புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும், ஏஐ சேவை பர்சனல்ரோல்.ஏஇ (https://personaroll.ai/login ) பெரிய அளவில் வரவேற்பை பெறுமா என்றுத் தெரியவில்லை. ஆனால், ஏஐ தொடர்பான போக்குகளை புரிந்து கொள்ள உதவும் சேவையாக இருக்கிறது.
ஏஐ நுட்பம் உங்கள் சார்பாக செயல்படும் திறன் கொண்டதாக சொல்லப்படுகிறது அல்லவா, அந்த வகையில் இந்த சேவை, உங்கள் சார்பில் சமூக ஊடக பதிவுகளை வெளியிடும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் எப்படி, ஒரு புகைப்படம் எடுத்து இதில் பதிவேற்றினால் போது, அந்த படத்தின் தன்மையை கொண்டு அண்மை சமூக ஊடக போக்குகளை அலசி அறிந்து, அவற்றுக்கேற்ற வகையில் உள்ளடக்கத்தை எழுதி பயனாளிகள் சார்பில் சமூக ஊடகத்தில் இடம்பெற வைக்கிறது.
பயனாளிகள் உள்ளடக்க உருவாக்கத்திற்கான ஆளுமை ரகத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம். அதாவது எந்த குரலில் பதிவுகளை வெளியிட வேண்டும் என்பதற்கான ஆளுமையை தேர்வு செய்யலாம்.
தேர்வு செய்யப்படும் ஆளுமை வகையின் அடிப்படையில், பதிவேற்றப்பட்ட புகைப்படத்தை கொண்டு இந்த சேவை உள்ளடக்கத்தை உருவாக்கி வெளியிடும்.
உருவாக்கப்படும் உள்ளடக்கம் சமூக ஊடக போக்குகளுக்கு ஏற்ப அமைந்திருக்கும் என்பதால் வைரலாகும் தன்மையும் கொண்டிருக்கும் என்கிறது. எதையும் செய்யாமல் தானாக உங்கள் உள்ளடக்கத்தை வைரலாகச் செய்யுங்கள் என்றும் இந்த சேவை அழைப்பு விடுக்கிறது.
ஆக, பயனாளிகள் சார்பில் உதவியாளராக செயல்பட்டு சமூக ஊடக பக்கங்களை நிர்வகிக்கும் திறன் பெற்ற சேவையாக இருக்கிறது. இதற்கென தனி ஏஜென்சிகள் எல்லாம் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவற்றுக்கான கட்டணம் அதிகம் என்பதையும் அறிந்திருக்கலாம். பிரபலங்களுக்கும், செல்வாக்காளர்கள் போன்றவர்களுக்குமே இது சாத்தியம்.
இப்போது இதே வசதியை சராசரி பயனாளிகளுக்கும் இந்த சேவை அளிக்கிறது. புகைப்படத்தை அம்சங்களை அலசி ஆராய்ந்து, அதற்கேற்ற சமூக ஊடக போக்கை கண்டறிந்து பொருத்தமான உள்ளடக்கத்தை உருவாக்குவதோடு, தேர்வு செய்யப்பட்ட ஆளுமை ரகத்திற்கு ஏற்ப தொடர்ச்சியாக உள்ளடக்கத்தை வாசிக்கும் திறன் கொண்டிருப்பதால், உள்ளடக்கத்தின் பொருத்தம் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. தொடர்ச்சியாக சமூக ஊடக போக்குகளை கண்காணித்துக்கொண்டே இருக்கும் மற்றும் உள்ளடக்கத்தின் வீச்சு தொடர்பான செயல்பாடு தரவுகளையும் அளிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக, இந்த சேவையை பயன்படுத்தினால், புகைப்படம் எடுதால் போதும் இந்த ஏஐ சேவை பயனாளிகள் சமூக ஊடக கணக்கை பார்த்துக்கொள்ளும். எதையும் செய்யாமல் எல்லாவற்றையும் ஏஐ சேவை வசம் விட்டுவிடலாம் என்று சொல்வதற்கு ஏற்ப இப்போது, சமூக ஊடக பழக்கத்தை நிர்வகிக்கவும் ஏஐ வந்திருக்கிறது என கொள்ளலாம். இதனால் சமூக ஊடக மோகம் அதிகரிக்குமா? அல்லது சமூக ஊடக பழக்கம் குறையுமா என்றுத் தெரியவில்லை.
ஆனால், இந்த சேவை ஏஐ நுட்பத்தின் பயன்பாடு பற்றி யோசிக்க வைக்கிறது.
இப்போது தான் இந்த சேவை அறிமுகம் ஆகியிருக்கிறது. இன்னமும் முழுவீச்சில் அறிமுகமாகவில்லை. நடைமுறையில் இந்த சேவை செயல்திறனுக்கு ஏற்ப வரவேற்பை பெறலாம் அல்லது காணாமல் போகலாம். ஆனால் நிச்சயம் கட்டணச்சேவையாகவே இருக்கும்.
இந்த சேவை சொல்லப்படுவது போலவே செயல்படுவதாக வைத்துக்கொள்வோம், புகைப்படங்கள் அடிப்படையில் சமூக ஊடக போக்குகளுக்கு ஏற்ப சமூக ஊடக பக்கங்களை நிர்வகிக்கும் தேவை யாருக்கு எல்லாம் ஏற்படும். அதனால் என்ன பலன் உண்டாக கூடும்.
பிராண்ட்கள் அல்லது செல்வாக்காளர்களுக்கு இந்த சேவை ஏற்றதாக இருக்கும். அல்லது சமூக ஊடக கணக்குகளை வர்த்தக நோக்கில் பயன்படுத்தும் தனிநபர்களுக்கு ஏற்றதாக இருக்கும். மற்றபடி, வீட்டு விசேஷத்தை செல்பி எடுத்துக்கொள்ளும் பயனாளிகளுக்கு எந்த வகையில் பொருந்தும் என யோசிக்க வேண்டும்.
அதோடு, எற்கனவே சமூக ஊடக பக்கங்கள் வியூகங்களாலும், வர்த்தக உத்திகளாலும் செயற்கை உள்ளடக்கத்தால் நிரம்பி வழியும் நிலையில், இது போன்ற சேவைகள் சமூக ஊடக பயன்பாட்டை இன்னமும் நீர்த்துப்போக தானே செய்யும்.