சாட்ஜிபிடி சரிதம் புத்தகம், சாட்பாட்கள் வரலாற்றையும், அவற்றின் பின்னே உள்ள ஏஐ நுட்பங்களையும் புரிந்து கொள்ள உதவும் வகையில் அமைந்துள்ளது. இரண்டு பகுதிகள் கொண்ட இந்த புத்தகத்தின் இரண்டாம் பாதி, எலிசா எனும் முதல் சாட்பாட்டில் துவங்கி, சாட்ஜிபிடியை வந்தடையும் வரை முக்கிய சாட்பாட்களை விவரிக்கிறது. அந்த வகையில் சாட்பாட்களின் பரிணாம வளரச்சியை விவரிக்கும் புத்தகமாகவும் கருதலாம்.
முதல் பாதியில், சாட்ஜிபிடியின் வரலாற்றையும், அதன் ஆதார நுட்பங்களையும் அறியலாம். முக்கியமாக சாட்ஜிபிடிக்கு முன்னர் அதன் தாய் நிறுவனம், ஓபன் ஏஐ அறிமுகம் செய்த சாட்பாட்களையும், அதற்கான சோதனை களங்களையும் அறியலாம்.
அதே நேரத்தில் ஓபன் ஏஐ நிறுவனம் உருவான சூழல், அப்போதிருந்த ஏஐ தொடர்பான கேள்விகள், அச்சங்கள் ஆகியற்றை விவரிக்கும் கட்டுரைகள் உள்ளன.
அதே நேரத்தில் ஏஐ தொடர்பான சுருக்கமான வரலாற்று பார்வையையும் இந்த நூல் அளிக்கிறது. ஏஐ மற்றும் ஏஐ சாட்பாட்கள் சார்ந்த பிரச்சனைகளையும் விரிவாக அலசுகிறது.
சாட்பாட்கள் வரலாற்றையும், பின்னணியையும் அறிய இந்த புத்தகம் உதவும்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் கொண்ட இந்த புத்தகத்தில் சாட்ஜிபிடியை பயன்படுத்துவது எப்படி எனும் நோக்கில் ஒரே ஒரு கட்டுரை தான் உள்ளது. அந்த கட்டுரையும் சாட்பாட்களை பயன்படுத்துவது தொடர்பான பொதுவான பார்வையை அளிக்கிறது. சாட்பாட்கள் செயல்படும் விதத்தை புரிந்து கொண்டாலே, அவற்றின் நிறை குறைகளை உணர்ந்து சரியாக பயன்படுத்தலாம் என்பதன் அடிப்படையில் இந்த புத்தகம் அமைகிறது.
இந்து தமிழ் திசை காமதேனு மற்றும் தமிழ் யுவர்ஸ்டோரியில் எழுதிய கட்டுரைகளில் நூல் வடிவம்.
சாட்ஜிபிடி சரிதம்
ஜீரோ டிகிரி பதிப்பகம்
ரூ.350