விக்கிபீடியாவுக்கு போட்டியாக கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்க் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் குரோகிபீடியா இணையத்தில் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. அநேகமாக இதன் நோக்கமும் இதுவாகவே இருக்கும். ஆரம்ப பரபரப்பை மீறி, பயனாளிகளை ஈர்க்கும் தன்மை இதற்கு உண்டா என்பதை பார்க்க வேண்டும்.
குரோகிபீடியா வரவேற்பை பெற்றாலும் சரி அல்லது தோல்வி அடைந்தாலும் சரி, என் அளவில் இந்த போட்டி இணைய களஞ்சியத்தை அலட்சியம் செய்யவே விரும்புகிறேன். குரோகிபீடியாவை நான் எதிர்ப்பதற்கான காரணங்கள்:
- விக்கி சமூகம்: விக்கிபீடியா எனும் கட்டற்ற களஞ்சியம் ஒரு மகத்தான கூட்டு முயற்சி. மலர்களில் இருந்து மகரந்தத்தை சேகரித்து தேனீக்கள் உருவாக்கும் தேனடை போல, மனித தேனீக்கள் கூட்டு முயற்சியால் உருவாகும் தகவல் களஞ்சியம் விக்கிபீடியா. அதன் வெற்றிக்கு பின்னே இருப்பது தன்னலமற்ற தன்னார்வர்களின் உழைப்பு. போட்டி விக்கிபீடியாவை கற்பனை செய்வது எளிது, ஆனால் விக்கிபீடியாவின் அடித்தளமாக அமையும் இணைய சமூகத்தை உருவாக்குவது அத்தனை எளிதல்ல.
- தனிமனைத கொடுங்கனவு: இணையத்தின் மூலம் சாத்தியமான பெருங்கனவு விக்கிபீடியா. அதன் வீச்சும், வெற்றியும், நிறுவனர் ஜிம்மி வேல்சே எதிர்பாராதது. இது சாத்தியமாக காரணம், ஜிம்மி வேல்சின் ( லாரி சாங்கர்), கனவை, அதன் பின்னே உள்ளே லட்சிய நோக்கில் நம்பிக்கை கொண்ட கோடிக்கணக்கான இணையவாசிகள் தங்களுடையதாக வரித்துக்கொண்டு செயல்பட்டது தான். மாறாக, குரோகிபீடியா, ஒரு கோடீஸ்வர தொழிலதிபரின் ஆணவ வெளிப்பாடு. அதன் பின்னே இருப்பது லட்சியம் அல்ல கொடுங்கனவு. விக்கிபீடியா மீதான குறை அல்லது விமர்சனங்களை கொண்டு மட்டுமே அதை வீழித்திவிடலாம் எனும் பிழை நம்பிக்கை. எலான் மஸ்கிற்கு விக்கிபீடியாவை பிடிக்கவில்லை என்பதால் மட்டுமே அவரால் போட்டி களஞ்சியத்தை உருவாக்க முடியாது.
- லாப நோக்கம்: விக்கிபீடியாவை வளர்த்தெடுப்பது பொது நலன் சார்ந்த நோக்கம். குரோகிபீடியா, ஏஐ மீதான மிகை நம்பிக்கையால் உருவாக்கப்பட்டிருக்கும் லாப நோக்கிலான முயற்சி. லாப நோக்கம் பல்வேறு உள்நோக்கங்களை கொண்டிருக்கும்.
- அறிவுத்திருட்டு: ஏஐ திறன் கொண்டு கட்டுரைகள் உருவாக்குவது எளிதாக இருக்கலாம். காலத்தின் கட்டாயம் என சிலர் நினைக்கலாம். ஆனால், இதில் நிகழ்வது அறிவுத்திருட்டு. குரோகிபீடியாவின் பெரும்பாலான கட்டுரைகள் விக்கி கட்டுரைகளின் நகல்களே. அது மட்டும் அல்ல, குரோகிபீடியா பின்னே உள்ள குரோக் சாட்பாட் போன்ற ஏஐ சேவைகளை இயக்கும் லாங்கேவேஜ் மாடல் என சொல்லப்படும் மொழி மாதிரிகளுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தப்பட்ட இணைய தரவுகளில் விக்கிபீடியா தரவு முக்கிய அங்கம். விக்கிபீடியா இல்லாமல், அதாவது மனித கூட்டு முயற்சி இல்லாமல் ஏஐ சேவைகள் சாத்தியம் இல்லை எனும் நிலையில், ஏஐ திறன் சார்ந்த களஞ்சியம் என்பது முரண் நகை.
