பிரெஞ்சு பத்திரிகைக்கு ஆதரவாக டிவிட்டரில் எழுச்சி பெற்ற ஹாஷ்டேக்

பாரிசில் பிரெஞ்சு பத்திரிகை மீதான தாக்குதல் மனிதநேயம் மற்றும் கருத்து சுதந்திரம் மீதான இரட்டை தாக்குதலாக அமைந்து திகப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் டிவிட்டரில் லட்சகணக்கானோர் ஐயம் சார்லி (#JeSuisCharlie) என பொருள்படும் ஹாஷ்டேக் கொண்ட குறும்பதிவுகள் மூலம் தங்கள் உணர்வுகளையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.
பிரெஞ்சு பத்திரிகையான சார்லி ஹெப்டோ மீது தீவிரவாதிகள் நடத்தில் கொடூர தாக்குதலில் 4 கார்டூனிஸ்ட் உட்பட 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நையாண்டி மற்றும் கேலி சித்திரங்களை வெளியிடுவதற்காக அறியப்படும் இந்த பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலும் தொடர்ந்து ஏற்பட்ட உயிரிழப்பும் உலகை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியது.
இந்த தாக்குதலை உலக தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கண்டித்துள்ள நிலையில் டிவிட்டரில் லட்சக்கணக்கானோர் குறும்பதிவுகள் மூலம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த குறும்பதிவுகள் தாக்குதலில் பலியானவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் அமைந்திருப்பதுடன் கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த குறும்பதிவுகள் பெரும்பாலும் #JeSuisCharlie எனும் ஹாஷ்டேக் அடையாளத்துடன் ஒன்று பட்ட குரலாக ஓங்கி ஒலிக்கின்றன.
ஐயம் சார்லி அதாவது நான் தான் சார்லி என பொருள்படும் இந்த ஹாஷ்டேக் மூலம் உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் உட்பட லட்சக்கணக்கானோர் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் எல்லாம் இந்த ஹாஷ்டேகுடன் 2,50,000 குறும்பதிவுகளுக்கு மேல் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
இந்த குறும்பதிவுகள் அனைத்தும் கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்திருந்தன. பல்ரும் தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில் குறும்பதிவுகளுடன் கேலிச்சித்திரங்களையும் பகிர்ந்து கொண்டனர். பலரும் வாள் முனையை விட பேனா முனை வலியது எனும் கருத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
செபஸ்டின் குட்ஸ் எனும் டிவிட்டர் பயனாளி” தீவிரவாதிகள் தாக்குதலை மீறி உலகம் முழுவதும் பத்திரிகை சுதந்திரத்திற்காக எழுந்து நிற்கும் சாதாரண மக்களுக்காக … என இதயத்தில் இரத்தம் வடிகிறது” என குறும்பதிவிட்டிருந்தார்.
“பிரான்ஸ் ஒன்றுபட்டு நிற்கிறது . உலகம் உடன் நிற்கிறது. உங்கள் அன்பும் ஒற்றுமையும் அழகானது. இன்று நான் உங்களுடன் இருக்கிறேன் “ என குறிப்பிட்டிருந்தார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கார்டூனிஸ்ட் டேவிட் போப் , சுடப்பட்டு இறந்து கிடக்கும் கார்டூனிஸ்ட் அருகே முகமடி அணிந்த மனிதர் நிற்பது போல கார்டூன் வரைந்து, அவர் தான் முதலில் வரைந்தார், என கூறுவது போல வாசகத்தை இடம்பெற வைத்திருந்த கார்டூனை பகிர்ந்து கொண்டார்.
ஜே மெக்கினான் எனும் டிவிட்டர் பயனாளி “ இன்று இரவு மக்கள் கூட்டம் ஐயம் சார்லி மூலம் பிரான்ஸ் கூடுதலான பத்திரிகை சுந்ததிரத்திற்கு ஆதரவாக நிற்கும் நம்பிக்கையை அளிக்கிறது” என குறிப்பிட்டிருந்தார்.
இப்படி லட்சக்கணக்கானோர் ஐயம் சார்லி எனும் ஹாஷ்டேகுடன் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் டிவிட்டரில் இந்த ஹாஷ்டேக் மிகவும் பிரபலமாகி இருக்கிறது. பத்திரிகை சுதந்திரத்துக்கு ஆதரவான உலகின் ஒன்றுபட்ட குரலாக இந்த ஹாஷ்டேக் தாங்கிய குறும்பதிவுகள் அமைந்துள்ளன.
இதனிடையே பிரபல செய்தி நிறுவனமான ஏஎப்பி ,அதன் புகைப்பட கலைஞர்கள் சார்லி பத்திரிகைக்கு ஆதரவு தெரிவிக்கும் அட்டையை ஏந்தியபடி காட்சி தரும் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளது.
பிரெஞ்சு அதிபர் ஹாலாண்டேவும் இந்த தாக்குதலுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் குறும்பதிவை வெளியிட்டுள்ளார்.” எந்த காட்டுமிராண்டித்தனமான செயலாலும் பத்திரிகை சுதந்திரத்தை ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் ஒன்றுபட்ட தேசம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதே போல பிரான்சில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் டிவிட்டர் பக்கம் தனது அறிமுக பக்கத்தை சார்லி பத்திரிகைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாற்றுக்கொண்டுள்ளது. இதன் அறிமுக பக்கத்தில் ஐயம் சார்லி என்ற பதம் இடம்பெற்றுள்ளது. ” தவறாக வெளியாகும் செய்திகளை மீறி பாரிசில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட எந்த திட்டமும் இல்லை என்றும் குறும்பதிவு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்லி ஹெப்டோ பத்திரிகையின் இணையதளம் சிறிது நேரம் முடங்கிய நிலையில் கருப்பு வண்ண முகப்பு பக்கத்துடன் இணையத்திற்கு திரும்பியது. அதன் நடுவே வெள்ளை எழுத்துக்களில் பத்திரிகை பெயர் மின்னியது.
இதன் நடுவே ஐயம் சார்லி ஹாஷ்டேகுடன் பத்திரிகை சுந்ததிரத்துக்கான ஆதரவும் பெருகி கொண்டிருக்கிறது.
ஐயம் சார்லி குறும்பதிவுகளை பின் தொடர: #JeSuisCharlie

——

விக்டன்.காமில் எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *