பார்வையற்றோருக்கு விழியாக இருக்க உதவும் செயலி

ரு சின்ன உதவி செய்வதில் திருப்தி அடையும் குணமும் மனமும் உள்ளவர்கள் உற்சாகமாக உதவிக்கரம் நீட்டி உலகம் முழுவதும் உள்ள பார்வையற்றவர்களுக்கு விழியாக இருந்து வழி காட்டக்கூடிய செயலி அறிமுகமாகி இருக்கிறது. இந்த செயலியின் மனிதநேய தன்மைக்கு ஏற்ப அறிமுகமான சில நாட்களிலேயே இந்த செயலி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஈர்த்திருக்கிறது.

பி மை ஐஸ் ( Be My Eyes) எனும் அந்த செயலி ஐபோனில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சில நிமிடங்களை மற்றவர்களுக்காக ஒதுக்கி சின்ன உதவிகளை செய்யத்தயாராக இருப்பவர்களை , பார்வையற்றவர்களுடன் இணைப்பது இதன் நோக்கமாக இருக்கிறது.இப்படி முன்பின் தெரியாதவர்கள் செய்யும் சின்ன உதவிகள் பார்வையற்றோருக்கு மகத்தான உதவியாக அமைவதை இது சாத்தியமாக்க விரும்புகிறது.

சுருக்கமாக சொன்னால், பார்வையற்றவர்களுக்கு மற்றவர்கள் விழியாக இருந்து வழி காட்ட வைக்கிறது இந்த செயலி! எப்படி? பார்ப்போம்.

பார்வையற்றவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவ தயாராக இருப்பவர்கள் என இரு தரப்பினரும் இந்த செயலியை தங்கள் போனில் தரவிறக்கம் செய்து கொண்டு, உதவுபவர்களாக அல்லது உதவி கோருபவர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு, பார்வையற்ற உறுப்பினர்களுக்கு மற்றவர் உதவி தேவைப்படும் நேரங்களில் இந்த செயலி மூலம் அவர்கள் உதவி கோரலாம்.

பார்வையற்றவர்கள் மற்றும் பார்வை குறைபாடு கொண்டவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் தங்கள் பணியை மேற்கொள்ளக்கூடியவர்களாக இருந்தாலும் சில நேரங்களில் அவர்களும் மற்றவர்களின் விழிப்பார்வை தேவைப்படலாம். உதாரணத்திற்கு பால் பாக்கெட் அல்லது உணவு பொருளின் மீதான காலாவதி தேதியை தெரிந்து கொள்ளும் தேவை ஏற்படலாம். அல்லது கையில் வைத்திருக்கும் பழரசம் மாம்பழமா? ஆப்பிளா என அறிய விரும்பலாம். அல்லது தெரு முனையில் இருக்கும் அறிவிப்பு பலகையின் வாசகத்தை படித்து பார்க்கும் தேவை ஏற்படலாம்.

இது போன்ற நேரங்களில் அவர்கள் அருகே இருப்பவரின் உதவியை நாட வேண்டியிருக்கும். அருகே யாரும் இல்லாவிட்டால் அல்லது அருகே இருப்பவர்கள் செவி சாய்க்க மறுத்தால் காத்திருக்க வேண்டும். இந்த இடத்தில் தான் பி மை ஐஸ் செயலி உதவிக்கு வருகிறது. இத்தகைய நேரங்களில் பார்வையற்றவர்கள் செயலியை ஆன் செய்து உதவி தேவை என கோரிக்கை வைத்தால் போதும். அந்த கோரிக்கை பங்கேற்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதை பார்த்தததும் உதவ தயாராக இருப்பவர்கள் சம்மதம் தெரிவித்தால் உடனே ஐபோனில் இருக்கும் வீடியோ உரையாடல் வசதி மூலம் இருவரும் இணைக்கப்படுவார்கள். அதன் பிறகு மறு முனையில் இருப்பவர் பார்வையற்றவர் தனது போனில் காட்டும் காட்சியை பார்த்து அவரது கேள்விகளுக்கு பதில் அளித்து வழிகாட்டலாம்.

உதவ தயாராக இருப்பவர்களுக்கு இது சாதாரண செயலாக இருந்தாலும் உதவி கோருபவருக்கு இது சரியான நேரத்தில் கிடைத்த வழிகாட்டுதலாக இருக்கும்.

இந்த கைகொடுத்தலை உலகின் எந்த மூளையில் இருப்பவரும் செய்யக்கூடிய வகையில் டிஜிட்டல் உறவுப்பாலம் அமைக்கும் வகையில் பி மை ஐஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

டென்மார்க் நாட்டை சேர்ந்த தெல்லி கிறிஸ்டன் என்பவர் தனது நிறுவனம் மூலம் இந்த செயலியை வடிவமைத்திருக்கிறார். இவரும் பார்வை குறைபாடு கொண்டவர் தான். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து இதை உருவாக்கி இருக்கிறார்.

இந்த மனிதநேய செயலியை இதுவரை 40 ஆயிரம் பேருக்கு மேல் தரவிறக்கம் செய்து ப்ங்கேற்பாளராக பதிவு செய்து கொண்டுள்ளனர். 1500 க்கும் மேற்பட்ட பார்வையற்றவர்களும் பயனாளிகளாக பதிவு செய்து கொண்டுள்ளனர். இதுவரை 3,000 உதவிகளுக்கு மேல் நிகழ்ந்துள்ளன.

உதவுபவர்கள் மற்றும் பயனாளிகள் இருவருமே மற்றவர்களை மதிப்பீடு செய்யலாம்.ஏதேனும் தவறான பயன்பாடு தலைதூக்கினால் அதை தவிர்க்க இந்த மதிப்பீடு உதவும் என கருதப்படுகிறது.

அடுத்ததாக ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான செயலி வடிவமும் உருவாக்கப்பட்டு வருகிறது.

பி மை ஐஸ் செயலியின் இணைய பக்கம்:http://www.bemyeyes.org/

செயலிகள் சிறப்பு பற்றிய முந்தைய பதிவுகள்;

அகதிகள் நிலை உணர்த்தும் செல்போன் செயலி!http://cybersimman.com/2012/06/27/app/

பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும் அற்புதமான செயலி; http://cybersimman.com/2010/12/20/apps-2/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *