தேர்தல் தோல்விக்கு பிறகு டிவிட்டரில் அசத்திய ஓமர் அப்துல்லா

காஷ்மீர் முதல்வராக ஓமர் அப்துல்லாவின் செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும் படி இல்லாமல் அமைந்திருக்கலாம் – அதனால் தானே காஷ்மீர் மக்கள் தேர்தலில் அவரது கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றியிருக்கின்றனர். ஆனால் டிவிட்டர் பயன்பாட்டை பொறுத்துவரை ஒமர் அப்துல்லா சபாஷ் வாங்குபடி தான் செயல்பட்டிருக்கிறார். அதிலும் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு டிவிட்டரில் அவர் காட்டிய சுறுசுறுப்பும், திறந்த மனதுடன் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட விதமும் பாராட்டுக்குறியது.
ஒமர் அப்துல்லாவின் டிவிட்டர் செயல்பாடு புதிதல்ல தான். உண்மையில் இந்தியாவில் டிவிட்டர் பயன்பாட்டில் முன்னிலை வகிக்கும் அரசியல் தலைவர்களில் அவரும் ஒருவராக இருக்கிறார். ஆனால் ஆட்சியில் இருக்கும் போது டிவிட்டர் செய்வது என்பது வேறு. அப்போது சொல்லிக்கொள்ளவும் பெருமைப்பட்டுக்கொள்ளவும் நிறைய இருக்கும். இருப்பினும் தேர்தல் தோல்வியை சந்தித்த பின்பும் மக்களிடம் தொடர்பு கொள்வது தான் சவால்.
பொதுவாக மக்கள் மன்றத்தில் தோல்வியை எதிர்கொள்ளும் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் மவுனத்தை தான் வெளிப்படுத்துவார்கள். அதிர்ச்சியில் உரைந்திருக்கும் போது எங்கே கருத்து சொல்வது?
அதிலும் ஓமர் அப்துல்லா போல ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களில் அழகாக வெளிப்படுத்திக்கொள்பவர்களுக்கு தோல்விக்கு பிந்தைய காலம் சோதனையானது தான்.
ஓமர் அப்துல்லாவை பொறுத்தவரை இந்த சோதனையை ஓடி ஒளிந்து கொள்ளமால் எதிர்கொண்டிருக்கிறார். தேர்தல் தோல்விக்கு பிறகும் அவர் டிவிட்டரில் தீவிரமாகவே கருத்து பகிர்வில் ஈடுபட்டார். வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவும் அவர் தனது எண்ண ஓட்டத்தை பகிர்ந்து கொண்டார். ’ஆறு ஆண்டுகளுக்கு முன், வாக்குப்பதிவுக்கு முன்பாக பதற்றமாக இருந்தது, ஆனால் இந்த முறை ஆச்சையர்யப்படும் வகையில் அமைதியாக இருக்கிறேன். எது நடக்க வேண்டுமே நடக்கும். எது நடந்தாலும் நான் மகிச்சியாக இருப்பேன்” என்று 22 ம் தேதி குறும்பதிவிட்டிருந்தவர் மறக்காமல் அடுத்த குறும்பதிவில் கட்சி வேறுபாடின்றி எல்லா வேட்பாளர்களுக்கும் நல்வாழ்த்துக்கள் சொல்லியிருந்தார்.
வாக்கு எண்ணிக்கை துவங்கி தேர்தலின் போக்கு புலனாகத்துவங்கிய பின் சோன்வார் தொகுதியில் அவரை தோற்கடித்த அஷர்ப் மிர் -க்கு வாழ்த்து தெரிவித்து குறுமப்திவை வெளியிட்டவர் இனி அவர் தான் என் தொகுதி எம்.எல்.ஏ என்றும் கூறியிருந்தார்.
மற்றொரு தொகுதியிலும் அவர் தோல்வி முகம் என செய்தி வெளியான நிலையில், முன்கூட்டியே என் தோல்வியை கொண்டாடியவர்களுக்கு நன்றி, இந்த வெற்றி இன்னும் இனிக்கிறது” என்று குத்தலான கேலியுடன் ஒரு குறும்பதிவை வெளியிட்டார்.
மறுநாள் கவர்னரை சந்தித்து முதல்வராக ராஜினாமா கடிதம் கொடுக்க இருக்கும் செய்தியையும் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார். இதனிடையே எதிர்கட்சியா பிடிபி கட்சியை குத்திகாட்டும் வாய்ப்பையும் தவறவிட்டுவிடவில்லை.
இரண்டு முன்று குறும்பதிவுகளில் பிடிபியை நயமாக விமர்சிப்பதற்காக பயன்படுத்தியவர், ’ 6 ஆண்டுகளுக்கு முன் ஆட்சி அமைக்க ஆதரவு கோருவதற்காக கவர்னர் மாளிகைக்கு சென்றேன். இப்போது ஆட்சியை ஒப்படைக்க செலுகிறேன். வாழ்க்கை ஒரு சுற்று சுற்றி வந்திருக்கிறது” என்று கொஞ்சம் தத்துவார்த்தமாக கருத்து தெரிவித்திருந்தார்.
ஆட்சியை ஒப்படைத்த பின் அவர் முதலில் செய்தது டிவிட்டரில் தனது பயோவை மாற்றியது தான். இது வரை அவரது டிவிட்டர் பயோ காஷ்மீர் முதல்வர் என சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் ராஜினாமா செய்த கையோடு பயோவில் முன்னாள் முதல்வர் ,பேர்வா தொகுதி எம்.எல்.ஏ என மாற்றிவிட்டார். இந்த மாற்றத்தையும் ஒரு குறும்பதிவாக குறிப்பட்டிருந்தார்.
டிவிட்டர் பயோவை அப்டேட் செய்ததில் அவர் காட்டிய சுறுசுறுப்பு மெச்சத்தக்கது தான். அடுத்த குறும்பதிவில் ’ அமைதியாக இருங்கள்,

ஏனெனில் நான் திரும்பி வருவேன்” என் கொட்டை எழுத்துக்களில் நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார்.
தேர்தல் பிரச்சார காலத்திலேயே ஒமர் அப்துல்லா எல்லா விஷய்ங்கள் பற்றியும் டிவிட்டர் பக்கத்தில் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வந்திருப்பதை பார்க்கலாம்.
தேர்தல் தோல்விக்கு பிறகு ஒமர் அப்துல்லா ஒரு தேர்ந்த அரசியல்வாதி போல நடந்து கொண்டிருக்கிறார். டிவிட்டர் பயன்பாட்டில் தனது நிபுணத்துவத்தை காட்டியிருக்கிறார்.
ஆனால் இதைவிட முக்கியமான விஷயம் இனி எதிர்கட்சியில் செயல்பட இருக்கும் நிலையில் இதே சுறுசுறுப்பை மக்கள பிரச்சனையை எதிரொலிப்பதிலும் அதைவிட முக்கியமாக மக்கள் ஏன் அவரது கட்சியை நிராகரித்தனர் என்று புரிந்து கொள்ளும் வகையில மக்களின் கருத்துக்களை அறிய உரையாடலிலும் ஈடுப்பட்டார் என்றால் இன்னும் கூட நன்றாக இருக்கும். டிவிட்டரில் அவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடரும் நிலையில் மக்களுடனே தொடர்பில் இருக்க மட்டும் அல்ல மக்கள் மனதை அறியவும் டிவிட்டர் அருமையான வழி. அப்துல்லா அதை செய்வாரா?

ஒமர் அப்துல்லாவின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கம் : https://twitter.com/abdullah_omar

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *