திடிரென வானத்தில் இருந்து குதித்து விடவில்லை என்று சொல்வது போல, சாட் ஜிபிடி மென்பொருள் ஏதோ முழுக்க முழுக்க ஓபன் ஏ.ஐ நிறுவன ஆய்வால் மட்டும் உருவாகிவிடவில்லை. இதன் பொருள், சாட் ஜிபிடி உருவாக்கத்தில் ஓபன் ஏஐ ஆய்வை குறைத்து சொல்வதல்ல. ஆனால், சாட் ஜிபிடி எனும் ஏஐ அரட்டை மென்பொருள் வெற்றி என்பது, ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதற்கான பல முன்னோடிகளின் பங்களிப்பு மற்றும் முன்னெடுப்புகளின் விளைவு என்பதை சுட்டிக்காட்டுவதாகும்.
சாட் ஜிபிடி ஒரு பாய்ச்சல் எனில், அந்த பாய்ச்சலுக்கான ஓட்டம் எப்போதோ துவங்கி, எண்ணற்ற மேதைகளால் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மேதைகளும் தங்கள் சிந்தனையாலும், ஆய்வாலும் வெவ்வேறு திசைகளில் ஓட வைத்து ஏ.ஐ எனும் நுட்பத்தை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இத்தகைய மேதைகளில் ஒருவரான ’மார்வின் மின்ஸ்கி’ (Marvin Minsky) பற்றி இப்போது பார்க்கலாம். ஒருவிதத்தில், சாட் ஜிபிடி உருவாக்கத்திற்கு மின்ஸ்கியும் ஒரு காரணம். ஏனெனில், ஏஐ உருவாக்கத்திற்கு வித்திட்ட முன்னோடிகளில் அவரும் ஒருவர்.
ஏஐ வளர்த்தெடுத்ததில் மின்ஸ்கியின் பங்களிப்பை விரிவாக விளக்க, கம்ப்யூட்டர் உலகில் அவரது ஆளுமையை முழுவதுமாக சித்தரிக்க வேண்டும். அதற்கு மின்ஸ்கி அறிவுலகில் மூழ்கி திளைக்க வேண்டும் எனில் நிலையில் இப்போதைக்கு அவரது பங்களிப்பின் ஒரு கீற்றை மட்டும் பார்க்கலாம்
கம்ப்யூட்டர் எனும் கணக்கிடும் இயந்திரத்திங்களால் என்ன எல்லாம் சாத்தியம் என்பதே புரியாத புதிராக இருந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டர்களின் எதிர்கால ஆற்றலை சாத்தியமாக்க முயன்ற முன்னோடிகளில் மின்ஸ்கியும் ஒருவர்.
கம்ப்யூட்டர்களால் மனிதர்கள் போலவே சிந்திக்க முடியும் எனும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறன் பற்றி மின்ஸ்கி சிந்தித்திருக்கிறார்.
இதற்கு உதாரணமாக, 1970 ம் ஆண்டு லைப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அவர் கூறிய கருத்துக்கள் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகின்றன.
“இன்னும் மூன்று முதல் எட்டு ஆண்டுகளில், சாதாரண மனிதருக்கு நிகரான பொது அறிவை இயந்திரங்கள் பெற்றிருக்கும்” என்பதே அந்த மேற்கோள்.
மின்ஸ்கி இன்னொரு பேட்டியில், மனது, செயற்கை நுண்ணறிவு மற்றும் உணர்வுகள் பற்றி விரிவாக பேசியிருக்கிறார்.
இந்த பேட்டியில், மனித மூளை மற்றும் மனது தொடர்பான ஆய்வுக்கு கம்ப்யூட்டர் அறிவியல் எத்தகைய பங்களிப்பு செலுத்தும் என கேட்கப்படுகிறது.
’கம்ப்யூட்டர் அறிவியல் நம்முடைய வாழ்க்கையை மாற்றும் என தெளிவாகத்தெரிகிறது. இதற்கு காரணம் கம்ப்யூட்டர்கள் அல்ல. அவை நம் மூளை பற்றியும், அறிவின் இயல்பு பற்றியும் அறிந்து கொள்ள உதவும் என்பதே காரணம். நாம் எப்படி சிந்திக்கவும், உணரவும் கற்றுக்கொள்கிறோம் என புரிந்து கொள்ள அவை உதவும். இந்த அறிவு, மனித தன்மை தொடர்பான நம்முடைய பார்வையை மாற்றி நம்மை மாற்றிக்கொள்ள உதவும்.’
இப்படி அமைகிறது மின்ஸ்கியின் பதில்.
கம்ப்யூட்டர்கள் ஏன் இத்தனை முட்டாளாக இருக்கின்றன எனும் அடுத்த கேள்விக்கு மின்ஸ்கியின் பதில், அவற்றின் அறிவாற்றல் எல்லைகளை விவரிப்பதாக அமைகிறது.
பெரும் பரப்பிலான தகவல்கள் நமக்கு அணுக கிடைக்கின்றன. எனினும், தற்போதைய இயந்திரங்களுக்கு தினசரி வாழ்க்கை பற்றிய மிக எளிதான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் அளவுக்கு போதுமான தகவல்கள் தெரியவில்லை.
மக்களை தள்ளிவிட்டு நீங்கள் முன்னேறக்கூடாது, எதையாவது திருடினால், அதன் உரிமையாளர் கோபம் கொள்வார், நீளமான குச்சியால் பொருளை தள்ளலாம், ஆனால் இழுக்க முடியாது… போன்ற விஷயங்கள் இயந்திரங்களுக்கு தெரியாது என்கிறார்.
எந்த கம்ப்யூட்டருக்கும் இவை தெரியாது, ஆனால், ஒவ்வொரு குழந்தையும் இவற்றை அறிந்திருக்கும் என்கிறார்.
ரோபோக்களால் ஆலையில் கார்களை அடுக்க முடியும் ஆனால் படுக்கை போடவோ, வீட்டை சுத்தமாக்கவோ, குழந்தையை பார்த்துக்கொள்ளவோ முடியாது என்பது போன்ற உதாரணங்களையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கம்ப்யூட்டரை செஸ் ஆட வைப்பதை விட, வீட்டை சுத்தமாக்க செய்வது கடினம் என்கிறார்.
நமக்கு கொஞ்சம் சாமானிய விஷய அறிவு மற்றும் அவற்றை பயன்படுத்தும் புரோகிராம்கள் வேண்டும் என்கிறார்.
இத்தகைய அறிவு ஒரு சிடியில் அடங்கிவிடலாம் என்றும் கூறுகிறார்.
தொடர்ந்து கம்ப்யூட்டர்கள் சாமானிய அறிவு பெறுவது பற்றி எல்லாம் பேசுகிறார்.
சாட் ஜிபிடி இன்று அசர வைக்கிறது என்றால், ஒரு சிடி ராம் அல்ல, ஒரு கோடி சிடிகளில் தேக்கி வைக்ககூடிய தகவல்களும், தரவுகளும் அதற்கு உள்ளீடு செய்யப்பட்டு, அவற்றை பகுத்தறியும் திறனும் உருவாக்கப்பட்டுள்ளது தான்.
இது சாத்தியம் எனும் மின்ஸ்கி போன்றோரின் தொலைநோக்கே இதற்கான அடித்தளம்.