சற்று எட்டி நிற்கட்டும் ஏஐ!

ஏஐ தொடர்பாக எத்தனையோ புகழ்பெற்ற மேற்கோள்கள் இருக்கின்றன. இந்த வரிசையில், இப்போது ’ஜோனா மச்சியோஸ்கி’யின் ஏஐ மேற்கோளும் சேர்ந்திருக்கிறது. அதோடு முக்கியமாக ஏஐ செல்லும் திசையையும், அதன் பயன்பாட்டின் மீது மனிதகுலம் காண்பிக்க வேண்டிய புரிதலையும் உணர்த்துவதாக அமைகிறது.

”எல்லாவற்றிலும் ஏஐ-ஐ முன்னிறுத்துவதில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னத்தெரியுமா? தவறான திசையில் செல்லத்துவங்கியிருக்கிறோம்.

நான் கலையிலும், எழுத்திலும் ஈடுபடும் வகையில் ஏஐ சலைவை செய்யவும், பாத்திரங்கள் துலக்கவும் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். நான் சலவை செய்யவு, பாத்திரம் துலக்கவும் நேரும் வகையில் ஏஐ என் கலைகளை செய்யவும், எழுதவும் அல்ல”.

இது தான் அந்த மேற்கோள்.

சாட்ஜிபிடி, மிட்ஜர்னி உள்ளிட்ட ஆக்கத்திறன் ஏஐ நுட்பங்கள், மனிதர்கள் போலவே எழுதவும், கலைகளை உருவாக்கும் திறனும் பெற்றிருப்பதாக கூறப்படுவது, படைப்புக்கத்தின் தன்மை தொடர்பான கேள்விகளை எழுப்பி, நவீன வாழ்க்கையில் ஏஐ நுட்பத்தின் பங்கு மற்றும் இடம் தொடர்பான சிக்கலான கேள்விகளையும் முன்வைக்கும் சூழலில், ஜோனாவின் இந்த மேற்கோள், ஏஐ வேலை, கலையோ, எழுத்தோ அல்ல, சலவை செய்வதும், பாத்திரம் துலக்குவதும் தான் என உணர்த்துகிறது.

இதன் பொருள், ஏஐ நுட்பத்தை துணி துவைக்க வைக்க வேண்டும் என்பதல்ல, மாறாக, மனிதர்களுக்கு சுமையாக இருக்க கூடிய பணிகளுக்காக தான் ஏஐ நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பதாகும். படைப்பூக்கம் சார்ந்த செயல்களில் ஈடுபடும் வகையில் மனிதர்கள் அவர்கள் தம் தளைகளில் இருந்து விடுவிக்கவே ஏஐ நுட்பத்தை நாட வேண்டும்.

இதற்கு மாறாக, சாட்ஜிபிடி நாவல் எழுதும் திறன் பெற்றுள்ளதாக நம்பிக்கொண்டிருப்பது தவறான திசையில் பயணிப்பதாகும்.

அறிவியல் புனைகதை எழுத்தாளரான ஜோனா, கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த கருத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்டார். ஏஐ மற்றும் ஆக்கத்திறன் ஏஐ நுட்பத்தின் தேவையையும், பங்கையும் சரியாக உணர்த்தும் இந்த கருத்து லட்சக்கணக்கானோர் மனதில் எதிரொலித்து, இணையத்தில் வைரலாகி பரவியது.

அதன் அதிர்வுகளை இன்னமும் எக்ஸ் தளத்தில் காணலாம்: https://x.com/AuthorJMac/status/1773679197631701238

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *