குரங்கு கோட்பாடும், ஏஐ எழுதும் கவிதையும்!

குரங்கு கையில் பூமாலையை கொடுத்தால் என்னாகும் என நமக்குத்தெரியும். அதே குரங்கு கையில் கம்ப்யூட்டரை கொடுத்தால் என்னாகும் தெரியுமா?

பூமாலைக்கு நேர்ந்தது தான் கம்ப்யூட்டருக்கு நேரும் என்று சொல்லாமல், கொஞ்சம் இதற்கான நிகழ்தகவுகளை யோசித்துப்பார்க்கலாம். செயற்கை நுண்ணறிவின் ஆற்றலயும், அதைவிட முக்கியமாக அதன் ஆற்றாமையையும் புரிந்து கொள்ள இது உதவும்.

முதலில், குரங்கு கையில் ஏன் கம்ப்யூட்டரை கொடுக்க வேண்டும்?

இதற்கான பதில், ’முடிவில்லா குரங்கு கோட்பாட்டில்’ இருக்கிறது. அதாவது, ஒரு குரங்கு கம்ப்யூட்டர் முன் அமர்ந்து, முடிவில்லாமல் அதன் விசைகளை அழுத்திக்கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் அர்த்தமுள்ள வாக்கியங்களை குரங்கு எழுதத்துவங்கிவிடும் என்பதாக இந்த கோட்பாடு அமைகிறது. இதே போக்கு தொடரும் பட்சத்தில் ஏதோ ஒரு முடிவில்லா கட்டத்தில் அந்த குரங்கு ஆங்கில மகாகவி ஷேக்ஸ்பியரின் கவிதைகளை எழுதிவிடலாம் என்பதாகவும் கோட்பாடு சொல்கிறது. நம் புரிதலுக்காக, முடிவில்லா காலத்தில் குரங்கு கம்பனின் ராமாயனத்தை எழுதிவிடும் என்றும் கொள்ளலாம்.

இதென்னா அநியாயம், குரங்கு குவிதை எழுதும் ஆற்றல் பெறுமா என கோபம் கொள்வதற்கு முன், சற்று நிதானமாக யோசிக்கவும். குரங்கு கவிதை எழுதும் என இந்த கோட்பாடு உறுதியாக சொல்லவில்லை, ஆனால், குரங்கு தட்டச்சு செய்யத்துவங்கி அது, முடிவில்லாமல் அந்த செயலில் ஈடுபட்டால் ஒரு கட்டத்தில் அதனால் கவிதை எழுத முடியும் எனும் அனுமானமாக அமைகிறது.

இந்த கோட்பாடு எப்படி உருவானது என்பது தனிக்கதை. ஆனால், தற்போதைய ஏஐ யுகத்தில் இந்த கோட்பாடு மிகவும் சுவாரஸ்யமானதாக அமைகிறது. அதிலும் குறிப்பாக சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ மென்பொருள்களின் ஆக்கத்திறன் பற்றி குறிப்பிடும் போது, உண்மையில் செயற்கை ஆக்கத்திறன் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள இந்த கோட்பாடு ஒரு தொடர்பு புள்ளியாக அமையும்.

ஆம், குரங்கு கம்ப்யூட்டர் விசைப்பலகையை தட்டிக்கொண்டிருந்தால், பெரும்பாலும் தப்பும் தவறுமாக இருந்தாலும், நடுவே திட்டமிடமால் ஏதேனும் வார்த்தை தொடர்ச்சியாக வந்து விழ வாய்ப்புண்டு. இது முடிவில்லாமல் தொடரும் பட்சத்தில், கம்பன் கவிதையை அல்லது ஷேக்ஸ்பியர் கவிதையை சாத்தியமாக்கும் என்பது நிகழ்தகழ்வு அடிப்படையில் சாத்தியம் தான். இதற்கான கணிதவியல் சமன்பாட்டை விக்கிபீடியா கட்டுரையில் காணலாம்.

ஆனால், நடைமுறையில் என்ன தேவை என்றால் , குரங்களுக்கு முதலில் நாம் கம்ப்யூட்டர் கற்றுத்தர வேண்டும். அதற்கு முன், கம்ப்யூட்டர் முன் உட்கார கற்றுத்தர வேண்டும். அதன் பின் ஆங்கிலமோ வேறு மொழி எழுத்துக்களை தட்டச்சு செய்ய சொல்லிக்கொடுத்தால், முடிவில்லா செயல்பாட்டில் ஒரு கவிதை சாத்தியமாகலாம்.

இந்த பயிற்சி அளித்தல் முக்கியம். எல்லா செய்யறிவு மென்பொருள்களுக்கு பின்னும் மனிதர்கள் அளிக்கும் பயிற்சி இருக்கிறது. கம்ப்யூட்டர் கற்றுக்கொள்வதாக சொன்னாலும், அவை தப்பும் தவறுமாக கற்றுக்கொள்வதை கவனித்து திருத்தும் பொறுப்பையும் மனிதர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இதற்கு ரீ இன்போர்ஸ்டு லேர்னிங் என்று பெயர் இருக்கிறது.

செய்யறிவு கவிதை எழுதும் அல்லது மெட்டமைக்கும் என்றெல்லாம் சொல்லப்படும் போது, குரங்கு கோட்பாட்டை நினைவில் கொள்வோம்.

நிற்க, குரங்கு கோட்பாடு தொடர்பாக நிறைய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் பிளைமூத் பல்கலையில், 2002 ம் ஆண்டு சில குரங்குகளை ஒரு மாதம் கம்ப்யூட்டர் முன் அமரவைத்து தட்டச்சு செய்ய வைத்தனர். குரங்குகள் கம்ப்யூட்டரை உடைத்து தள்ளியதோடு, அதிகபட்சமாக சில ஆங்கில எழுத்துக்களை தட்டச்சு செய்தது தான் மிச்சம் என்கிறது இந்த பரிசோதனை.

செய்யறிவு மற்றும் விலங்கு அறிவை ஒப்பிட்டு பார்க்கும், ஐரோப்பாவின் விவாரிய திட்டத்தின் (Vivaria Project) ஒரு பகுதியாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *