அலெக்சா சேவை மூடப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது. இதற்கான அறிவிப்பை அமேசான் வெளியிட்ட போது, இணையத்தில் சின்னதாக கூட ஒரு போராட்டம் இல்லாமல் போனது கொஞ்சம் வேதனையானது தான். பழைய இணையம் என்றால், அலெக்சாவை மீட்டெடுப்போம் என்று போராட்டம் நடத்தியிருப்பார்கள். அல்லது, யாரேனும் சில டெவலப்பர்கள் அலெக்சா சேவையை அமேசான் உதவியின்றி தொடர்வதற்கான திட்டத்தை அறிவித்திருப்பார்கள்.
ஆனால், அதிக சளசளப்பு இல்லாமல், அலெக்சா இணைய கண்காணிப்பு தகவல் சேவை மூடப்பட்டு இப்போது மறக்கப்பட்டு விட்டது. இணையத்தின் ஆரம்ப கால மைல்கல் சேவைகளில் ஒன்று என்ற முறையில் அலெக்சாவை நினைவில் கொள்ளவே இந்த பதிவு.
இந்த இடத்தில் அலெக்சா எனும் போது, அமேசான் நிறுவனத்தின் குரல் வழி சேவையை குறிப்பிடவில்லை என்றும், அந்நிறுவனத்தால் 1999 ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகளுக்கு பின்னர், 2022 ம் ஆண்டில் மூடப்பட்ட அலெக்சா.காம் இணைய போக்குவரத்து கண்காணிப்பு சேவையை குறிப்பிடுகிறேன் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம்.
ஆம், அலெக்சா என்பது இணையதளங்களுக்கான போக்குவரத்தை கண்காணித்து தகவல் அளித்து வந்த சேவை. இப்போது, இணைய உலகில் அலெக்சா என்றால், பெரும்பாலானோருக்கு அமேசானின் குரல் வழி உதவியாளர் சேவை தான் நினைவுக்கு வரும் என்றாலும், 1990 களின் இறுதியிலும், புத்தாயிரமாண்டின் முதல் பத்தாண்டுகளிலும், அதன் பிறகும் கூட அலெக்சா என்றால், இணைய போக்குவரத்து கண்காணிப்பு சேவை என்றே அறியப்பட்டு வந்தது.
இணையதளங்களுக்கு வருகை தரும் பயனாளிகள் எண்ணிக்கை அடிப்படையில் தளங்களை பட்டியலிட்டதால் இணையத்தின் முன்னணி இணையதளங்கள் எவை என்பதை அறியவும் அலெக்சாவே பயன்பட்டது. ஒரு கட்டம் வரை அலெக்சா உதவியுடன் இணையத்தின் முன்னணி இணையதளங்களை பட்டியலிடுவதும் கூட பிரபலமாக இருந்தது.
அலெக்சா இலவச சேவை என்றாலும், இணைய போக்குவரத்து தொடர்பான கூடுதல் தகவல்களை கட்டண அடிப்படையிலும் அளித்து வந்தது.
அலெக்சாவுக்கு போட்டி சேவை ஒரு சில இருந்தாலும், இணையதள போக்குவரத்து என வரும் போது அலெக்சாவே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
பல ஆண்டுகள் அமேசான் நிறுவனத்தின் கீழ் இயங்கிய அலெக்சாவை மூடப்போவதாக 2021 ம் ஆண்டு இறுதியில் அறிவித்து 2022 ம் ஆண்டு துவக்கத்தில் அதை செயல்படுத்தியது. அலெக்சா சேவை நிறுத்தப்படுவதற்கு அமேசான் தெரிவித்த காரணம், இந்த சேவையை நடத்துவது கட்டுப்படியாகவில்லை என்பதாகும்.
அதாவது, அலெக்சா சேவையை தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருப்பதற்கான செலவை ஈடு கொடுக்கும் அளவுக்கு அது மதிப்பு கொண்டிருக்கவில்லை என அமேசான் தெரிவித்திருந்தது. அந்த சேவைக்கான தேவையும் குறைந்திருப்பதாகவும் அமேசான் தெரிவித்திருந்தது.
இதை அலெக்சாவிற்கு எதிரான அவதூறு என்று கூறலாம் என்பதை விட்டுவிட்டு, அமேசான் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொண்டாலும், அலெக்சா போன்ற சேவை தொடர்ந்து நடத்த அமேசானும் நிச்சயம் பணம் ஒரு பிரச்சனை அல்ல. (ஹேக்கர்நூன் இணையதள செய்தி இதை அழகாக சுட்டிக்காட்டுகிறது). எனில் அமேசான் அலெக்சா சேவையை மூடியது ஏன்?
இதற்கான பின்னணி காரணங்களை பெரிதாக அராய வேண்டியதில்லை. ஹேக்கர்நூன் செய்து சுட்டிக்காட்டுவது போலவே, அலெக்சாவை அமேசான் ஏன் இழுத்து மூடியது என்றால், அதனால் முடியும் என்பதால் தான்.
