இணையத்தில் உரையாடுவது என்றால் என்ன?

இணைய விவாதங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, பழைய அல்டாவிஸ்டா தேடியந்திரம் தொடர்பான ’ஹேக்கர்நியூஸ்’ தளத்தின் விவாத சரட்டை குறிப்பிடலாம்: https://news.ycombinator.com/item?id=19170950

ஹேக்கர்நியூஸ் தளம் பற்றி அறிந்தவர்கள், அதன் விவாத சரடுகள் அனைத்துமே உரையாடலுக்கான உதாரணம் என்று குறிப்பிட விரும்பலாம். இந்த கருத்து மிகையோ வெறும் புகழ்ச்சியோ அல்ல என்பதை ஹேக்கர் நியூஸ் தளத்தை பயன்படுத்தி பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

ஹேக்கர் நியூஸ் என்பது, சமூக ஊடக பிரிவுகளின் கீழ் வரும் செய்தி அல்லது விவாத குழு ரகத்தைச் சேர்ந்தது. தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கான இந்த தளத்தில், வரிசையாக விவாதத்திற்கான செய்திகள் இணைப்புகளுடன் பகிரப்பட்டிருக்கும். செய்தி என்றில்லை, கட்டுரை, தகவல், இணையதளம், செயலி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

சில தருணங்களில் கேள்வி அல்லது கருத்தாக கூட பகிர்வு அமையலாம்.

கட்டுரையை வாசிப்பவர்கள் அதன் உள்ளடக்கம் சார்ந்து கருத்துக்களை பின்னுட்டமாக பதிவு செய்யலாம். சக உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். கருத்துகள் சுய வெளிப்பாடாக இருக்கலாம், அல்லது ஏற்கனவே வெளியான கருத்துக்கு உடன்பட்டோ, மாறுபட்டோ அமையலாம். இப்படி பலவிதமான தொடரும் கருத்துக்கள் விவாத சரடாக அமைந்திருக்கும்.

தினமும் பகிரப்படும் இணைப்புகள் வாயிலாக இரண்டு சிறு அற்புதங்கள் நிகழ்வதை காணலாம். இங்கு பகிரப்படும் இணைப்புகள் மூலம், பெரும்பாலும் வேறு எங்கும் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாத பயனுள்ள, புதிய செய்திகளை தெரிந்து கொள்ளலாம். அந்த விதத்தில் சரியாக வடிகட்டப்பட்ட கட்டற்ற கூகுளாக இந்த தளத்தை கருதலாம்.

இரண்டாவதாக, மூல கட்டுரைகள் வாயிலாக தெரிந்து கொள்ளும் விஷயங்களுக்கு நிகரான தகவல்களை பின்னூட்டங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். தகவல்கள் மட்டும் அல்ல, புதிய புரிதலை அளிக்க கூடிய கருத்து தெறிப்புகள், பார்வைகள், கோணங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு இணைப்புடனும், பின்னூட்டங்களின் எண்ணிக்கையை பார்க்கலாம். பெரும்பலான இணைப்புகள் நூற்றுக்கு மேலான பின்னூட்டங்களை கொண்டிருக்கும். ஒரு பக்கத்தில் பார்த்தாலே ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் இருக்கும்.

இந்த பின்னூட்டங்களை தகவல்- கருத்து சுரங்கம் எனலாம். ஒரு சில பின்னூட்டங்கள் கேலியாக, கிண்டலாகவும் இருக்கும். சில தகவல் திருத்தமாக அமைந்திருக்கும். சில முகத்திற்கு நேரில் வைக்கப்படும் விமர்சனமாகவும் அமையலாம்.

மூல கட்டுரையை வாசித்துவிட்டு, பின்னூட்டங்களை படிக்கும் போது, கூடுதல் தகவல்களோடு மேம்பட்ட புரிதலும் சாத்தியமாகலாம். பல தருணங்களில் மூல கட்டுரை தொடர்பாக நீங்கள் எதிர்பார்க்கும் வல்லுனர் விவாதம் போல பின்னூட்டங்கள் அமைந்திருக்கும்.

இது தான் ஹேக்கர்நியூஸ் தளத்தின் தனித்தன்மை. – வல்லுனர் நோக்கிலான பின்னூட்டங்கள்!

இணைப்புகளின் தன்மைக்கேற்ப, துறை சார்ந்த வல்லுனர்கள், விஷயம் அறிந்த பயனாளிகளும் தொடர்புடைய கருத்துக்களை பகிர்வது விவாத சரட்டை செழுமையாக்குவதை எளிதாக உணரலாம். பதில் கருத்துக்களும் முரண்படல்களும் கூட, கூடுதல் புரிதலை அளிக்க வல்லவை.

இந்த தனித்தன்மையை மேலே சொன்ன அல்டாவிஸ்டா தொடர்பான விவாதத்தில் உணரலாம்.

அல்டாவிஸ்டா பலரும் அறிந்திருக்க கூடியது போல, அந்த கால தேடியந்திரமாகி விட்ட, இணையத்தின் முன்னோடி தேடிய்ந்திரங்களில் ஒன்று. கூகுளுக்கு முன்னர் இணையத்தின் முன்னணி தேடியந்திரங்களில் ஒன்றாக விளங்கியது என்பது மட்டும் அல்ல, இணையதளங்களின் முழு பக்கத்தையும் தேட வழி செய்த வகையில் முதல் முழு தேடியந்திரமாக கருதப்படுகிறது. முதலில் ஏஐ மொழிபெயர்ப்பு சேவையை அறிமுகம் செய்தது உள்ளிட்ட பல பெருமைகளுக்கு உரியது.

இவை எல்லாவற்றையும் விட தனது காலத்தில் மேம்பட்ட தேடல் சேவையை வழங்கியது. இத்தனை சிறப்புகள் இருந்தும், அல்டாவிஸ்டா தேடியந்திரம் தேயந்து போனது ஏன்? எனும் கேள்வி ஆழமான அலசலுக்கு உரியது. முக்கியமாக கூகுளின் எழுச்சியால் பின் தங்கியது எனும் எளிய பதிலில் அடக்கிவிட முடியாதது.

இதை தான் இந்த விவாத சரடும் உணர்த்துகிறது.

அல்டாவிஸ்டா பற்றிய அலசல் கட்டுரை, அதன் சரிவிற்கான முக்கிய காரணத்தை தவறவிடுகிறது, அது தனது தேடல் அட்டவணையை மாதக்கணக்கில் புதுப்பிக்காமல் வைத்திருந்தது என தெரிவிக்கும் முதல் பின்னூட்டம், இதே காலத்தில் கூகுளின் தேடல் பட்டியல் புதுப்பிப்பு தெளிவான முடிவுகளை வழங்கியது என்கிறது. மாறாக, அல்டாவிஸ்டா இணைப்புகளில் பல பயனற்ற காலாவதியான பிழை பக்கங்களாக இருந்ததை சுட்டிக்காட்டுகிறது.

இந்த கருத்தை பகிர்ந்து கொண்டவர் அல்டாவிஸ்டாவில் பணியாற்றிய நேரடி அனுபவம் கொண்டவர் என்பது தான் முக்கியமானது. தரம் வாய்ந்த தேடல் அட்டவணையை பராமரிக்க தவறியது, அல்டாவிஸ்டாவின் நோக்கம் சிதறிய காரணத்தால் உண்டாகியிருக்கலாம் என தெரிவிக்கும் அந்த முன்னாள் அல்டாவிஸ்டா ஊழியர், மற்றபடி பேஜ்ரேங் என்பதெல்லாம் ஒரு விஷயமே அல்ல என்கிறார்.

