பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை தெரிந்து கொள்ள முடிந்தது. மனிதர், 1999 ல் தனக்கான இமெயில் முகவரியை பெற்றிருக்கிறார் என்பது மட்டும் அல்ல, ரசிகர்களுக்கு கையெழுத்திடும் போது, ஜாக்கி @ என குறிப்பிட்டு தனது இமெயில் முகவரியை கையெழுத்திட்டுள்ளார். நிச்சயம் இதை விளம்பர வெளிப்பாடு என்று புறந்தள்ளி விட முடியாது. இணையத்தின் மீதான ஈடுபாடு என்றே கொள்ள வேண்டும். இதில் இன்னொரு முக்கிய விஷயத்தையும் கவனிக்க வேண்டும், ஜாக்கியின் இமெயில் முகவரி, யாஹுவிலே, ஹாட்மெயிலிலோ அல்ல. அவரது சொந்த இணையதளமான ஜாக்கிஷ்ராப்.காம் தளத்தில் வைத்திருந்திருக்கிறார். ஆக, ஜாக்கி சொந்த இணையதளமும் வைத்திருக்கிறார்.
ஜாக்கி ஷெராப்பின் இணையதளம் இன்னமும் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால், அதன் உள்ளடக்கம் பெரிதாக கவரும்படி இல்லை. இமோஜிகள், ஸ்டிக்கர்கள், வீடியோக்கள் மட்டும் தான் உள்ளன. அவரது சமூக ஊடக கணக்குகளுக்கான இணைப்புகள் உண்டு.
தளம் புதுப்பிக்கப்படுகிறதா, பராமரிப்பில் உள்ளதா என்பதை அறிய முடியவில்லை. இதன் கடந்த கால வடிவத்தை இணைய காப்பகத்தில் தேடிய போது, எளிதாக அணுக முடியாத வடிவமைப்பை கொண்டுள்ளதை அறிய முடிந்தது. எனவே பழைய உள்ளடக்கம் எப்படி இருந்தது எனத்தெரியவில்லை.
நிற்க, ஜாக்கி 1994 ம் ஆண்டே ஜாக்கி காமிரா வசதி கொண்ட கம்ப்யூட்டர் வைத்திருந்திருந்திருக்கிறார். அப்போது குழந்தையாக தனது மகனனோடு பேசுவதற்காக என்று டயல் அப் இணைப்பை பெற்றதாகவும் கூறியிருப்பதை ரிபப்ளிக் வேர்ல்டு செய்தி தெரிவிக்கிறது.
–
இமெயில் செய்திகள் தொடரும். புதிய பயனுள்ள இணையதளங்களை அறிய இணைய மலர் மின்மடலை பின் தொடருங்கள்!