ஒரு முன்னோடி சேவையை நிறுத்துகிறோமே என்ற எந்த கவலையும் இல்லாமல் அமேசான் அதிபர் ஜெப் பெசோசால், அலெக்சா போன்ற சேவைகளை மூட முடியும். ஏனெனில், இத்தகைய சேவைகளை அவரால் வாங்க முடிவதால், அந்த சேவை அவருக்கு சொந்தமானதாக இருக்கிறது. எனவே அதன் வரலாறு பற்றியெல்லாம் அவர் யோசிப்பதில்லை.
இணையவாசிகள் நோக்கில் பார்த்தால் அமேசான், அலெக்சாவை படுகொலை செய்திருப்பதாக ஆவேசத்தோடு குற்றம் சாட்டலாம். அமேசான் நோக்கில் இது வர்த்தக நோக்கில் சரியான முடிவாகவும் இருக்கலாம். அமேசான் நோக்கம் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
அமேசான் நினைத்திருந்தால் இந்த சேவையை தொடர்ந்து நடத்தியிருக்கலாமே என்று தான் நினக்கத்தோன்றுகிறது. இந்த சேவைக்காக ஏன் இத்தகைய ஆதங்கம் என கேட்பவர்கள், அலெக்சா சேவையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.
1996 ம் ஆண்டு ’அலெக்சா இன்நெர்நெட்’ எனும் பெயரில் இந்த சேவை அறிமுகமானது. இணையவாசிகள் எந்த எந்த தளங்களை எல்லாம் பார்வையிடுகின்றனர் என்பதை கொண்டு, இணையதளங்களை அவற்றுக்கான போக்குவரத்து அடிப்படையில் பட்டியலிடுவதற்கான வழியாகவும் இந்த தளம் அமைந்தது.
இணையத்தை அளவிடுவதற்கான பிரபலமான சேவையாகவும் அலெக்சா விளங்கியது.
இந்த பிரபலத்தை கருத்தில் கொண்டே அமேசான் 1999 ல் 250 மில்லியன் டாலருக்கு இதை விலைக்கு வாங்கியது.
அமேசான், கூகுள் போன்ற பெரும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான இணைய நிறுவனங்கள் அல்லது சேவைகளை விலைக்கு வாங்கு பின்னர் தங்கள் விருப்பம் போல அவற்றை தொடர்ந்து நடத்துவது அல்லது, மூடுவது போன்ற முடிவுகளை மேற்கொள்வது வழக்கமாக நடப்பது தான் என்றாலும், அலெக்சாவை அமேசான் இழுத்து மூடியது குறித்து அதிருப்தி கொள்ள காரணங்கள் இல்லாமல் இல்லை.
முதல் காரணம் அலெக்சா தளத்தின் வரலாற்று சிறப்பு என்றால் இரண்டாவது காரணம் அதன் பயன்பாடு.
அலெக்சா இன்நெர்நெட் சேவை இணைய முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் புருஸ்டர் காலேவால் ( Brewster Kahle) துவக்கப்பட்டது. இணைய போக்குவரத்தை அறிவதற்கான இந்த சேவையை அடிப்படையாக கொண்டே, இன்று இணையத்தின் காப்பகமாக அறியப்படும், வேக்பேக் மெஷின்-Wayback Machine ( இண்டெர்நெட் ஆர்க்கேவ்) தளத்தை அவர் துவக்கினார்.
நேற்று இருந்த தளங்கள் இன்று இல்லை என சொல்லக்கூடிய நிலையில், இணையதளங்களை அவற்றின் பழைய வடிவில் பாதுகாத்து, ஆய்வாளர்களும் பயனாளிகளும் அணுகும் வகையில் இணையத்தின் பழைய வடிவங்களை இந்த காப்பகம் பாதுகாத்து வருகிறது.
இணைய காப்பகத்திற்கான மூல வித்து எனும் அடிப்படையில் அலெக்சா சேவையை கருதலாம். மேலும், சராசரி இணையவாசிகள் இணையத்தில் செல்வாக்கு பெற்றிருக்கும் தளங்களை அறிவதற்கான எளிய வழியாகவும் அலெக்சா விளங்கியது.
ஆனால் இதை எல்லாம் மீறி இன்று அலெக்சா பழங்கதையாகி விட்டது. இப்போது அலெக்சா என இணையத்தில் தேடினால் அலெக்சா டாட் காம் தளத்தில் அமேசானின் குரல் வழி சேவையான அலெக்சாவுக்கான தகவல்களையே பார்க்க முடிகிறது.
- அலெக்சா இண்டெர்நெட் சேவையின் அருமையை உணர அதன் பழைய பக்கங்களை இணைய காப்பகத்தில் தேடி பார்க்கவும். அப்பயே இந்த இணைய கால இயந்திரத்தின் அருமையையும் உணரலாம்.
- இணைய காப்பகம் பற்றிய பதிவு.
பி.கு: அலெக்சா சேவை பற்றி எனக்கு தனிப்பட்ட முறையிலும் ஈடுபாடு உண்டு. வலைப்பதிவு துவங்கிய காலத்தில், அலெக்சா தரவரிசை கொண்டு தமிழில் முன்னணி தொழில்நுட்ப வலைப்பதிவு பட்டியல் அவ்வப்போது பதிவர்களால் பகிரப்பட்டதையும், அதில் பல நேரங்களில் சைபர்சிம்மன் பதிவு முன்னிலை பெற்றதும் நிழலாடுகிறது.