சாட்ஜிபிடி மாயமும், அக்டோபஸ் சோதனையும்!

டூரிங் சோதனை ஏஐ நுட்பத்திற்கான அளவுகோள் மட்டும் அல்ல, ஒருவிதத்தில் ஏஐ துறைக்கான துவக்க புள்ளிகளிலும் ஒன்று. இடைப்பட்ட ஆண்டுகளில் ஏஐ நுட்பம் எவ்வளவோ முன்னேறி வந்துவிட்டாலும், டூரிங் சோதனை இன்னமும் அதன் முக்கியத்துவத்தை இழந்துவிடாமல் தொடர்கிறது.

சாட்ஜிபிடி யுகத்திலும், டூரிங் சோதனை செல்லுபடியாகும் நிலையில் இப்போது ஆக்டோபஸ் சோதனை புதிதாக சேர்ந்திருக்கிறது.

அதென்ன ஆக்டோபஸ் சோதனை?

எமிலி பெண்டர் (Emily M. Bender) எனும் கம்ப்யூட்டர் மொழியியல் அறிஞர் தனது சகாவுடன் சேர்ந்து எழுதிய ஆய்வுக்கட்டுரையில் இருந்து உருவானது தான் ஆக்டோபஸ் சோதனை.

சாட்ஜிபிடி கதை எழுதுகிறது, கவிதை எழுதுகிறது, திரைக்கதை எழுதுகிறது என்றெல்லாம் பெரும்பாலனோர், இந்த சாட்பாட் திறன் பற்றி வியந்து போற்றிக்கொண்டிருக்கும் நிலையில், இதன் பின்னே உள்ள மொழி மாதிரி நுட்பத்தின் போதாமைகளை உணர்த்தும் வகையில் எமிலி, இந்த ஆய்வுக்கட்டுரையை எழுதியிருக்கிறார்.

சாட்ஜிபிடி உண்மையில் எல்லாவற்றையும் உருவாக்கினாலும், எதையும் புரிந்து கொள்வதில்லை என்பதே இந்த கட்டுரையின் சாரம்சம். இதை உணர்த்தும் வகையில், ஒரு கற்பனை கதையை விவரித்துள்ளார்.

இரண்டு தனிநபர்கள், ஆள் இல்லாத இரண்டு தீவுகளில் சிக்கி கொள்கின்றனர். அதிர்ஷ்டவசமாக அந்த தீவில் கடன் வழியே செயல்படும் தந்தி சேவை இருக்கிறது. இருவரும் தந்தி வழியே தொடர்பு கொள்கின்றனர். இதனிடையே கடலுக்கு அடியே உள்ள ஆக்டோபஸ் ஒன்று இந்த உரையாடலை கவனித்து வருகிறது. இருவரும் டைப் செய்யும் செய்திகள் போக்கை பார்த்து கொண்டே இருக்கும் ஆக்டோபஸ் ஒரு கட்டத்தில் இரண்டாவது நபருக்கு பதிலாக தான் தொடர்பு கொள்ளத்துவங்குகிறது.

ஆக்டோபஸ் உரையாடல் போக்கை கவனித்துள்ளதால் அதே போல தொடர்பு கொள்கிறது. மறுமுனையில் இருப்பவரும் முதலில் இருந்தவரோடு பேசுவது போலவே பேசி வருகிறார்.

இதனிடையே திடிரென ஒரு நாள் அவர், கரடி என்னை தாக்குகிறது. என்னிடம் ஒரு கம்பு இருக்கிறது. எப்படி என்னை தற்காத்து கொள்வது என கேட்கிறார். இது போன்ற நிஜ உலக சம்பவ அறிவு ஆக்டோபசுக்கு இல்லாததால் அது பதிலுக்கு ஏதோ உளறுகிறது. மறுமுனையில் இருப்பவர் ஆக்டோபஸ் மோசடியை கண்டுபிடித்து விடுகிறார்.

இந்த கதையில் வரும் ஆக்டோபஸ் போன்றது தான் சாட்ஜிபிடி போன்ற மொழி மாதிரி சார்ந்த சாட்பாட்கள் என்கிறார் எமிலி. எக்கச்சக்கமான டிஜிட்டல் பிரதிகளை பார்த்து அவற்றின் அடிப்படையில் அடுத்த வார்த்தையை யூகித்து வாசகங்களை உருவாக்கித்தருகிறதே தவிர, சாட்ஜிபிடிக்கு ஒரு மண்ணும் புரியாது என்கிறார்.

எமிலி, ஏஐ தொடர்பான முக்கிய கேள்விகள் மற்றும் விமர்சனத்தை முன்வைக்கும் வல்லுனராக இருக்கிறார். இது பற்றி விரிவாக வாசிக்க: https://nymag.com/intelligencer/article/ai-artificial-intelligence-chatbots-emily-m-bender.html

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *