இணையதள சேமிப்பு பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை எனத்தெரிகிறது. இல்லை எனில், இணைய பக்க சேமிப்பு சேவையை கைவிடுவதாக கூகுள் அறிவித்த போது எதிர்ப்பு அலை உருவாகியிருக்க வேண்டும். ஆனால், இந்த சேவை விலக்கி கொள்ளப்பட்ட செய்தி கூட பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரியவில்லை.
தகவல் இது தான். முன்னணி தேடியந்திரமான கூகுள், சேமிக்கப்பட்ட பக்கங்கள் எனும் வசதியை தனது தேடலின் ஒரு பகுதியாக வழங்கி வந்தது. கேஷ்டு (cached) பேஜ் எனும் பெயரில் இந்த வசதியை அணுகலாம்.
கேஷ்டு என்றால், சேமிக்கப்பட்ட என பொருள் கொள்ளலாம். கம்ப்யூட்டர் உலகில் கேஷ்டு பல விதங்களில் பயன்பட்டாலும், இணையத்தை பொருத்தவரை, இணைய பக்கங்களின் பழைய வடிவங்கள் தேடியந்திரங்களால் சேமித்து வைக்கப்படுவதை இது குறிக்கிறது.
கூகுளும் இது போல இணைய பக்கங்களின் பழைய வடிவங்களை சேமித்து வைக்கும் வழக்கம் கொண்டிருந்தது. அதாவது, இணையதளங்களை பட்டியலிடுவதற்காக இணையத்தை துழாவும் போது, கண்ணில் படும் இணையதளங்களை அதன் அப்போதைய வடிவில் கூகுள் சேமித்து வைப்பதுண்டு.
பின்னர் தேடலின் போது இணையதளங்கள் பட்டியலிடப்படும். இந்த பட்டியலில் இடம்பெறும் முடிவுகளில், எந்த முடிவை கிளிக் செய்தாலும், அதன் தற்போதைய வடிவை அணுகுவதோடு, சேமிப்பு மூலம் அதன் பழைய வடிவமையும் அணுகலாம். தேடல் முடிவின் வலப்பக்கத்தில் தோன்றும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து இந்த வசதியை அணுகலாம்.
பொதுவாக இந்த வசதியை யாரும் கவனித்திருக்க மாட்டார்கள். ஆனால், இணையதளங்களை பார்வையிடுவதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு அவற்றை அணுக மாற்று வழி தேவைப்படும் போது, சேமிக்கப்பட்ட பக்கங்கள் உதவிக்கு வரும்.
உதாணத்திற்கு ஒரு இணையதளம் 404 பிழை பக்கமாக மாறியிருக்கிறது என்றால் அல்லது அந்த தளம் கைவிடப்பட்ட முடங்கியிருக்கிறது என்றால், அதன் பழைய வடிவத்தை சேமிக்கப்பட்ட பக்கம் மூலம் அணுகலாம்.
இணையதளங்களின் பக்கம் தோன்ற தாமதம் ஆனாலும், இந்த வசதியை அணுகலாம். இணையதளங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வு செய்யவும் இந்த வசதியை அணுகலாம்.
கட்டணச்சேவை தடைகளை கொண்ட இணையதளங்களை அணுகவும் இந்த வசதி பயன்படும்.
ஒரு இணைய பக்கத்தை அணுக லாகின் வசதி தேவை என தெரிய வரும் போது, .. அதன் கூகுள் சேமிப்பு வசதியை அணுகலாம்’ என சித்தரிக்கும் பிரபல மீம் ஒன்று இந்த வசதியின் பயன்பாட்டை அழகாக உணர்த்துகிறது.
முன்னணி தேடியந்திரம் என்ற அளவில் கூகுள் தொடர்ந்து இணையத்தை பட்டியலிட்டுக்கொண்டிருப்பதால், அதில் உள்ள இணையதளங்களின் அப்போதைய வடிவத்தை அது தனது சர்வர்களில் சேமித்து வைக்கும் திறன் கொண்டுள்ளது. இந்த சேமிப்பை பயனாளிகளுக்கு அளிப்பதே கூகுளுக்கான அறம். ஆனால், பல ஆண்டுகளாக அளித்து வந்த இந்த வசதியை கூகுள் 2024 பிப்ரவரி முதல் நிறுத்தியிருக்கிறது.
இதற்கான காரணத்தை கூகுள் விளக்கியிருந்தாலும், ( இணைய பக்கங்கள் பிரவுசரில் தோன்றுவதில் தற்போது எந்த பிரச்சனையும் இல்லை என்பதால், இது தேவையில்லை), இது மொக்கையான காரணம் என்பதை இணைய சேமிப்பின் முக்கியத்தை அறிந்தவர்கள் உணர்வார்கள்.
உண்மையில், கூகுள் இணைய சேமிப்பை பயனாளிகளுக்கு வழங்கும் தனது பொறுப்பை தட்டிக்கழித்துள்ளது.
கூகுளின் இந்த முடிவு எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஒரு பக்கம் இருக்க, இணைய சேமிப்பை மிக செம்மையாக செய்து வரும் இணைய காப்பகமான இண்டெர்நெட் ஆர்கேவின் பணியையும், முக்கியத்துவத்தையும் இது அதிகமாக்கியிருக்கிறது.
இணைய காப்பகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்த இணையதளத்தை அறியவும்.
இணைய தேர்வுகளை சேமிக்க உதவும் புதிய சமூக ஊடகம் பற்றி இணையமலரில் எழுதியிருந்தேன் – https://cybersimman.substack.com/p/855 . அந்த சேவையை பயன்படுத்தி புகழ்பெற்ற பிளாரன்ஸ் வெள்ளம் தொடர்பாக உருவாக்கியுள்ள இணைய இணைப்புகள். இந்த வெள்ளம் கற்றுத்தரும் பாடங்கள் அதிகம். https://www.curations.club/hub/curation/6615fc92206a9bfd628840f2