சாட்பாட்களை பயன்படுத்துவதோடு, அவற்றின் செயல்பாடு பற்றியும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். சாட்பாட்கள் என்றால் என்ன? எனும் அடிப்படை கேள்வியில் துவங்கி மேலும் பல்வேறு அடிப்படை அம்சங்களை புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு பக்கம் பக்கமாக படிக்காமல் ஒரே இடத்தில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தால், டிசைன் – என்சைக்லோபீடியா தளத்தின் மூன்று பதிவுகள் வழிகாட்டும்.
சாட்பாட்கள் என்பவை, எழுத்து வடிவம் அல்லது குரல்வழி கட்டளைகள் வாயிலாக மனித உரையாடலை உருவாக்குவதற்கான கம்ப்யூட்டர் புரோகிராம் என்கிறது முதல் பதிவின் அறிமுமம். இதற்காக, என்.எல்.பி எனும், இயற்கை மொழி செயலாக்கம் மற்றும் இயந்திர கற்றலை பயன்படுத்தி பயனாளிகள் உள்ளீடுகளை புரிந்து கொள்கின்றன.
சாட்பாட்கள் என்பவை அடிப்படையில், மனிதர்களோடு உரையாட, குறிப்பாக இணையம் வழியே உரையாடுவதை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட மென்பொருள் சேவைகள் என்கிறது அடுத்த பதிவு. இங்கு உருவாக்கம் என்பது சிமிலேட் எனும் ஆங்கில சொல் தரும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது. போல செய்வது என புரிந்து கொள்ளலாம்.
ஆனால், இவை மனிதர்கள் கற்றுக்கொள்ளகூடிய எந்த ஒரு செயலையும் புரிந்து கொள்ள அல்லது கற்றுக்கொள்ள திறன் பெற்ற செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் அல்ல இவை என்றும் இந்த விளக்கம் தொடர்கிறது.
மூன்றாவது பதிவு, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப நோக்கில் சாட்பாட்கள் என்பவை, இணையதளங்கள், செயலிகள், தொலைபேசி வாயிலாகம்ன் இயற்கைம் மொழியில் உரையாடலை உருவாக்க கூடிய ஏஐ மென்பொருள்களை குறிப்பதாக சொல்கிறது.
வடிவமைப்பு நோக்கில் என்பது கவனிக்க வேண்டியது. ஏனெனில் சாட்பாட்கள் என்பது வெறும் தொழில்நுட்பம் சார்ந்தவை அல்ல. அவற்றின் பின்னே வடிவமைப்பு முக்கியமாக அமைகிறது. வடிவமைப்பே சாட்பாட்களை வழிநடத்துகிறது எனலாம்.
சாட்பாட் வடிவமைப்பு என்பது, இயற்கை மொழி செயலாக்கம், இயந்திர கற்றல், கம்ப்யூட்டரின் புரிந்து கொள்ளும் திறன், உள்ளிட்டவற்றின் சிக்கலான கலவையாக அமைவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாட்பாட்கள் என்பவை, தொழில்நுட்பம், மொழியியல், வடிவமைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு என்றும் இதன் நோக்கம், பயன்பாடு மிக்க மற்றும் மனிதர்கள் போன்ற இடைமுகத்தை உருவாக்குவது என்று இரண்டாவது பதிவு குறிப்பிடுகிறது.
இந்த பதிவுகள் சாட்பாட்கள் உலகம் பற்றிய உங்கள் பார்வையை ஆழமாக திறந்துவிடும் என எதிர்பார்க்கலாம்.
*
சாட்பாட்கள் பற்றி மேலும் அறிய, ஜீரோ டிகிரி பதிப்பகம் சார்பில் வெளியாகியுள்ள ’ சாட்ஜிபிடி சரிதம்.’ நூலை வாசிக்கவும்!