சிறந்த காட்சி விளக்கத்திற்கு உதவும் டகாஹாஷி முறை

பொருளதார வளர்ச்சிக்கும், சுறுசுறுப்புக்கும் அறியப்படும் ஜப்பான், சிறப்பாக காட்சி விளக்கம் செய்யும் முறைகளுக்கும் அறியப்படுகிறது. ஏற்கனவே பெச்சாகுச்சா எனும் அதிவேகமாக காட்சி விளக்கம் அளிக்கும் முறை அந்நாட்டில் அறிமுகமாகி உலகமெங்கும் பரவியது போல, டகாஹாஷி எனும் இன்னொரு முறையும் பிரபலமாக இருப்பதை அறிய முடிகிறது.

20 ஸ்லைடுகள் , ஒவ்வொன்றுக்கும் 20 நொடிகள் எனும் கட்டுப்பாட்டை கொண்ட பெச்சாகுச்சா முறை, ஜப்பானுக்கே உரித்தானது என்றாலும், காட்சி விளக்கத்திற்கான அடிப்படை இலக்கணத்தை மீறாதது. இந்த முறையில் காட்சிகளுக்கான முக்கியத்துவம் மாறவில்லை.

ஆனால், டகாஹாஷி (Takahashi ) முறை கொஞ்சம் மாறுபட்டு, படங்கள் அல்லது காட்சிகள் இல்லாமல், முழுவதும் எழுத்து வடிவை மட்டுமே சார்ந்திருக்கிறது.

காட்சி விளக்கம் தொடர்பான எந்த வழிகாட்டி புத்தகத்தை எடுத்தாலும், எழுத்துக்களை குறையுங்கள், காட்சி துணையோடு உங்கள் செய்தியை சொல்லுங்கள் என காதை பிடித்து திருகாத குறையாக வலியுறுத்துகின்றன. அதிலும் குறிப்பாக ஸ்லைடு அடைத்துக்கொண்டிருக்கும் வகையில் பொடி எழுத்து வடிவங்களுக்கு எல்லாம் இடமே இல்லை.

அப்படியிருக்க, டகாஹாஷி முறை, காட்சிகள் அல்லாமல், எழுத்துக்களை மட்டுமே கொண்டதாக அமைகிறது. ஆனால், பொடி எழுத்துக்களோ, சிறிய எழுத்துக்களோ அல்ல, எல்லாம் பெரிதாகவும், தனித்தும் தோன்றக்கூடிய எழுத்து வடிவங்கள்.

அதாவது அதிக வார்த்தைகளை கொண்ட பெரிய வாசகங்களை எல்லாம் தவிரித்துவிட்டு, குறைவான சொற்களையே பயன்படுத்த வேண்டும். அந்த சொற்கள் ஏதேனும் ஒரு வகையில் கவனத்தை ஈர்க்க வேண்டும். அந்த கவன ஈர்ப்பை மையமாக கொண்டு காட்சி விளக்கத்தை முன்னெடுக்க வேண்டும். இது தான் டகஹாஷி முறை.

ஐந்து நிமிடத்தில் ஒரு காட்சி விளக்கத்தை அளிக்க வேண்டியிருந்த போது தனது பார்வையாளர்களை கவர்வதற்காக டகாஹாஷி மிகவும் யோசித்து இந்த முறையை உருவாக்கியிருக்கிறார். அவரிடம் காட்சி விளக்க மென்பொருளோ, புகைப்பட சேவைகளோ இல்லாததால், சொற்ப சொற்களை பெரிதாக கையாளும் வகையிலான இந்த முறையை கண்டுபிடித்திருக்கிறார்.

உதாரணத்திற்கு, நான்கு எனும் எழுத்தை காண்பித்து என்னிடம் நான்கு முக்கிய குறிப்புகள் உள்ளன, அவற்றில் முதல் குறிப்பு என ஒன்று எனும் எண்ணை காண்பித்து காட்சி விளக்கத்தை மேற்கொள்ளலாம்.

இந்த முறை மிகவும் செயல்திறன் வாய்ந்தாக இருப்பதால், பலரும் பயன்படுத்த துவங்கி சர்வதேச அளவில் பிரபலமாகி இருக்கிறது. காட்சி விளக்க கலையின் வழிகாட்டியும், வல்லுனருமான கர் ரெய்னால்ட்ஸ் தனது பிரசண்டேஷன் ஜென் தளத்தில் இந்த முறையை விவரித்திருக்கிறார்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *