செய்யறிவு என்றால் என்ன? – மிக எளிய விளக்கம்!

ஏஐ என பிரபலமாக குறிப்பிடப்படும் செய்யறிவை புரிந்து கொள்வது சிக்கலானது. இயந்திர அறிவு எனும் கோணத்தில் செய்யறிவை அணுகினால், ஆச்சர்யமும், உண்டாகும், கூடவே அச்சமும் உண்டாகும். மாறாக, செய்யறிவின் வரம்புகளையும், எல்லைகளையும் உணர்ந்து கொள்ளும் வகையில் அதை உள்வாகி கொள்ள, சரியான விளக்கம் தேவை.

தொழில்நுட்ப உலகில் செய்யறிவுக்கான விளக்கங்களுக்கும், வரையறைகளுக்கும் குறைவில்லை என்றாலும், ’கம்ப்யூட்டர்ஸ் அண்ட் தாட்’ (computers-and-thought ) புத்தகத்தில் வரும் செய்யறிவு வரையறை சுவாரஸ்யமான இருப்பதோடு, அதன் பொருளை சரியாக உணர்த்தும் வகையில் அமைகிறது:

“செயற்கை நுண்ணறிவு – Artificial intelligence (AI) என்பது, உளவியல் ( சிந்தனை மாதிரியியல்) ,தத்துவம் ( மனதின் தத்துவம்) மற்றும் கம்ப்யூட்டர் ஆகிய மூன்று கல்வி துறைகள் சேர்ந்து நெய்த துணி. இதில், மொழியியல், தர்க்கம், கணிதம் ஆகிய இழைகளும் இணைந்திருக்கின்றன. கல்வித்துறை அரசியலாலும், 19 ம் நூற்றாண்டின் சிறப்பு பிரிவு ஈடுபாடு காரணமாகவும், இந்த துறைகள் தனித்தனியே பிரிக்கப்பட்டாலும், பல நோக்கங்களுக்கு இவை சேர்ந்தே இருக்கின்றன. இவற்றை இணைப்பது எளிதல்ல. உளவியலும், தத்துவமும் 19 ம் நூற்றாண்டின் பின் பகுதியில் பிரிந்தன. கம்ப்யூட்டர் அறிவியல் கணிதத்தின் பிரிவாக வளர்ந்தது. ஆனால், செயற்கை நுண்ணறிவின் நோக்கம் பரந்தது. – மனித பழக்கங்களின் ஆழத்தை அணுகி, அறிவித்திறன் வாய்ந்த பழக்கங்களை சாத்தியமாக்கும் செயல்முறை, அமைப்புகள், கோட்பாடுகளை கண்டறிவது. இந்த மன நிலைகள், செயல்முறைகளை மாதிரியாக்குவதற்கான கருவியாக கம்ப்யூட்டர்கள் தேவைப்படுகின்றன.

இயற்கை மொழியை புரிந்து கொண்டு, கற்றுக்கொண்டு, பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு, திட்டமிட்டு, உரையாடும் திறன் கொண்ட கம்ப்யூட்டர் அமைப்புகளை உண்டாக்குவது உள்ளிடவை இதன் நடைமுறை பலன்களாகும். மருத்துவ நோய்க்கூறு கண்டறிதல், செயற்கைகோள் படங்களில் இருந்து கப்பல்களை கண்டறிதல், தாது அறிதல், மொழிபெயர்ப்பு, அறிவியல் பயிற்சி உள்ளிட்டவற்றில் இது ஏற்கனவே பயன்படுகிறது.

இதன் கல்வியியல் நோக்கம், மனிதர்களுக்கு இருக்கும் திறன்களை கொண்ட கம்ப்யூட்டர்களை வடிவமைக்கும் பிரச்சனைகளை ஆய்வு செய்வதன் மூலம், மனித மனம் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்து கொள்ளும் முயற்சியாக அமைகிறது. மனித மனம் தொடர்பாக ஆய்வு செய்யும் மற்ற துறைகளுடன் இணைத்தால் இதை வெற்றிகரமாக செய்யலாம். உதாரணமாக, உளவியல், மனித உணர்தல், நினைவுத்திறன், கற்றல் திறன் தொடர்பான தகவல்களை அளிக்கிறது. மொழியியல், மனித மொழியின் அமைப்பு, செயல்பாடுகள் மீது ஒளி பாய்ச்சுகிறது. மனித தன்மை என்றால் என்ன எனும் புரிதலை தத்துவம் தெளிவாக்குகிறது. உலகை, நம் செயல்களை, மற்றவர்கள் செயல்களை விளக்க பயன்படுத்தும் கருத்தாக்கங்களை ஆய்வு செய்வதன் மூலம் இதை சாத்தியமாக்குகிறது”.

செயற்கை நுண்ணறிவில் தலைப்புச் செய்திகளையும், எதிர்கால விபரீத அச்சுறுத்தல்களையும் கடந்து ஆழமாக புரிந்து கொள்ள எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன!

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *