் இருந்து மிகவும் மாறுபட்டு கீவேர்டு எனப்படும் குறிச்சொற்கள் அடிப்படையில் தேடல் முடிவுகளை வழங்காமல், பயனாளிகள் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லும் வகையில் அறிமுகமானது.
இன்னமும் கூகுள் அறிமுகமாகாத நிலையில், ஒரு தேடியந்திரம் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் திறன் கொண்டிருப்பது அந்த காலத்தில் புதுமையாக கருதப்பட்டது. இயற்கை மொழியில் புரிந்து கொண்டு பதில் அளிக்கும் இந்த திறனில் அப்போது போதாமைகள் இருந்ததால், ஆஸ்க் ஜீவ்ஸ் தேடல் சேவையிலும் போதாமைகள் இருந்தன.
எனவே, அடுத்த சில ஆண்டுகளில் கூகுள் அறிமுகமானது போது, துல்லியமான மற்றும் துரிதமான தேடலால் பெரும் வெற்றி பெற்றது. கூகுள் வெற்றியால் காணாமல் போன பல தேடியந்திரங்களில் ஆஸ்க் ஜீவ்ஸும் ஒன்றானது.
ஆனால், ஆஸ்க் ஜீவ்ஸ் தொடர்ந்திருந்தால், இன்று சாட் ஜிபிடி பெற்றிருக்கும் வெற்றியை என்றோ பெற்றிருக்கலாம்.
ஆஸ்க் ஜீவ்ஸ் தேடியந்திரம் பின்னர் வேறு நிறுவனங்களுக்கு மாறி இன்று ஆஸ்க்.காம் (https://www.ask.com/ ) எனும் பெயரில் தொடர்கிறது.
ஆஸ்க் ஜீவ்ஸ் தேடியந்திரம் மற்றொரு வகையிலும் முன்னோடியாக திகழ்கிறது. அது தான் ஜீவ்ஸ். ஆம், ஆங்கில நாவலாசிரியர் பி.ஜி.வோடஹவுஸ் (P. G. Wodehouse. ) நாவல்களில் வரும் எல்லாம் வல்ல உதவியாளர் பாத்திரமான ஜீவ்ஸை (Jeeves ) அடிப்படையாக கொண்ட உருவத்தை ஆஸ்க் ஜீவ்ஸ் தனது மனித முகமாக கொண்டிருந்தது.
அரட்டை மென்பொருள்கள் ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ள சூழலில், இத்தகைய சேவைகளுக்கு மனித முகம் மிக முக்கியம் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. அந்த வகையில் ஆஸ்க் ஜீவ்ஸ் முன்னோடியாக விளங்குகிறது.
டேவிட் வார்த்தன் மற்றும் கேரட் குருய்னர் (Garrett Gruener and David Warthen ) ஆகிய கம்ப்யூட்டர் மேதைகள் ஆஸ்க் ஜீவ்ஸ் தேடியந்திரத்தை உருவாக்கினர்.