சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இன்னமும் சூப்பர் ஸ்டாரா? எனும் கேள்வி இப்போது விவாதிக்கப்படும் நிலையில், இந்த கேள்விக்கான சாட் ஜிபிடி அல்லது அத்தகைய ஏ.ஐ மென்பொருள்களிடம் கேட்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
சாட் ஜிபிடி அளிக்க கூடிய பதில், சூப்பர் ஸ்டார் விவாத்ததிற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் அமைந்திருக்குமா எனத்தெரியாவிட்டாலும், இந்த கேள்வி சாட் ஜிபிடியின் திறன் மற்றும் அறம் பற்றி புரிந்து கொள்ள உதவும்.
முதல் விஷயம், யார் சூப்பர் ஸ்டார் எனும் கேள்விக்கு சாட் ஜிபிடி நேரடியாக பதில் சொல்லி தப்பித்துக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், சாட் ஜிபிடி, நிகழ் நேர தரவுகள் சார்ந்தது அல்ல. 2021 வரையான தரவுகள் சார்ந்தே பதில் சொல்ல அது பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, நீங்கள் கேட்கும் கேள்விக்கு இப்போது என்னிடம் பதில் இல்லை என சாட் ஜிபிடி பதில் அளிக்கலாம். அல்லது, 2021 க்கு முந்தைய தகவலின் படி, ரஜினி காந்த் தான் சூப்பர் ஸ்டார் என பதில் அளிக்கலாம். அல்லது, இந்திய அளவில் என்றால் அமிதாப் தான் சூப்பர் ஸ்டார் என பதில் அளிக்கலாம்.
இது போன்ற சர்ச்சைக்குறிய கேள்விகளை சாட் ஜிபிடி போன்ற மென்பொருள் சேவைகளிடம் கேட்பது எத்தனை சிக்கலானது என இப்போது புரிந்திருக்கும்.
தகவல் சார்ந்த பதில் இல்லாத புரிதல் சார்ந்த பதில் கொண்ட கேள்விகள் முன்வைக்கப்படும் போது, மனிதர்கள் பொதுவாக சூழல் அறிந்து பொறுப்பாக பதில் சொல்வார்கள். ஆனால், மென்பொருள்கள் தரவுகள் சார்ந்த பதிலை அளிக்க முற்படும் போது பிரச்சனையாகலாம். பிரச்சனை தரவுகளில் அல்ல, தரவுகளில் இருக்கும் உள்ளார்ந்த சார்பு நிலை தொடர்பானது.
தற்போது இணையத்தில் பயன்படுத்தப்படும் தரவுகள் பெரும்பாலும், ஆண் சார்பு, வெள்ளையின சார்பு கொண்டதாக கருதப்படுகிறது.
ஆக, நாயகன் படத்தில் வருவது போல, நீங்கள் நல்லவரா? கெட்டவாரா? என்பது போன்ற கேள்விகளை தலைவர்கள் அல்லது ஆளுமைகள் சார்ந்து அரட்டை மென்பொருள்களிடம் கேட்டு அந்த பதிலை வைத்து வாதம் செய்ய சிலர் முயன்றால் என்னாவது?
எனில், குறிப்பிட்ட வகையான கேள்விகளை ஏஐ மென்பொருளிடம் கேட்க கூடாது என கட்டுப்பாடு தேவையா? சமூகத்தில் பிளவு ஏற்படுத்தக்கூடிய கேள்விகள் கேட்கப்பட்டால் அதற்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் அல்லது எப்படி பதில் அளிக்க கூடாது என பயிற்சி அளிக்க வேண்டுமா? இவற்றை எல்லாம் யார் தீர்மானிப்பது?
இவை எல்லாம் ஏ.ஐ மென்பொருள் தொடர்பான அறம் சார்ந்த கேள்விகளாக அமைகின்றன. ஏஐ வல்லுனர்கள் இவை பற்றி எல்லாம் ஏற்கனவே விவாதிக்கத்துவங்கிவிட்டனர். இது தொடர்பாக நமது புரிதல் மேம்பட வேண்டும்.
நிற்க, இதே போல நம்பிக்கை சார்ந்த பொதுவான கேள்விகளுக்கும் ஏ.ஐ அளிக்கும் பதில் சிக்கலாகலாம். உதாரணமாக கடவுள் இருப்பது உண்மையா எனும் கேள்விக்கான சரியான பதில் என்னவாக இருக்கும்.
இந்த இடத்தில், சாண்டா கிளாஸ் உண்மையா எனும் கேள்விக்கு சாட் ஜிபிடி அளித்த பதில் பொருத்தமாக இருக்கும்.
இந்த கேள்விக்கு சாண்டா கிளாஸ் தொடர்பான கதையில் இருந்து பதில் அளிக்கத்துவங்கும் சாட் ஜிபிடி, வழிவழி வரும் கதைகளின் படி, சாண்டா கிளாஸ் கிறிஸ்துமஸ் பரிசு அளிப்பவர் என்கிறது.
மேற்கத்திய நாடுகளில் இது முக்கிய நடைமுறை என கூறிவிட்டு, இருப்பினும், இந்த கதை வழி வழியாக வரும் கதை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்கிறது. இறுதியாக இது தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்த விஷயம் என்கிறது. சாட் ஜிபிடியின் இந்த பதிலில் தெரியும் நேர்மையும். முதிர்ச்சியும் வியக்க வைக்கிறது.
சாட் ஜிபிடி தொடர்பாக இன்னமும் நாம் தெரிந்து கொள்ள நிறைய இருக்கின்றன.