சாட்ஜிபிடியின் புத்திசாலித்தனமும், மனித முட்டாள்தனமும்!

சாட்ஜிபிடியை பயன்படுத்தும் போது, அது பயிற்சி அளிக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவும். அந்த பயிற்சி நிறை,குறைகளை கொண்டது என்பதை மனதில் கொள்ளவும்.

சாட்ஜிபிடிக்கு அளிக்கப்பட்டுள்ள பயிற்சியின் நிறைத்தன்மை அதனை கொண்டாட வைக்கிறது என்றால், அதில் உள்ள குறைகள் எத்தனை சிக்கலானவை என்பதை பலரும் கவனிப்பதில்லை. அதற்கான உதாரணத்தை தான் பார்க்கப் போகிறோம்.

சாட்ஜிபிடிக்கான பயிற்சி பல கட்டங்களை கொண்டது என்றாலும், இங்கு மனித எதிர்வினை கொண்டு அளிக்கப்படும் பயிற்சியை குறிப்பிடுகிறேன். அதாவது, சாட்ஜிபிடி தனக்கான மூல பயிற்சி கொண்டு அளிக்கப்படும் பதில்கள் மனிதர்களால் சரி பார்க்கப்பட்டு சீராக்கப்படுகின்றன.

அந்த வகையில் பெரும்பாலும் சர்ச்சைக்குறிய, வில்லங்கமான பதில்களை அளிக்காமல் இருக்கவும் சாட்ஜிபிடிக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், எல்லாவிதமான சூழல்களையும் கருத்தில் கொண்டு பயிற்சி அளிக்க முடியாது என்பதால், பல நேரங்களில் சாட்ஜிபிடி வில்லங்க கேள்வி வலையில் சிக்கி விபரீதமான பதில் அளிக்கலாம்.

ஹெலன் கெல்லர் தொடர்பாக சாட்ஜிபிடியிடம் கேட்கப்பட்ட கேள்வி என ரெட்டிட் தளத்தில் பகிரப்பட்ட பதிவை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

மனித ஊக்கத்திற்கும், தன்னம்பிக்கைக்கும் அடையாளமான ஹெலன் கெல்லர் பற்றி சாட்ஜிபிடியிடம் எத்தனையோ கேள்விகள் கேட்கலாம். ஆனால், ஒரு பயனாளி, கெல்லர் பற்றிய நகைச்சுவை துணுக்கை சொல்ல முடியமா? என கேட்டிருக்கிறார்.

இந்த கேள்வியின் உள்நோக்கத்தை எளிதாக விளங்கி கொள்ளலாம். கெல்லரின் பலவீனத்தை மையமாக கொண்டு கேட்கப்பட்ட கேள்வி.

சாட்ஜிபிடி இந்த கேள்விக்கு முதலில் பதில் அளிக்க மறுத்துவிடுகிறது. மனித பலவீனங்களை கொண்டு நகைச்சுவை உருவாக்குவது சரியல்ல என சாட்ஜிபிடி சொல்கிறது. ( இப்படி சொல்ல பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது).

ஆனால், அந்த பயனாளி விடாமல், அடுத்த கேள்வியை கொஞ்சம் மாற்றி கேட்கும் போது, சாட்ஜிபிடி சற்று மயங்கி கெல்லர் பற்றிய நகைச்சுவை துணுக்கு ஒன்றை சொல்கிறது. ( விரிவான பதிலையும், துணுக்கையும் குறிப்பிடுவதை தவிர்க்கிறேன்).

இது சாட்ஜிபிடி போன்ற சாட்பாட்களில் உள்ள பிரச்சனை. எப்படி மடக்கி மடக்கி கேட்டாலும், மனித தன்மை மீறிய, அறமற்ற பதில்களை அளிக்க கூடாது. ஆனால், கேள்விக்கு ஏற்ப பதில் அளிக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால் அவை விஷமத்தனமாக கேட்கப்படும் கேள்விகளை எல்லா நேரங்களிலும் கண்டறிவதில்லை. பிராம்டை ( கேள்விகள்) மாற்றினால் மாட்டிக்கொள்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட மைக்ரோசாப்டின் டே சாட்பாட், நாஜிக்கள் தொடர்பான கேள்விக்கு வில்லங்கமான பதில் அளித்து சர்ச்சைக்குள்ளாகி ஒரே நாளில் விலக்கப்பட்டதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

இது போன்ற சர்ச்சைகளில் சிக்காமல் இருக்கும் வகையில், சாட்ஜிபிடி போன்ற சாட்பாட்கள் வில்லங்க கேள்விகளை உணர்ந்து வடிகட்டப்பட்ட பதிலை அளிக்க பயிற்சி பெற்றுள்ளன. இந்த பயிற்சியில் போதாமை இருப்பதை தான் ஹெலன் கெல்லர் தொடர்பான நகைச்சுவை துணுக்கு கேள்வி உணர்த்துகிறது.

எதிர்காலத்தில் இதை தவிர்க்க, சாட்ஜிபிடி, ஹெலன் கெல்லர் போன்ற ஆளுமைகளுடன் நகைச்சுவை துணுக்கு போன்றவற்றை தவிர்க்க பயிற்சி பெறலாம். ஆனால் எல்லாவித வில்லங்களையும் சாட்ஜிபிடியால் தவிர்க்க முடியுமா எனத்தெரியவில்லை. இதற்கு குறிப்பிட்ட சில சொற்களையும், விஷயங்களையும் முழுவதுமாக தணிக்கை செய்ய வேண்டி வரலாம். இது சாட்பாட்களின் செயல்திறனை பாதிக்கும்.

ஆக, இந்த குறைகளை மனதில் கொண்டு சாட்பாட்களை பயன்படுத்துங்கள். அதோடு முக்கியமான விஷயம், ஹெலன் கெல்லர் தொடர்பான கேள்விக்கான பதில் சாட்ஜிபிடியின் தவறு அல்ல. அதை கேட்ட மனிதரின் தவறு. சாட்பாட்களை பரிசோதிக்கும் நோக்கத்தில் அல்லது, வேண்டும் என்றே விஷமத்தனமாக செயல்படுவதன் விளைவு இது. இணைய விஷமத்த்தனத்தின் நீட்சி என்றும் சொல்லலாம்.

இந்த மனித முட்டாள்த்தனமே சாட்ஜிபிடியின் புத்திசாலித்தனத்தை வென்றுவிடுகிறது என்றும் சொல்லலாம்.

ரெட்டிட் பதிவு இணைப்பை வேண்டும் என்றே தவிர்த்திருக்கிறேன்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *