திரை விமர்சனம் எழுத வழிகாட்டும் இணைய வல்லுனர்!

இப்போது இல்லாமல் போய்விட்ட பிளேட்டர் (Flattr ) இணைய சேவையை அலசி ஆராயவும் வகையில் ஹாரி பிரிக்நல் என்பவர் எழுதிய பழைய பதிவு ஒன்றை வாசிக்க நேர்ந்தது. பத்தாண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்பதை மீறி இந்த பதிவு கவனத்தை ஈர்த்து சிந்திக்க வைக்கிறது. பிளேட்டர் சேவை ஏன் வெற்றிபெறாமல் போனது எனும் கேள்விக்கான பதிலாக இந்த பதிவு அமைகிறது ஒரு காரணம் என்றாலும், இந்த பதிவை பிரிக்நல் எழுதியுள்ள விதம் கூடுதலாக கவனத்தை ஈர்க்கிறது.

இணைய வடிவமைப்பு தொடர்பான நுட்பங்களில், குறிப்பாக பயனர் அனுபவம் என சொல்லப்படும் பிரிவு சார்ந்த நுட்பங்களில் ஆர்வமும், அனுபவமும் உள்ளவராக இருக்கிறார். அவரது பதிவுகளை படிக்கும் போதே, எடுத்துக்கொள்ளும் தலைப்பு தொடர்பான நுணுக்கங்களை நன்கறிந்தவர் என்பது விளங்குகிறது.

ஆனால், பிரிக்நல் தனது நிபுணத்துவத்தை மீறி, பிளேட்டர் சேவை தொடர்பான அலசலில், காண்பிக்கும் நிதானமும், மொழி நடையும் வியக்க வைக்கிறது.

இந்த சேவை ஏன் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை எனும் கேள்விக்கான பதிலை அலசும் பிரிக்நல், எனது கருத்தை சொல்வதற்கு பதில், இதையே ஒரு கேள்வியாக முன்வைக்கிறேன் என்கிறார். அதாவது, பிளேட்டர் தோல்வியில் அதன் இடைமுகம் குறிப்பாக, அதன் உள்நுழையும் அனுமதிம் செயல்முறை சிக்கலாக இருப்பதாக கருதுபவர், இதில் பிழை என தான் கருதும் அம்சங்களை கோடிட்டு காண்பித்து, நீங்கள் வடிவமைப்பாளராக இருந்தால் எப்படி இதை அணுகுவீர்கள் என கேட்கிறார்.

பிளேட்டர் இடைமுகம், அதன் ஆதார சேவையை தெளிவாக உணர்த்தும் வகையில் அமையவில்லை என்பதை ஆர்பாட்டம் இல்லாமல் சுட்டிக்காட்டும் வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது. இந்த குறைகளுக்கு பின், இடைமுக வடிவமைப்பு வேறு எப்படி இருந்திருக்கலாம் என வாசகர்களையே பதில் அளிக்க வைக்கிறார்.

அவர் எந்த தீர்ப்பும் வழங்கவில்லை என்றாலும், பிளேட்டர் சேவை வடிவமைப்பில் இருந்த பிழைகளை மென்மையாக முன்வைத்து புரிய வைக்கிறார். இதை படிக்கும் போது, திரை விமர்சனம் செய்பவர்களும் கூட, தங்கள் மேதமையை முன்வைத்து படங்களை கழுவில் ஏற்றாமல் படித்தவர்கள் பயன்பெறும் ஆக்கப்பூர்வமான முறையில் விமர்சனம் எழுதினால் எப்படி இருக்கும் எனத்தோன்றியது.

இது பிரிக்னல்லின் வலைப்பதிவு: https://90percentofeverything.com/2011/01/19/if-you-were-going-to-design-flattrs-sign-up-process-is-this-how-youd-do-it/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *