ரஷ்ய இலக்கிய மேதை அலக்சாண்டர் புஷ்கினை அறிமுகம் செய்து கொள்ள சிறந்த வழி, அவரோடு பேசுவதல்ல, அவரது ஆக்கங்களையும், அவரைப்பற்றிய ஆக்கங்களையும் வாசிப்பது தான் என கருதுகிறேன். புஷ்கின் தொடர்பான விக்கிபீடியா பக்கம் கூட நல்ல துவக்கமாக இருக்கும்.
புஷகினை வாசிப்பது சரி, ஆனால் அவருடன் பேசுவது எப்படி சாத்தியம் என குழம்ப வேண்டாம். ஏஐ யுகத்தில், புஷ்கின் போல பேசவும் ஒரு சாட்பாட் உருவாக்கப்படலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். உண்மையில் இத்தகைய ஒரு சாட்பாட் உருவாக்கப்பட்டிருக்கிறது. – https://oneai.com/~alexander-pushkin
இந்நிறுவனம், வர்த்தக நோக்கில் சாட்பாட்பகளை உருவாக்கி கொள்ளும் சேவையை வழங்குகிறது. இதற்கான உதாரணமாக தான், புஷ்கின் சாட்பாட்டை உருவாக்கியுள்ளது. ஜிபிடி 4 தொழில்நுட்பத்தை கொண்டு, புஷகின் சாட்பாட் உருவாக்கப்பட்டுள்ளது. இதே போலவே, பயனாளிகளும் தங்கள் இணையதள விவரங்களை அளித்து அவர்களுக்கான சாட்பாட்களை உருவாக்கலாம் என கடை விரிக்கிறது இந்நிறுவனம்.
சாட்பாட் வடிவில் புஷ்கினோடு உரையாடலாம் என்பது புதுமையாக இருக்கிறது. போதிய தரவுகள் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டால், தரவுகளுக்கு ஏற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும் என்பதே சாட்பாட்களின் அடிப்படை. இதே அடிப்படையில் மகாகவி புஷ்கின் வாழ்கை வரலாறு, அவரது கவிதைகள், இதர ஆக்கங்கள் கொண்டு பயிற்சி அளித்தால், புஷ்கின் போலவே உரையாடி பதில் சொல்லக்கூடிய சாட்பாட்டை தயார் செய்துவிடலாம்.
புஷ்கினை கரைத்துக்குடித்த ஒருவரிடம் பேசுவது போல, இந்த சாட்பாட் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப பதில் அளிக்கும். அதே நேரத்தில் புஷ்கினே தன்னைப்பற்றி தகவல் தருவது போன்ற தோற்றத்தை கொண்டிருக்கும். அந்த வகையில் புஷ்கின் போன்ற மேதைகள் சார்பில் சாட்பாட் உருவாக்கப்படுவது ஏற்றதாக தோன்றலாம்.
ஆனால், புதுமையை மீறி இந்த மேதை சாட்பாட்கள் எந்த அளவு பயனுள்ளதாக இருக்கும்?
மேலே குறிப்பிடப்பட்டுள்ள புஷ்கின் சாட்பாட், அவரைப்பற்றிய மேலோட்டமான தகவல்களை மட்டுமே அளிக்கிறது. புஷ்கின் பிறந்த தேதி, அவர் கவிதை எழுத்ததுவங்கிய ஆண்டு, அவர் ஏன் ரஷ்ய இலக்கியத்தில் போற்றப்படுகிறார், என்பது போன்ற பொதுவான கேள்விகள் உதாரணமாக அளிக்கப்பட்டுள்ளன.
பொதுவான கேள்விகளுக்கு, புஷ்கின் தரவுகளில் இருந்து பதில் அளிக்கும் சாட்பாட், உங்களின் சிறந்த கவிதை எது? என புஷ்கினிடம் கேட்பது போல கேட்டால், குழப்பமான பதிலை அளித்து அவரது புகழ் பெற்ற கவிதைகள் சிலவற்றை குறிப்பிடுகிறது.
உரையாடலின் சில நிமிடங்களிலேயே இந்த சாட்பாட் ஏமாற்றம் தருகிறது. விளம்பர நோக்கில், புஷ்கின் பெயரை ஈர்ப்பிற்காக பயன்படுத்திக்கொண்டு அவரது சார்பில் மேலோட்டமான சாட்பாட்டை உருவாக்கிவிட்டதாக கருதலாம்.
இந்த சாட்பாட் அளிக்கும் ஏமாற்றத்தை மீறி, மேதைகளுக்கான சாட்பாட் வடிவம் அவர்களை அறிந்து கொள்வதற்கான சுவாரஸ்யமான வழியாக இருக்கும் எனத்தோன்றுகிறது.
உதாரணமாக, புஷ்கின் வரலாற்று குறிப்புகளை கட்டுரையாக படிப்பதைவிட, சிறார்களுக்கு அவரைப்பற்றிய கேள்வி பதில் வடிவில் படித்து தெரிந்து கொள்வது சுவாரஸ்யமாக இருக்கும். எப்படி வளைத்து, வளைத்து கேள்விகள் கேட்டாலும், புஷ்கின் இலக்கியத்தில் இருந்து பதில்களை தேடி எடுத்து தரும் சாட்பாட் புஷ்கின் மீதான ஈர்ப்பை உண்டாக்கலாம்.
ஆனால், இத்தகைய சாட்பாட்டை உருவாக்குவது எளிதல்ல. புஷ்கின் தொடர்பான அடிப்படை தகவல்கள் தவிர, அவரைப்பற்றிய அனைத்து தகவல்களையும் வகைப்படுத்தி உள்ளீடு செய்து பயிற்சி அளிக்க வேண்டும். விமர்சன நோக்கில் அணுகும் போது, சார்புகளையும், பாகுபாட்டையும் நீக்க வேண்டும். இதை தனித்திட்டமாக தான் மேற்கொள்ள வேண்டும்.
இப்போதைக்கு ஜிபிடியை மட்டும் கொண்டு இப்படி ஒரு புஷ்கின் சாட்பாட்டை உருவாக்கி விட முடியுமா என்றுத்தெரியவில்லை.
அதோடு, கேள்வி பதில் வடிவில் புஷ்கினை அணுகுவது என்பது இதழியல் அல்லது இலக்கிய உத்தி தானேத்தவிர, இதில் ஏஐ நுட்பத்தின் பங்களிப்பு என்ன?
- புஷ்கினுக்கும் ஏஐ ஆய்வுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இயந்திர கற்றல் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் ரஷ்ய கணித மேதை ஆண்ட்ரி மார்கோவ், புஷ்கினின் இலக்கிய படைப்பை எடுத்து வைத்துக்கொண்டு, கணிதவியல் சமன்பாடு நோக்கில் அதன் உள்ளடக்கத்தை அணுகி, அதே அடிப்படையில் இயந்திரத்தை எழுத வைக்க முடியுமா என முயன்று பார்த்திருக்கிறார். சாட்ஜிபிடி சரிதம் புத்தகத்தில், சாட்ஜிபிடி வரலாறு இந்த குறிப்புடன் தான் துவங்குகிறது. இதுவே மொழி மாதிரிகளின் துவக்கப்புள்ளியாக கருதப்படுகிறது.