பேஜ்ரேங்க் என்பது கூகுளின் சிறந்த தேடலுக்கு அடிப்படையாக விளங்கும் தேடல் அல்கோரிதமாக அமைகிறது. பேஜ்ரேங்க் அல்கோரிதத்தை கூகுள் வெற்றி ரகசியம் என பலரும் புகழும் நிலையில், இது கூகுளுக்கு மட்டுமே உரிய தனித்தன்மை அல்ல என குறிப்பிடுபவர், இதே காலத்தில் ஜான் கிலின்பர்க் (Jon Kleinberg) என்பவர் ஹிட்ஸ் தேடல் அல்கோரிதத்தை உருவாக்கியதை குறிப்பிடுகிறார். மேலும் அல்டாவி்ஸ்டாவில் கூட, உள் வரும் இணைப்புகளை அளவிடும் முக்கியத்துவத்தை ( பேஜ்ரேங்க்) அறிந்திருந்தோம் என்கிறார்.

யோசித்துப்பாருங்கள், கூகுளின் பிரதான உத்தியான பேஜ்ரேங் அல்கோரிதம் போன்ற ஒன்று அல்டாவிஸ்டாவில் இருந்தது என்கிறார்.

இந்த விவாத சர்ட்டின் பின்னர் இடம்பெறும் பின்னூட்டம் ஒன்றில் வேறொருவர், ராபின் லீ பற்றி குறிப்பிடுகிறார். பெய்டு எனும் முன்னணி சீன தேடியந்திரத்தை உருவாக்கியவர் ராபின் லீ. இவரும் பேஜ்ரேங்க் போன்ற அம்சங்கள் கொண்ட அல்கோரிதத்தை உருவாக்கி கூகுளுக்கு முன்னதாகவே அமெரிக்காவில் காப்புரிமை பெற்றதாக குறிப்பிடுகிறார்.

இதனிடையே, அல்டாவிஸ்டா தொடர்பான நினைவலைகளையும், அதன் தேடல் உத்தி தொடர்பான விவாதங்களையும் காணலாம். அல்டாவிஸ்டா தொடர்பான பிற பயனுள்ள இணப்புகளையும் பார்க்கலாம்.

கூகுள் ஏதோ தனிப்பெரும் நிறுவனம் என நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும் பல தகவல்களையும், புரிதலையும் இந்த விவாத சரட்டில் காணலாம்.

ஹேக்கர்நியூசின் பெரும்பலான விவாத சரடுகள் இதே போல செறிவாகவும் செழுமையாகவும் இருக்கும் என்பதோடு, நிறைவாக, அல்டாவிஸ்டா சரட்டில் இருந்து குறிப்பிட்ட பின்னூட்ட முத்து ஒன்றை குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

வாசகர் ஒருவர் தனது முந்தையை பின்னூட்டத்தை திருத்தி, ஏற்கனவே வெளியிட்ட கருத்தில், அல்டாவிஸ்டா நிறுவனம் மூடல் தொடர்பாக கிண்டலாக குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கோரி, எந்த நிறுவனமும் மூடப்பட்டு பணி இழப்பது எளிதானது அல்ல என தெரிவித்துள்ளார். அதோடு விவாதத்தின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு சற்று இலேசான தன்மையை அளிக்கவே முதலில் அவ்வாறு கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.

யார் மனதும் புண்பட்டுவிடக்கூடாது என நினைத்து பின்னூட்டத்தின் பின்னூட்டமாக வருத்தம் தெரிவிக்கும் நாகரீகமும், பண்பும் ஹேக்கர்நியூஸ் விவாத சரடுகளின் இன்னொரு தனித்தன்மை. உண்மையில் இணைய விவாதங்களின் இயல்பும் இதுவே. பெரும்பாலான முன்னணி சமூக ஊடகங்களில் நாம் தவறவிடுவதும் இந்த பண்பு தான்.

ஹேக்கர்நியூஸ் தளம் ஸ்லேஷ்டாட் போன்றதே. ஸ்லேஷ்டாட் பற்றி விரிவாக அறிய உதவும் மின்னூல்!

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *