கிக்ஸ்டார்ட்டர் தளத்தை எப்படி வகைப்படுத்துவது?

சமூக ஊடகம் என்பது பல்வேறு வகையான சமூக அம்சம் கொண்ட இணையதளங்களை குறிப்பதற்கான குடை சொல் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். பேஸ்புக்கும் இதன் கீழ் வரும், இன்ஸ்டாகிராமும், யூடியூம், டிக்டாக் உள்ளிட்ட இன்னும் பிற இணையதளங்களும் வரும். எல்லாம் சரி, கிக்ஸ்டார்ட்டர் இந்த பிரிவில் வருமா?

அதாவது கிக்ஸ்டார்ட்டர் சமூக ஊடக தளமாகுமா? என்பதே கேள்வி.

கிக்ஸ்டார்ட்டர் சமூக ஊடக தளமா, இல்லையா எனும் அம்சத்தை அலசுவதற்கு முன், குறிப்பிட்ட ஒரு இணையதளத்தை சமூக ஊடகம் எனும் பரந்த கருத்தாக்கத்திற்குள் இடம்பெறச்செய்வதற்கான வழி என்ன? என்று கேட்டுக்கொள்வது நல்லது. ஒரு இணையதளத்தை சமூக ஊடக தளம் எனும் வரையறைக்குள் சேர்த்துக்கொள்வது அல்லது விலக்குவதற்கான வழி ஏதேனும் இருக்கிறதா?

சமூக ஊடக சேவைகள் தொடர்பாக பரவலான புரிதலும், பலவகையான பட்டியல்களும் இருந்தாலும், ஒரு இணையதளத்தை சமூக ஊடக தளம் என தரவரிசைப்படுத்துவது எப்படி?

சமூக ஊடகத்திற்கு என்று எந்த அதிகாரப்பூர்வ அமைப்பும் இல்லை என்பதால், சமூக ஊடக முத்திரை அல்லது அங்கீகாரம் அளிப்பதற்கான சாத்தியம் இல்லை. இவை தான் சமூக ஊடக தளங்களை என ஆசிர்வதிக்க கூடிய (!) அறிவார்ந்த தனி வல்லுனர்களும் இருப்பதாக தெரியவில்லை.

இப்போது கிக்ஸ்டார்ட்டர் தளத்திற்கு வருவோம். கிக்ஸ்டார்ட்டர் இணையம் மூலம் கூட்ட நிதி திரட்ட உதவும் முன்னோடி இணையதளம். இதை இணையதளம் என்று சொல்வதைவிட இணைய இயக்கம் என்று சொல்வதே சரியாக இருக்கும். அந்த அளவுக்கு இணைய உலகில் தாக்கம் செலுத்தும் இணையதளம்.

கூட்டநிதி திரட்டும் மேடையான கிக்ஸ்டார்ட்டர் தளத்தை சமூக ஊடக வரையறைக்குள் கொண்டு வரும் தேவை என்ன என்று கேட்கலாம். கிக்ஸ்டார்ட்டருக்கு சமூக ஊடக அந்தஸ்து தேவையில்லை என்றாலும், இந்த தளம் சமூக ஊடக குடைக்குள் வருமா எனும் கேள்வி சமூக ஊடகம் தொடர்பான நமது பார்வையையும், புரிதலையும் தெளிவாக்க முக்கியமானது.

முதலில் இந்த கேள்விக்கான அவசியத்தை பார்த்துவிடலாம். பயனர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள வழி செய்யும் இணையதளங்களே சமூக ஊடக தளங்கள் என கொள்ளப்படுகின்றன. உருவாக்கம், பகிர்வு, உள்ளடக்கம் ஆகியவை இதில் முக்கியமாக அமைகின்றன. பயனர் உருவாக்கும் உள்ளடக்கம் என்பதும் இன்னொரு முக்கிய அம்சம்.

கிக்ஸ்டார்ட்டர் அடிப்படையில் பயனர்கள், சக பயனாளிகளிடம் இருந்து தங்களது படைப்பூக்கம் சார்ந்த புதிய திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்கான இணையதளம் என்றாலும், இதில் உறுப்பினர்கள் தங்களுக்குள் உரையாடும் வசதி இருக்கிறது. அதோடு உறுப்பினர்கள், நிதி திரட்டுபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம், திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம். முக்கியமாக உறுப்பினர்கள் தங்களது நோக்கத்தையும், திட்டத்தையும் விளக்கி எழுதி ஆதரவு கோரலாம்.

பயனர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளும் வசதியுடன் உள்ளடக்க உருவாக்கத்தை கருத்தில் கொண்டு பார்த்தால், கிக்ஸ்டார்ட்டரும் சமூக ஊடக சேவை தான். எல்லாவற்றுக்கும் மேல், சமூக ஊடக தளங்களின் ஆதார அம்சங்களில் ஒன்று பயனாளிகளுக்கான இணைய சமூகமாக அவை விளங்குவது. கிக்ஸ்டார்ட்டரிலும் பயனாளிகள் தங்களுக்கான சமூகங்களை காணலாம்.

எனில் ஏன், கிக்ஸ்டார்ட்டர் தளம் ஏன், சமூக ஊடக தளம் என குறிப்பிடப்படுவதில்லை. அதைவிட முக்கியமாக கிக்ஸ்டார்ட்டர் தளம் சமூக ஊடக தளமாக அமையுமா என்பதை எப்படி உறுதி செய்து கொள்வது. கிக்ஸ்டார்ட்டருக்கான விக்கிபீடியா பக்கம், இந்த தளத்தை கூட்ட நிதி வகையைச் சேர்ந்த தளம் என்றே குறிப்பிடுகிறது. கிக்ஸ்டார்ட்டர் சமூக ஊடக தளமா? என கூகுளில் தேடிப்பார்த்தால், விக்கிபீடியா பக்கத்தை தான் முதலில் முன்னிறுத்துகிறது. மற்றபடி, கிக்ஸ்டார்ட்டர் திட்டங்களுக்கு ஆதரவு திரட்ட கூகுளை பயன்படுத்துவது எப்படி எனும் பதிவுகளை தான் கூகுள் சுட்டிக்காட்டுகிறது.

ஆக, கூகுள் கிக்ஸ்டார்ட்டரை கூட்ட நிதி தளமாக மட்டுமே பார்க்கிறது. ( அவ்வளவு தான் கூகுளின் திறன்).

கூகுளுக்கு போட்டியாக சொல்லப்படும், ஏஐ திறன் கொண்ட பிர்பலக்சிட்டி (https://www.perplexity.ai/ ) தேடியந்திரத்தில் இதே கேள்வியை கேட்டால், கிக்ஸ்டார்ட்டர் சமூக ஊடக தளம் அல்ல என பதில் அளித்து அசத்துகிறது. இந்த தளம் கூட்ட நிதி தளம் என துவங்கி விளக்கமும் அளிக்கிறது. கேள்வியை புரிந்து கொண்டு, அதற்கு நேரடியாக பதில் அளிக்கும் இதன் திறன் வியக்க வைக்கிறது. ஆனால் சிக்கல் என்னவெனில், சமூக ஊடக சேவைகளுக்கான இலக்கனப்படி பார்த்தால் கிக்ஸ்டார்ட்டர் சமூக ஊடக சேவை தான். அதற்கான குறிப்புகள் இந்த பதிலில் இல்லை.

பயனர்கள் தங்களுக்குள் தகவல் தொடர்பு கொள்ள வழி செய்யும் இணைய சேவைகள் சமூக ஊடக தளங்களாக கருதப்படும் வரையறையின் படி, வலைப்பதிவுகளும், விக்கி சார்ந்த தளங்களும் சமூக ஊடகத்தின் அங்கமாக கொள்ளப்படுகின்றன. ஆக, விக்கிபீடியாவும் சமூக ஊடக தளம் தான். விக்கிபீடியா பயனர்கள் இணைந்து உருவாக்கும் கூட்ட சேகரிப்பு வகை தளமாக அமைகிறது. விக்கிபீடியா சமூக ஊடக தளம் எனில், கூட்ட நிதி தளமான கிக்ஸ்டார்ட்டரும் சமூக ஊடக சேவை தானே.

இந்த கேள்விக்கு தீர்மானமான விடை காண இணையத்தில் வழி இல்லாததை என்னவென சொல்வது. நிலைமை இப்படி இருக்க, கூகுளை சிறந்த தேடியந்திரம் என கொள்வதோதோ, ஏஐ சேவையான சாட்ஜிபிடியை அதற்கு போட்டி என கொண்டாடுவதோ போதாமை தானே.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *