’எக்ஸ்பிளைனர்ஸ்’ எனும் விளக்கமளிக்கும் கட்டுரைகள் எழுதும் போது கூறப்படும் பொன்விதிகளில் ஒன்று, ஒரு ஐந்து வயது குழந்தைக்கும் புரியும் வகையில் எளிமையாக எழுத வேண்டும் என்பதாகும். அந்த வகையில், சாட்ஜிபிடிக்கான ஐந்து அடுத்து விளக்கம் தொடர்பான பதிவு மிகவும் கவர்ந்தது.
சித்தார்த் சிரோஹி என்பவர் நடத்தி வரும் மின்மடலில் (https://conquestbitspilani.substack.com/p/chatgpt-explained-in-5-levels-of ) இடம்பெற்றுள்ள அந்த பதிவு, சாட்ஜிபிடிக்கு ஐந்துவிதமான புரிதல் அளவுகோளில் விளக்கம் அளிக்கிறது.
இதன் முதல் அடுக்கில், குழந்தைகளுக்கும் எளிதாக புரியும் வகையில் சாட்ஜிபிடி என்றால் என்ன என விளக்கம் இடம் பெற்றுள்ளது.
குழந்தைகளுக்கு சுவாரஸ்யம் அளிக்க வேண்டும் என்றால், டோரேமோன் கார்ட்டூன் பாத்திரத்தை விட வேறு பொருத்தமான வழி என்ன இருக்க முடியும். எனவே, இந்த விளக்கமும் டோரேமான் வாயிலாக அமைந்துள்ளது.
தொடர்புடைய பதிவு:
டோரேமான் போன்ற ரோபோ நிஜ வாழ்க்கையில் இருந்தால் எப்படி இருக்கும்? ஆனால், டோரேமானுக்கு மனித மூளை இல்லை என்பதால், நம் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் திறன் இருக்காது. இந்தக்குறையை போக்க, நூலகங்களில் உள்ள புத்தகங்களை எல்லாம் கொடுத்து டொரேமானை படிக்கச்சொல்லலாம். டோரேமானுக்கு எதுவும் புரியாவிட்டாலும், புத்தகங்களை படிக்கும் போது எழுத்துக்கள் இடம்பெறும் வரிசையில் ஒரு பொதுத்தன்மை இருப்பதை கவனிக்கலாம். அதே போல, சொற்கள் தொடர்ந்து வருவதிலும் பலவித பொதுத்தன்மைகளையும் கவனிக்கலாம்.
இந்த பொதுத்தன்மையை எல்லாம் குறித்து வைத்துக்கொள்ளும் டொரேமான் எந்த கேள்வி கேட்டாலும், அதற்கேற்ப தனது தரவு பட்டியலில் தேடிப்பார்த்து பொருத்தமான சொற்கள் பட்டியலை கொண்ட பதிலை அளிக்கலாம். டோரேமான் எதையும் யோசிக்காமல், நாம் அளிக்கும் சொற்களுக்கு ஏற்ற, சொற் வரிசைகளை உருவாக்கி அளித்தாலும், நமக்கு அந்த வரிசை கோர்வையாக அமைந்து புரிதலை அளிக்கலாம்.
இப்படி ஒரு டோரேமான் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி தான் சாட்ஜிபிடி உருவாகி இருக்கிறது என்கிறது இந்த விளக்கம்.
சாட்ஜிபிடி தொடர்பான எண்ணற்ற விளக்கங்களில், கொஞ்சம் சுவாரஸ்யமாகவும், அதைவிட புத்திசாலித்தனமாகவும் இருக்கிறது அல்லவா?
மேலும் நான்கு கட்ட விளங்களை வாசிக்க: https://conquestbitspilani.substack.com/p/chatgpt-explained-in-5-levels-of