- புதிய ஆக்கங்கள்: விக்கிபீடியாவின் புதிய கட்டுரைகள் விதையில் இருந்து உருவாகும் மரம் போல, ஒரு புதிய எண்ணத்தில் இருந்து உருப்பெறுவது. சிறுக, சிறுக தகவல்களாக திரண்டு விக்கி கட்டுரைகள் உருவாகின்றன. இவை மூல ஆக்கங்கள். மாறாக ஏஐ சேவைகளால், மூல ஆக்கங்களை உருவாக்க முடியாது. அவற்றால் இருக்கின்றன ஆக்கங்கள் கொண்டே நகல்களை உருவாக்க முடியும்.
- சிறிய மொழிகள்: விக்கிபீடியா ஆங்கிலம் தவிர நூற்றுக்கும் மேலான மொழிகளில் இருக்கிறது. அழிந்துவிடும் என கருதக்கூடிய மொழிகளில் கூட, விக்கிபீடியா மூலம் அந்த மொழியை காக்கும் முயற்சி நடக்கிறது. எல்லாம் அந்த அந்த மொழி தன்னார்வலர்களின் வேட்கை காரணம். குரோகிபீடியா ஆங்கிலம் கடந்து பிற மொழிகளுக்கு செல்லுமா? அப்படியே சென்றாலும், அதிகம் பேசப்படாத மொழிகளை கவனத்தில் கொள்ளுமா?
- எதிர் களஞ்சியம்: விக்கிபீடியாவுக்கு போட்டியே கூடாது என்றில்லை. விக்கிபீடியா மீது விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் விக்கிபீடியா மீதான விமர்சனங்களை களையும் வழி குரோகிபீடியா போன்ற முயற்சிகள் அல்ல. அதற்கான விவாதத்தை முன்னெடுக்கும் சாத்தியம் விக்கி சமூகத்திலேயே இருக்கிறது.
- இணைய பஞ்சாயத்து: விக்கிபீடியாவில் ஒரு பிரச்சனை என்றால் பேசித்தீர்க்க, இன்னும் விவாதிக்க விக்கி சமூகம் இருக்கிறது. ஜிம்மி வேல்சுக்கு அங்கு அதிகாரம் இல்லை. குரோகிபீடியாவில் ஒரு பிரச்சனை என்றால் இறுதி தீர்ப்பு எலான் மஸ்க் கைகளில் என்பது பெரும் பிழை.
- புகலிடம்: மையமில்லா தன்மை கொண்ட பயனர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இணையத்தின் இயற்கையான உள்ளடக்கத்திற்கான கடைசி புகலிடம் விக்கிபீடியா. மற்ற பெரும்பாலான சேவைகள் வர்த்தகமயமாகி இணையத்தை பாழடித்துக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவுக்கு பதிலாக வர்த்தக நோக்கிலான ஒரு திட்டத்தை ஆதரிக்க இயலாது.
- அரசியல்: விக்கிபீடியா ஆக்கங்கள் மீது சொல்லப்படும் அரசியல் விமர்சனங்களை குரோகிபீடியாவால் மட்டும் வெல்ல முடியுமா? குரோகிபீடியா இந்த அரசியலை வெல்ல முடியமா சொல்லுங்கள்!
இன்னும் பிற காரணங்களினால் நான் குரோகிபீடியாவை எதிர்க்கிறேன். ஏனெனில் இணையத்தின் ஆற்றலில் நம்பிக்கை கொண்டவன் என்ற முறையில் அந்த ஆற்றலின் வர்த்தகம் மற்றும் உள்நோக்கம் கலந்த எந்த செயல்பாட்டையும் எதிர்க்க வேண்டும் என கருதுகிறேன்.
–
விக்கிபீடியாவை உருவாக்குது என்றால் என்னத்தெரியுமா? விகாஸ்பீடியா சொல்லும் பாடம்!
இது தான் விக்கிபீடியா! – ஒரு கிரேக்க கப்பலின் விக்கி பக்கம்.