எழுத்தாளர் சுஜாதா, தி ஹெல்ம் இமெயில் சேவையை எப்படி அறிமுகம் செய்திருப்பார் என்று தெரியவில்லை. அந்த சேவை தொடர்பான அவரது நிலைப்பாடு எப்படி இருந்தாலும், அதன் ஆதார தன்மையை புரிந்து கொண்டிருப்பார் என தீர்மானமாக நம்பலாம். எனவே, அவரது வழக்கமான பாணியில் சற்றே கிண்டலாக, இமெயிலிலும் நம்மவர்கள் இலவச சேவைக்கு பழகியவர்கள் என்பதால், புதிய ஹெல்ம் சேவை பற்றி கேள்விபட்டதுமே உதட்டை பிதுக்கி ஒதுங்கி கொள்வார்கள். ஆனால், பிரைவசி கவலை கொண்டவர்கள் இந்த இமெயில் சேவையை மனதார வரவேற்பார்கள். என்ன, இந்த சேவையை பயன்படுத்த 499 டாலர் கொடுத்து ஒரு இமெயில் சர்வரை வாங்க வேண்டும். அதோடு ஆண்டுக்கு 99 டாலர் சேவை கட்டணம் செலுத்த வேண்டும். இப்படி செய்தால், உங்களுக்கான இமெயில் சர்வரை நீங்கள் மேஜை மீது அமைத்துக்கொண்டு, உங்கள் இமெயில் பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்தலாம்.
இலவசம் என்பதால் விரும்பி பயன்படுத்தும், ஜிமெயில்காரன் செய்வது போல, உள்ளே வரும் ஒவ்வொரு மெயிலையும் எட்டிப்பார்த்து விளம்பரத்தை உடன் நுழைக்க வாய்ப்பில்லை. அதோடு, அரசாங்கமும் இமெயிலை உளவு பார்க்கவோ, கண்காணிக்கவோ முடியாது.
இப்படி எழுதியிருக்க வாய்ப்பு அதிகம்.
*
அல்லது, இதை அப்படியே ஒரு அறிவியல் புனகதையாக எழுதியிருப்பார். ’ அந்த நகரத்தில் எல்லோரும் சொந்த இமெயில் சர்வர் வைத்திருந்தனர். இமெயில் சேவை நடத்திய நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு விட்டன. …”
*
நிற்க, தி ஹெல்ம் சேவையை மையமாக வைத்து இமெயில், பிரைவசி பிரச்சனைகள் பற்றி எல்லாம் விரிவாக எழுத வேண்டியிருக்கிறது. இப்போதைக்கு, தி ஹெல்ம் என்பது, 2018 வாக்கில் அறிமுகமான தனிநபர் இமெயில் சேவை என்று மட்டும் புரிந்து கொள்ளலாம். இந்த நிறுவனம், பேப்பர் வெயிட் அளவுக்கு இமெயில் சர்வரை விற்று, பயனாளிகள் தங்களுக்கான இமெயில் பரிவர்த்தனையை அந்த சர்வரில் இருந்தே பாதுகாப்பாக மேற்கொள்ள வழி செய்தது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக 2022 ல் இந்த சேவை மூடப்பட்டு விட்டது. இது தொடர்பாக அறிவிப்பை ஹெல்ம் தளத்தில் காணலாம். – https://thehelm.com/
*
இமெயில் பற்றி நாம் நிறைய யோசிக்கவும் பேசவும் வேண்டியிருக்கிறது.
*
பிரைவசி சார்ந்த இமெயில் சேவை என்று வரும் போது புரோடான் மெயில் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இன்னும் இருக்கிறது, பார்க்கலாம்.
–